ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 43
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி ஜூலை,  20 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்
யோகினி ந்யாஸம் என்ற பகுதியை பார்த்டுக்கொண்டிடுக்கின்றோம்.
இந்த பிரிவில் வரும் நாமாவளிகள் குண்டலின்
சக்கரத்திப் ப்ரதிபலிக்கும் யோகினி தேவதைகளை விவரிக்குனம் நாமங்களாகும்.முதலில் விஷுக்தி சக்கரத்தி வழிநடத்தும்
டாகினீஸ்வரி என்ற யோகினியை நேற்று பார்த்தோம். தொடர்ந்து இன்று நாலாவது குண்டலிணீ
சகரமான அனாஹத த்தில் நிலைகொண்டுள்ல யோகினி சக்தியான ராகிண்யம்பா என்ற யோகினியைப் பற்றி
இன்றைய இரண்டு ஸ்லோகங்களிலும் பார்ப்போம்.
எனவே இன்று 100 மற்றும் 101 வது
ஸ்லோகங்களைப் பார்க் கப்போகின்றோம்.இவைகளில் அனாஹத சக்கரத்தில் ராகிணீஷ்வரியைப் பற்றி
பார்ப்போம்
அனாஹதாப்ஜ னிலயா, ஸ்யாமாபா, வதனத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலா,உக்ஷமாலாதிதரா, ருதிர ஸம்ஸ்திதா || 100 ||
| அனாஹத | குண்டலினின் நான்காவது சகாரமான
  இதயப் பகுதியில் உள்ள அனாஹத சக்கரம் | 
| அப்ஜ | தாமரை | 
| நிலையா | நிலைத்திருப்பவள் | 
| ஷ்யாமாபா | காளி மற்றும் க்ருஷ்ணனின்
  கருப்பு மற்றும் கரும் பச்சை வண்னம் கொண்டவள் | 
| த்வயா | இரட்டை இரண்டு | 
| வதன | முகங்களைக் கொண்டவள். | 
| தம்ஷ்ட்ரா | பெரிய பற்கள்,தந்தங்கள்,ஆர்ற்றல்
  மிக்க கோரைப் பற்கள் | 
| உஜ்வலா | மின்னுதல் ,ஜ்வலித்தல் | 
| அக்ஷமாலா | ஜப மணிகளாலான மாலை | 
| ஆதி | போன்றவற்றைக்  | 
| தரா | கொண்டிருப்பவள் | 
| ருதிர | உதிரம்,ரத்தம் | 
| ஸம்ஸ்திதா | உறைந்திருந்து நிலைகொண்டிருப்பவள் | 
குண்டலியின் ஸ்தானங்களில்
நாலாவது ஸ்தானம் அனாஹதம். இது நமது இதயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.இதிலே நிலைத்திருக்கும்
யோகினியானவள் ராகிண்யம்பா.இது பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல் ஆமைந்துள்ளது.அம்பாள்
காளி மற்றும் க்ருஷ்ணனைப்போல கருப்பும் கரும்பச்சையும் கலந்த நிறத்தில் காணப் படுகின்றாள்.அம்பாளுக்கு
ஆயிரம் முகங்கள் இருந்தாலு இந்த நிலையில் இரண்டு முகங்களை உடையவளாக விளங்குகிறாள்.பெரிய
ஆற்றல் மிக்க கோரைப் பற்களை கொண்டவளாக விளங்குகிறாள்.கோரைப் பற்கள் அதுகொண்ட மிருகங்களின்
ஆற்றலை விளக்குகின்றது.அம்பாளின் பற்கள் தந்தம்போல ஜ்வலிக்கின்றன.ஜபமணிகளலான் மாலையை
கையிலே கொண்டுள்ளாள்.அக்ஷமாலை என்பது ஜபமணிகள் மற்றுமல்லாது பன்னிரெண்டு அக்ஷரங்கள்
என்றும் கருதப்ப டுகின்றது.அம்பாள் ருத்ரத்தின் வடிவமாக உறைந்த உதிரத்தில் உறைகின்றாள்.
காளராத்ர்யாதி ஸக்த்யோகவ்றுதா, ஸ்னிக்தௌதனப்ரியா |
மஹாவீரேம்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101 ||
 
| காலராத்ரி | அனாஹத சக்கரத்தில்
  சூழ்ந்துள்ள பன்னிரெண்டு சக்திகளுள் ஒருவர் | 
| ஆதி | போன்ற, முதலான | 
| ஷக்தி | ஷக்திகளின்
  பன்னிரெண்டு சக்திகள் கொண்ட | 
| யுக | குழுக்கள் | 
| வ்றுதா | சூழப்பட்டவள் | 
| ஸ்னிக்த | கொழுப்பு
  நிறைந்த, நெய் போன்ற | 
| ஓதன | அரிசி சோறு | 
| ஔதன | பால் மடியிலிருந்து
  வரும் நெய் வெண்னை  | 
| ப்ரியா  | அன்னத்தை
  விரும்புபவள் | 
| மஹாவீர | பெரிய வீரர்கள்
   | 
| இந்த்ர | ப்ரதானமான,முதன்மையான | 
| வரதா | வரங்களை வாரி
  வழங்குபவள் | 
| ராகிண்யம்பா | அனாஹத சக்கரத்தில்
  வீற்றி ருக்கும் ராகிணிஎன்ற யோகினி தேவி | 
| ஸ்வரூபிணீ | வடிவமானவள் | 
அம்பாள் அனாஹத சக்கரத்தில் பன்னிரெண்டு சக்தி தேவதைகளால் சூழப்பட்டுள்ளாள்.காலராத்ரி
என்பரும் அந்த சக்திகளில் ஒருவராவார்.ஒவ்வொரு யோஹினியும் தன்னுடைய ஸ்தானத்தில் பல
சக்தி தேவதை களால் சூழப் பெற்றுள்ளனர்.ராகிணி தேவி பசுவின் பால் மடியிலிருந்து வரும்
பால் வெண்னை நெய் போன்ற கொழுப்பு நிறைந்த அரிசி சோறான பொங்கலை விரும்புபவள். இந்திரனை
ஒத்த ப்ரதானமான பெரும் வீர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவள். இந்த அனாஹத சக்கரத்தில்
ராஹினீ என்ற யோகின்ர் வடிவில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்றாள்.
இந்த பதிவுகளை voice ஆகவு தினம் தந்துவருகிறேன் அதையும் கேட்டு
உணர்ந்து மகிழ்ந்து அம்பாளின் பேறருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்
இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:                                                               
சிவதாஸன்
ஜகன்நாதன்                                                          
சனி ஜூலை,  20 , 2024
 
No comments:
Post a Comment