Friday, July 19, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 42

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 வெள்ளி ஜூலை,  19 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் பீடங்களும் அங்க தேவதைகளும் பற்றிய பதிவுகளைப் பார்த்து முடித்து விட்டோம்.இன்று முதல் நாம் அடுத்த பகுதியான யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்க்கப் போகின்றோம்.

இந்த பிரிவில் வரும் நாமாவளிகள் குண்டலினி சக்கரத்தில் ப்ரதிபலிக்கும் யோகினி தேவதைகளை விவரிக்கும் நாமங்களாகும்.முதலில் விஷுக்தி சக்கரத்தி வழிநடத்தும் டாகினீஸ்வரி என்ற யோகினியைத் தொடர்ந்து ஒவ்வொரு சக்கரத்தை ஆளும் தேவதைகளைத் துதிக்கும் நாமங்களைப் பார்க்கப் போகிறோம்.

எனவே இன்று 98 மற்றும் 99 வது ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.இவைகளில் விஷுக்தி சக்கரத்தில் டாகினீஷ்வரியைப் பற்றி பார்ப்போம்

விஸுத்தி சக்ரனிலயா,‌உரக்தவர்ணா, த்ரிலோசனா |
கட்வாம்காதி ப்ரஹரணா, வதனைக ஸமன்விதா || 98 ||

விஷுக்தி சக்ர

ஐந்தாம் குண்டலினி சக்தி கேந்திரம் தொண்டையில் நீல நிறமான் சக்திகேந்திரம்

நிலையா

நிலைகொண்டிருப்பவள்

ஆரக்த

இளம் சிவப்பு சந்தனம்

வர்ணா

நிறம் கொண்டவள்

த்ரி

மூன்று

லோசனா

கண்ணுடையவள்

கட்வாங்க

மண்டை ஓட்டுடன் கூடிய தண்டாயுதம்

ஆதி

இதைப் போன்ற ஆயுதங்களை

ப்ரஹரணா

ஏந்தியிருப்பவள்

வதனைக

ஏகமுகம்,ஒருமுகம்

சமன்விதா

கொண்டிருப்பவள்

 

 

 

குண்டலிணீ சக்கரங்கள் ஆறும்,உச்சத்தில் உள்ள சஹ்ஸ்ராரமும் சேர்த்து ஏழாகும்.அவைகளின் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு யோகினி தேவி குடிகொண்டுள்ளார். அந்த சக்கரங்கள் மூலாதாரம்,ஸ்வாதிஷ்டாணம்,மனிபூரகம்,அனாகதம்,விஷுக்தி மற்றும் ஆக்ஞ்யை ஆகும்.ஏழாவதாக உச்சியில் உள்லது ஸஹஸ்ராரமாகும்.அந்த ஐந்தாவதான விஷுக்தி சக்கரம் தொண்டையில் நீலநிறத்தில் அம்பாள் நிலை கொண்டுள்ளாள்.அவள் செஞ்சாந்து வண்னமுடையவள் மூன்று கண்களை உடையவள்.மண்டை ஓட்டினோடு கூடிய தண்டாயுதம் மற்றும் அதே போன்ற பல ஆயுதங்களை ஏந்தியுள்ளவள்.அம்பாள் ஒரு முகம் உடையவளாகத்திகழ்கின்றாள்.

   பாயஸான்னப்ரியா, த்வக்‍ஸ்தா, ஸுலோக பயம்கரீ |
அம்றுதாதி மஹாக்தி ஸம்வ்றுதா, டாகினீஸ்வரீ || 99 ||
   

பாயாசன்ன

பாயாஸம் என்ற இனிப்பை/ இனிப்பில்

ப்ரியா

விருப்பம் கொண்டவள்

த்வக்

தோல் .சரும்ம

ஸ்தா

நிலை கொண்டிருப்பவள்.சருமத்தை தொடு உணர்வை ஆக்ரமித்து வழி நடத்துபவள்

பஷு

மிருகத்தை ஒத்த மிருக குணம்

லோக

உலகம்,மனிதர்கள்,மனித குலம்

பயங்கரீ

பயங்கரமான வளாக இருப்பவள்

அம்ருதாதி

அம்ருதா கரிஷிணி முதலிய

மஹா சக்தி

மஹாசக்திளால்

சம்வ்ருதா

சூழப்பட்டு அவர்களை வழி நடத்துபவள்

டாகினீஷ்வரீ

விஷுக்தி சக்ரத்தின் தேவைதையான டாகினீஷ்வரி

 

 

   பாயாஸம் என்னும் பாலில் வெந்த அரிசி இனிப்பான சோற்றினை விரும்புபவள். சருமத்தையும் தொடு உணர்வையும் ஆக்ரமித்து வழி நடத்துபவள்.மிருகத்தை ஒத்த அசுர குணம்ங்கொண்ட மனிதர்கள் குலம் மற்றும் உலகினிர்க்கு பயங்கரமானவள்.இகலோக சுகங்களில் மூழ்கி அஞ்ஞ்சானத்தில் இருப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் மருட்சி அளிப்பவள்.மஹா சக்திகளான அம்ருதா,கர்ஷிணி,ஊர்த்வா,இந்திராணி,ஈஸானி,கேசி முதலானவர்களால் சூழப்பட்டு அவர்களை வழி நடத்தும் யோகியானவள்.இப்படிப்பட்ட அம்பாள் விஷுக்தி சக்கரத்தின் தேவதையான டாகினீஸ்வரியாக விளங்குகிறாள்.                                                                                                                       

இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வெள்ளி ஜூலை,  19 , 2024

 

No comments:

Post a Comment