ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 68
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன் கிழமை ஆகஸ்ட் 14 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 169 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 917 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,170, 171 மற்றும் 172 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 917 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 918 முதல் 933 வரையிலான 16
நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
சைதன்யார்க்ய ஸமாராத்யா, சைதன்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா, ஸதாதுஷ்டா, தருணாதித்ய பாடலா || 170 ||5
சைதன்ய |
தூய உண்மையான சைதன்யம் |
அர்க்ய |
அர்பணிப்பில் |
சமாராத்யா |
திருப்தி அடைபவள் |
சைதன்யம் |
சுத்த சைதன்யம் என்னும் |
குசும |
வாடாமலர் |
ப்ரியா |
மிகுந்த விருப்பமுள்ளவள் |
ஸதா |
எப்பொழுதும் |
உதிதா |
தோன்றி இருப்பவள், எழுந்தருளி
இருப்பவள் |
சதா |
எப்பொழுதும் |
துஷ்டா |
நிறைவும் மகிழ்ச்சியும் கொண்டவள் |
தருண |
இளைய ,உதிக்கும் |
ஆதித்யா |
சூரியன் |
பாடலா |
இளம் சிவப்பு வண்ணம் |
சுத்த சைதன்யம் என்னும்
பேருணர்வின் அர்ப்பணிப்பில் அம்பாள் மகிழ்ச்சி அடைபவள். சுத்த சைதன்யம் என்னும் வாடா மலரில் மிகுந்த விருப்பமுள்லவள்.சைதன்யம் வாடாமலராக
உருவகப் படுத்தப் பட்டுள்ளது. ஞானிகள் மற்றும் பண்டிதர்களின் மனதில் நித்தியமாக உதித்து
இருப்பவள் .எப்பொழுதும் நிறைவான மகிழ்ச்சியுடன் எழுந்தருளி இருப்பவள்.அழகான உதிக்கும்
இளம் சூரியனைன் நிறத் தைக் கொண்டவள்.
தக்ஷிணா, தக்ஷிணாராத்யா, தரஸ்மேர முகாம்புஜா |
கௌளினீ கேவலா,உனர்க்யா கைவல்ய
பததாயினீ || 171 ||6
தக்ஷிணா |
வலம் சார்ந்த வேத வழிபாட்டு
முறை |
அதக்ஷிணா |
இடம் அல்லது வாமாசார வழிபாட்டு
முறை |
ஆராத்யா |
வழிபடுதல்( வேதாசார மற்றும்
தாந்த்ரீக வழி பாட்டினராலும் வழிபடப் படுபவள்)ஞானிகளாலும் அஞ்ஞானிகளாலும் வழி படப்
படுபவள் |
தர |
முகிழ்க்கும்,மலரும் |
ஸ்மேர |
புன்னகை |
முக |
முகம் |
அம்புஜா |
தாமரை |
கௌலினி |
லலிதாம்பிகையைத் துதிக்கும்
கௌல மார்க்க வழிபாட்டின் மூலம் |
கேவலா |
ப்ரம்ம ஞானமாக ஒளிர்பவள் |
அனர்க்யா |
விலைமதிப்பற்ற |
கைவல்யபத |
முக்தி, மோக்ஷம் அடையும்
நிலை |
தாயினீ |
வழங்குபவள் |
வலம் சார்ந்த வேத வழிபாட்டு
முறையைப் பின்ப்ற்றுவோர்,மற்றும் வாமபாகம் என்னும் இடப் புறம் சார்ந்த வழிபாட்டு முறையைப்
பின்பற்றும் தாந்த்ரீக வழிபாட்டு முறையினராலும் வழிபடப் படுபவள்,அறிவுமிக்க ஞானிகளாலும்,அஞ்ஞானிகளாலும்
வழிபடப் படுபவள். புதிதாக மலர்ந்த அழகிய தாமரை மலர் போன்ற புன்னகை தவழும் முகத்தினை
உடையவள்.லலிதாம்பிகையை வழிபடும் மார்கங்களில் ஒன்றான கௌல மார்கத்தின் வழிபாட்டின்
மூலம் அடையும் ப்ரம்ம ஞானமாக மிளிர்பவள் விலை மதிப்பற்ற கைவல்யம் என்னும் மோக்ஷத்தை
அளிப்பவள்.
ஸ்தோத்ரப்ரியா, ஸ்துதிமதீ, ஶ்ருதிஸம்ஸ்துத வைபவா |
மனஸ்வினீ, மானவதீ, மஹேஶீ, மம்களாக்றுதிஃ || 172 ||6
ஸ்தோத்ர |
துதிகள், ஸ்தோத்ரங்கள் |
ப்ரியா |
விருப்ப முள்ளவள் |
ஸ்துதி |
போற்றுகின்ற ஸ்துதிகள் |
மதி |
அறிவாக விளங்குபவள் |
ஷ்ருதி |
வேதங்கள் |
ஸம்ஸ்துத |
போற்றுகின்ற |
வைபவா |
பெருமையும் மஹிமையும் கொண்டவள் |
வினீ |
தெளிந்த அமைதியான |
மனஸ் |
மனதினை உடையவள் |
மான |
உய்ர்ந்த புகழ்,பெருமை, கௌரவம் |
வதீ |
உடையவள்,கொண்டவள் |
மஹேஷீ |
மஹேஷ்வரரின் பத்தினியானவள் |
மங்கள |
மங்களம்,சுபீக்ஷம்,நலன்கள் |
ஆக்ருதீ |
வடிவம் கொண்டவள் |
ஸ்தோத்ரங்களிலும் துதிகளிலும்
மிகுந்த விருப்பமுள்ளவள்.ஸ்தோத்ரங்களின் பொருளாகவும் சாரமாகவௌம் அவற்றின் அறிவாகவும்
விளங்குபவள். வேதங்கள் துதித்து கொண்டாடும் மஹத்துவம் பெற்றவள். வேதப் பொருளானவள்.
தெளிந்த அமைதியான மனதுடன் தன்னிச்சையானவள். உயர்வான கௌரவம் புகழ் பெருமை உடையவள்.மஹேஷ்வரரின்
பத்தினியாய் மஹேஷ்வரியானவள்.மங்களம்,சுபீக்ஷம்,மற்றுன் நனமைகளின் உருவானவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன் கிழமை ஆகஸ்ட் 14 , 2024
No comments:
Post a Comment