ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 29
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளி, ஜூலை, 5, 2024
அனைவருக்கும் வணக்கம்
இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் 65மற்றும் 66 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம். நாம் இப்பொழுது அம்பாளின் பஞ்ச ப்ரம்ம
ஸ்வரூபங்களைப் பார்த்துக் கொண்டிருக் கின்றோம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய இரண்டு ஸ்லோகங்களிலும்
இந்த ப்ரபஞ்சம் எனும் அண்டத்தை எப்படி அம்பாள் ஆட்சி செய்கிறாள் என்பதையும் ,அம்பாளே
இந்த அண்டம் முழுவதும் எவ்வாறு வியாபித்துள்ளாள் என்பதையும் பார்ப்போம்.
பானுமண்டல மத்யஸ்தா, பைரவீ, பகமாலினீ |
பத்மாஸனா, பகவதீ, பத்மனாப ஸஹோதரீ || 65 ||
பானு |
சூரியன் |
மண்டல |
சுற்றிவரும் கோளப் பாதை |
மத்ய |
மத்தியில்,நடுவில் |
ஸ்தா |
குடிகொண்டிருப்பவள் |
பைரவி |
சிவ வடிவமான பைரவரின் துணைவி |
பக |
சுபீக்ஷம்,மேன்மை,அழகு,அன்பு,புகழ்,உயர்வு
என அறும்பெரும் பண்புகள் |
மாலா |
மாலை |
மாலினீ |
மாலையாக அணிந்திருப்பவள் |
பத்ம |
தாமரை |
ஆஸனா |
இருக்கையாக் வீற்றிருப்பவள் |
பகவதீ |
இறைவீ,துர்கா தேவி |
பத்மநாப |
மஹாவிஷ்ணுவின் |
சகோதரீ |
தங்கையானவள் |
|
|
அம்பாள் சூரியய மண்டல்த்தின் நடுவில் அமர்ந்திருக் கின்றாள்.சூரியனே சக்தியின்
பிறப்பிடம்.அம்பாள் அதன் நடுவிலிருந்து ப்ரபஞ்ச சக்தியாக விளங்குகிறாள்.சிவ வடிவங்களில்
ஒன்றான பைரவரின் துணையான பைரவியாக விளங்குகிறாள்.உன்னதமான சுபீக்ஷம்,மேன்மை,அழகு, அன்பு,புகழ்,உயர்வு
என அறும்பெரும் பண்புகளை மாலையாக அணிந்து உள்ளாள்.பத்மாசனத்தில் தாமரையின் மீது வீற்றிருக்கின்றாள்.துர்கா
தேவி என்ற இறைவியாக பகவதியாக் இருக்கின்றாள்.பத்ம நாபன் என்ற மஹாவிஷ்ணுவின் தங்கையாய்
உள்ளாள்.
உன்மேஷ னிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளிஃ |
ஸஹஸ்ரஸீர்ஷவதனா, ஸஹஸ்ராக்ஷீ, ஸஹஸ்ரபாத் || 66 ||
.
உன்மேஷ |
திறப்பு,திறத்தல் |
நிமிஷ |
கண் சிமிட்டும் நொடிப்பொழுது |
உத்பன்ன |
தோன்றச்செய்பவள் |
விபன்ன |
மறைத்தல்,அழித்தல் |
புவன |
புவனம் ,அண்டசராஸரம் |
ஆவலீ |
செய்பவள் |
சஹஸ்ர |
ஆயிரம் ஆயிரமாகக் கணாக்கற்ற |
ஷீர்ஷ |
சிரங்கள்,தலை |
வதனா |
முகங்கள் உடையவள் |
சஹஸ்ர |
ஆயிரம் ஆயிரமாகக் கணாக்கற்ற |
அக்க்ஷீ |
கண்களை உடையவள் |
சஹஸ்ர |
ஆயிரம் ஆயிரமாகக் கணாக்கற்ற |
பாத் |
பாதங்கள்,கால்களை உடையவள் |
அண்டசராஸரமாகிய இந்த புவனத்தை கண் சிமிட்டும் நொடிப் பொழுதில் தோன்றவும்
மறையவும் செய்பவள்.ஆயிரமாயிரம் எண்ணற்ற சிரங்களைக் கொண்டவள்,ஆயிரம் அழகிய முகங்களை
உடையவள்.ஆயிரம் கண்களைக் கொண்டவள் ஆயிரம் பாதார விந்தங்களை கொண்டவள். அன்பாளின் பரப்ரம்ம ஸ்வரூபம் எங்குமாகி
பரந்து விரிந்திருக்கின்றது எந்த நாமங்கள் விளக்குகின்றனே, அம்பாளே அண்டசராஸரமாக பரந்திருக்கிறாள்
.அவளே சிரங்களையும்,முகங்களையும் பாதங்களையும் உடையவளாவி வியாபித்துள்ளாள்.
இந்த விளக்கங்களை voice ஆகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
அம்பாளின் பேர ருளுக்கு பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
வெள்ளி, ஜூலை, 5, 2024
No comments:
Post a Comment