Thursday, August 1, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 54

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்கிழமை ஜூலை, 31, , 2024

அனைவருக்கும் வணக்கம்

 நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 127 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 644 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம்.இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,128, 129 மற்றும் 130 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 644 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 645 முதல் 661 வரையிலான 17 நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

ஸர்வவேதாம்த ஸம்வேத்யா, ஸத்யானம்த ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்சிதா, லீலாக்ல்ருப்த ப்ரஹ்மாம்டமம்டலா || 128 ||

சர்வ

அனைத்து

வேதாந்த

வேதாந்தங்களான உபனிஷத் போன்றவைகள்

ஸம்வேத்யா

புரிந்துணரப்படுபவள்

சத்ய

ஊன்மையான,சத்தியமான,மெய்ப்பொருளான

ஆனந்த

ஆனந்தத்தின்

ஸ்வரூபிணீ

வடிவமானவள்

லோபமுத்ரா

சாக்த வழிபாடு செய்யும் அகஸ்தியரின் மனைவி

அர்ச்சிதா

அர்ச்சித்து வணங்கிப் போற்றப் படுபவள்

லீலா

லீலை செய்யும் விளையாட்டாக

ப்ரம்மாண்ட

மிகப் பெரிய ப்ரம்மாண்டமான

மண்டலா

மண்டலமான ப்ர்பஞ்சம் முழுவதையும்

க்ல்ருப்த

படைத்தல் ,உருவாக்குதல்

 

அம்பாள் அனைத்து வேதங்களின் சாரமான வேதாந்தங்கள் எனப்படும் உபனிஷத்துக்கள்,புராணங்கள் மற்றும் இதிகாஸங்கள் மூலமாக உணரப் படக்கூடியவள்.மெய்ப்பொருளான        சத்யானந்த த்தின் வடிவமானவள்.அகஸ்திய மாமுனிவரின் மனைவியான லோபமுத்ரையினால் சாக்த வழிபாட்டு முறையில் அர்ச்சித்து வழிபடப்படுபவள்.இந்த ப்ரம்மாண்டமான ப்ரபஞ்சம் முழுவதையும் ஒரு சிறு பிள்ளை விளையாட்டு போல் படைத்து ஊவாக்கியவள். அம்பாளுக்கு அனைத்துமே விளையாட்டுதான்


அத்றுஸ்யா, த்றுஸ்யரஹிதா, விஜ்ஞாத்ரீ, வேத்யவர்ஜிதா |
யோகினீ, யோகதா, யோக்யா, யோகானம்தா, யுகம்தரா || 129 ||

அத்ருஷ்ய

காணப் படாத காட்சிக்கு அப்பார்ப் பட்ட மறைவான பொருளானவள்

த்ருஷ்ய

காணப் படுபவைகளால் காண்பதற்கு

ரஹிதா

முடியாதிருப்பவள்,பார்வைக்கு புலப்படாதவள்

 

அனைத்தும் தானேயாகி அத்வைதமாயிருப்பவள்

விஜ்ஞாத்ரீ

சர்வ ஞானியாய் சகலமும் அறிந்தவள்

வேத்ய

அறிவு, அறியப்படுதல்

வர்ஜிதா

விடுபட்டவள்.அறிவு மற்றும் அறியப் படும் பொருள்களை கடந்தவள்

யோகினி

இறைவனுக்கும் ஜீவனுக்குமான ஐக்கியத்தின் உருவமான யோக கலையில் இருப்பவள்

யோக

யோகத்தை பற்றிய அறிவு,அனுபவம் ஆற்றல்

தா

வழங்குபவள்

யோக்யதா

யோகத்தினால் அடையக்கூடிய தகுதியருள்பவள்

யோகானந்தா

யோகத்தினால் அடையக்கூடிய பேரானந்தமானவள்

யுகந்

எண்னற்ற யுகங்களை,சஹாப்தங்களை

தரா

தரித்திருந்து ஆளுபவள்

 

சாதாரண கண்களுக்கு புலப்படாத காக்ஷிக்கு அப்பார்ப்பட்ட மறை பொருளாக விளங்குபவள்.ஐம்புலங்களுக்குள் அகபடாமல் கண்களால் காணப்படும் காக்ஷிக்கு அப்பார்பட்டவள்.சர்வ ஞானியாய் சகலமும் அறிந்தவள்.அறிவு மற்றும் அறியப்படும் பொருள்களைக் கடந்தவள். அறிதல் மற்றும் அறியப்படாதிருத்தல் போன்றவைகளைக் கடந்து நிற்பவள்.ஜீவன்களுக்கும் இறைவனுக்கும் ஐக்கியமான நிலையே யோகமாகும்.யோகினி யாகி சதாசிவருடன் ஐக்கியத்தில் இருப்பவள்.யோகத்தைப் பற்றிய அறிவு அனுபவம் மற்றும் ஆற்றலை வழங்குபவள்.யோகத்தினால் அடையக்கூடிய தகுதியை உடையவள்.யோகத்தினால் அடையக்கூடிய பேரானந்த வடிவானவள்.எண்ணற்ற யுகங்களையும் ஸஹாப்தங்களையும் தரித்திருந்து அவற்றை ஆளுபவள்.


இச்சாஸக்தி ஜ்ஞானக்தி க்ரியாக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வதாரா, ஸுப்ரதிஷ்டா, ஸத ஸத்-ரூப தாரிணீ || 130 ||

இச்சா

ஆசை இச்சை இஷ்டம் விருப்பம்

சக்தி

ஆற்றலானவள்,வடிவமானவள்

க்ரியா

செயல், ஆக்கம்

சக்தி

ஆற்றலானவள்,வடிவமானவள்

ஞான

ஞானம் என்னும் பேரறிவு

சக்தி

ஆற்றலானவள்,வடிவமானவள்

சர்வ

ப்ரபஞ்சத்தின் அனைத்திற்கும்

ஆதார

ஆதாரமாகி மூலகாரணமானவள்

ஸுப்ரதிஷ்டா

அனைத்திற்கும் அஸ்திவாரமானவள்

ஸத்

நிலையான சத்யமான உண்மைகளுக்கும்

அஸத்

நிலையற்ற சத்யமற்ற ரூபங்களையும்

தாரிணீ

தரித்து தன்னுள்ளே கொண்டிருப்பவள்

 

சிந்தனை,ஆசை இஷ்டம் என்பவைகளின் வடிவமானவள்.செயல் ஆக்கம் ஆகியவற்றின் ஆற்றலும் வடிவமுமானவள்.ஞானம் என்னும் பேரறிவின் ரூபமானவள்.ப்ரபஞ்சத்தின் அனைத்திற்கும் ஆதாரமானவள்.அனைத்திற்கும் மூலாதாரமான அஸ்திவாரமானவள்.நிலையான் சத்தியத்தையும்,நிலையற்ற உண்மையில்லாதன்மையையும் தரித்து தானே எல்லாமுமாக தன்னுள்ளேக் கொண்டிருப்பவள்.

 

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

புதன்கிழமை ஜூலை, 31, , 2024

 


No comments:

Post a Comment