ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 45
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள் ஜூலை, 22 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்
யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்த்துக்கொண்டிடுக்கின்றோம்.
இந்த பிரிவில் வரும் நாமாவளிகள்
குண்டலிணீ சக்கரத்தில் ப்ரதிபலிக்கும் யோகினி தேவதைகளை விவரிக்கும் நாமங்களாகும்.முதலில் விஷுக்தி என்ற ஐந்தாவது சக்கரத்தில்
வழிநடத்தும் டாகினீஸ்வரி என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்.
தொடர்ந்து நாலாவது குண்டலிணீ சக்கரமான அனாஹத த்தில் நிலைகொண்டுள்ள யோகினி சக்தியான ராகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்டோம் .நேற்று மூன்றாவது
குண்டலிணீ ஸ்தானமான மணிபூரத்தில் நிலைகொண்டிருக்கும் லாகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்த்தோம்
இன்றைய 104 மற்றும்105 வது ஆன இரண்டு ஸ்லோகங்களிலும் இர்ண்டாவது குண்டலிணீ
சக்கரமான ஸ்வாதிஷ்டானத்தில் உறைந்திருக்கும் காகினியம்பா என்ற யோகினியைப் பற்றிப் பார்ப்போம்.பார்ப்போம்.இந்த
ஸ்லோகங்கள் காகினி தேவியின் புறத்தோற்றம் மற்றும் இயல்புகளை விவரிக்கின்றன்.
ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மனோஹரா |
ஸூலாத்யாயுத ஸம்பன்னா, பீதவர்ணா,உதிகர்விதா || 104 ||
ஸ்வாதிஷ்டான |
இரண்டாம்
சக்திகேந்திரம்,ஆரஞ்சு வண்னத்தில் |
அம்புஜ |
தாமரை,ஆறு இதழ்கள்
கொண்டது |
கதா |
தொடர்புகொண்டு
நிலைத்திருப்பவள் |
சதுர் |
நான்கு |
வக்த்ர |
முகங்களை உடையவள் |
மனோஹரா |
மனோஹரமான வஸீகரமும்
ஈர்ப்புமுடையவள் |
ஷூல |
ஸூலாயுதம் |
ஆதி |
முதலான |
ஆயுத |
ஆயுதங்கள் |
ஸம்பன்னா |
கைக்கொண்டிருப்பவள்
பெற்றிருப்பவள் |
பீத |
மஞ்சள்,பொன் |
வ்ர்ணா |
நிறத்தை உடையவள் |
அதி |
மிகுந்த |
கர்விதா |
கர்வம் கொண்டவள் |
குண்டலிணீயின் ஆறு பீடங்களில்
இரண்டவது பீடமானது ஸ்வாதிடானமாகும்.இந்த பீட யோகிணியானவள் சந்தன வண்ணத்தில் ஆறு
இதழ்களுடனான தாமரையில் தொடர்புகொண்டு வீற்றிருக்கின்றாள்.இந்த அம்பாள் நான்கு
முகங்களை உடயவளாக இருக்கின்றாள்.அந்த முகங்கள் மிகுந்த மனோஹரமும் வனப்பும்
வஸீகரும் கொண்டு விளங்குகின்றன. த்ரிசூலம் போண்ற சூலாயுதமான ஆயுதங்களை கைக்கொண்டிருப்பவள். பொன்னிறமான்
மஞ்சள் வண்னமுடையவள்.அதிகமான் கர்வம் மிகுந்தள்
மேதோனிஷ்டா, மதுப்ரீதா, பம்தின்யாதி ஸமன்விதா |
தத்யன்னாஸக்த ஹ்றுதயா, டாகினீ ரூபதாரிணீ || 105 ||
மேதா |
உடல்
கொழுப்பு |
நிஷ்டா |
நிலைத்திருத்தல்
,ஆளுதல் |
மது |
தேன் |
ப்ரியா |
ப்ரியமாக
விரும்பி ஏற்பவள் |
பந்தினி |
ஸ்வாதிஷ்டான
யோகினியை சூழ்ந்துள்ள சக்தி தேவதையருள் ஒருவர் |
ஆதி |
போன்ற,
முதலாய |
ஸமன்விதா |
தொடர்புடையவள் |
தத்ய |
தயிர் |
அன்ன |
சாதம்,தயிர்
சாதம் |
ஸக்த |
ப்ரியமான |
ஹ்ருதயா |
உள்ளத்தில்
விரும்பி ஏற்பவள் |
காகினீ |
காகினி
என்ற யோகிணி |
ரூப |
ரூபம்
,உருவம் |
தாரிணீ |
தரித்திருப்பவள்,
கொண்டவள் |
அம்பாள் உடலின் கொழுப்புபகுதியில் நிலைத்திருந்து
நிலைகொண்டிருப்பவள்.இனிய மதுரமான் தேனில் அதிகமான் விருப்பமுடையவள். ஸ்வாதிஷ்டான
யோகினியை சூழ்ந்துள்ள பந்தினி தேவியைப் போன்ற ஆறு சக்தி தேவியரால் சூழப்
பெற்றிருப்பவள்.தத்யன்னம் என்னும் தயிர் சாதத்தின் மீது அதிகம் பிரியம் கொண்டு
உள்ளத்தில் விரும்பி ஏற்பவள்.இந்த அம்பாள் காகினி என்ற ரூபம் கொண்டு
விளங்குகிறாள்.
இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு
உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
இன்று இந்த ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன்
ஜகன்நாதன்
திங்கள் ஜூலை, 22 , 2024
No comments:
Post a Comment