Saturday, June 1, 2024

 

மனிதனும் மதமும்

Jagannathan

Man crated Religions                         

 Religions created Gods

Man, Religion and god divided men and Humanity Heart and land

Man became Hindu,Muslim ,Christian and many more

We became unknown to each other

The world bacame lunatic

Thousands of human hearts became weaponaries

God is dying in the streets

Satan is laughing

Where is Truth Beauty,Freedom,Blood relations and Love

Where is the avathar that conce in a yuga

Man is dying in the streets

Religion is Laughing

 

மனிதன் மதத்தைப் படைத்தான் 

மதங்கள் இறைவனை படைத்தன

மனிதனும், மதங்களும் இறைவனும்

மனிதனையும் மனிதத்தையும் பிரித்தன

மண்ணையும் மனதையும் பிரித்தன

 

மனிதன் இந்து முஸ்லிம் க்ருஸ்துவனானான்

மனிதன் தமக்குள் அன்னியனானான் இந்த

மண்ணே மதம் பிடித்து அலைகிறது 

மனிதமனம் மாய்க்கும் ஆயுத சாலையானது

 

இறைவன் மண்ணில் வீழ்ந்து கிடக்கிறான்

அசுரன் எள்ளி நகையாடுகிறான்

எங்கே போனது அழியாத சத்தியம்

எங்கே ஒழிந்தது உண்மையான சுதந்திரம்

எங்கே ஓடின ரத்த பந்தங்கள்

எங்கே மறைந்தது அன்பும் காதலும்

 

மனிதம் வீதியில் மரணிக்கின்றது

மதம் மமதையோடு நகைக்கின்றது                                            

மதமான பேயையை விரட்டும் அவதார

மஹாசக்தி என்றுதோன்றுவாரோ


சிவதாஸன்  ஜகன்நாதன்

No comments:

Post a Comment