ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 63
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளிக் கிழமை ஆகஸ்ட் 9 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 154 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 820 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,155, 156 மற்றும் 157 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 820 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 821 முதல் 843 வரையிலான 23 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
ப்ரஹ்மாணீ, ப்ரஹ்ம ஜனனீ, பஹுரூபா, புதார்சிதா |
ப்ரஸவித்ரீ, ப்ரசம்டா உஜ்ஞா, ப்ரதிஷ்டா, ப்ரகடாக்றுதிஃ || 155 ||
ப்ரஹ்மாணீ |
ப்ரம்மத்தின் சக்தி ஸ்வரூபானவள்,ஸ்ருஷ்டிகர்தா |
ப்ரஹ்ம |
பரப்ரஹ்ம ரூபத்தில் ப்ரபஞ்சத்தை |
ஜனனீ |
ஜனிக்கச் செய்பவள், படைப்பவள் |
பஹு |
பல,அனேக |
ரூபா |
வடிவங்களைக் கொண்டவள். |
புதா |
புதபஹவானால்,(புதன் ஞானவடிவானவர்,அதனால்
ஞானிகளால்) |
அர்ச்சிதா |
அர்ச்சித்து வணங்கப் பெற்றவள் |
ப்ரஸவித்ரி |
ப்ரபஞ்சத்தை ப்ரஸவித்துப்
பெற்றெடுத்தவள் |
ப்ரஸண்டா |
அதிகமான ஆத்திரமும் சீற்றமும்
|
ஆக்ஞா |
ஆணை, கட்டளை, அதிகாரம்( தானே
ஆணையாகவும், ஆணை பிறப் பிப்பவளாகவுமாவாள்) |
ப்ரதிஷ்டா |
அகிலத்தின் ஆதாரமும் அடிப்படையுமானவள் |
ப்ரகடா |
விளங்கக் கூடிய, கானக் கூடிய |
ஆக்ருதி |
வடிவம்,உருவம் (ப்ரத்யக்ஷமான
ரூபம் கொண்டு காக்ஷிக்கு இனியவள் |
அம்பாள் ப்ரபஞ்சத்தின் சக்தி ஸ்வரூபமாயிருந்து பரப்ரம்மமாகவும் சர்வேஸ்வர
ராகவும் விளங்குகிறாள். அதன் காரணமாக இந்த ப்ரபஞ்சத்தின் தாயாகி அதை ப்ரஸவித்து
உண்டாக்குகிறாள்.அம்பாள் எண்ணற்ற வடிவங்களைக் கொண்டவள். ஞானகாரண னான,புதபகவானலும்
,புதன் அருள்பெற்ற ஞானிகளாளும் அர்ச்சித்து வணங்கப் படுகிறாள்.ப்ரபஞ்சத்தை ப்ரஸவித்துப்
பெற்றெடுத்தவள்.அதிகமான் ஆற்றலும் சீற்றமும் கொண்டு தாணே ஆணைகளாகவும் ,ஆணையிடுபவளாகவும்
விளங்குகிறாள்.அகிலத்தின் ஆதாரமான அஸ்திவாரமாகத் திகழ்கிறாள்.ப்ரத்யக்ஷ.கமாக் கண்னால்
காணக் கூடிய ரூபம் கொண்டு காக்ஷிக்கு இனியவளாகத் திகழ்கின்றாள்
ப்ராணேஶ்வரீ, ப்ராணதாத்ரீ, பம்சாஶத்-பீடரூபிணீ |
விஶ்றும்கலா, விவிக்தஸ்தா, வீரமாதா, வியத்ப்ரஸூஃ || 156 ||
ப்ராண |
ப்ராணன்,உயிர்சக்தி |
ஈஷ்வரீ |
இறைவி,ஆட்சி செய்பவள் |
ப்ராண |
ப்ராணன்,உயிர்சக்தி |
தாத்ரீ |
வழங்குபவள் ( உயிரும் ஊட்டமும்
அளிப்பவள்) |
பஞ்சாஷ |
ஐம்பது |
பீட |
பீடங்கள்,அரியணை |
ரூபிணீ |
வடிவம் தாங்கியவள் ( 51 சக்தி
பீடங்களில் நிலை கொண்டிருப்பவள்) 51 அக்ஷரங்களின் ஸப்த ப்ரம்மமாக உள்ளாள் |
வி |
இல்லாத,விலகியுள்ள |
ஷ்ருங்கலா |
சங்கிலி (கால,நேர,தேச எவற்றாலும்
பினைக்கப் படாதவள் ) சுதந்திரமானவள் |
விவிக்த |
பரிசுத்தமான ,தனிமையான, ஏகாந்தமான |
ஸ்தா |
நிலை கொண்டிருப்பவள் |
வீர |
வீரர்கள், நெஞ்சுரம் கொண்டவர்கள் |
மாதா |
அன்னையானவள் |
வியத் |
பரவெளியான ஆகாஸம் |
ப்ரஸு |
ப்ரஸவித்துத் தந்தவள் |
அன்னையே ஜீவ ராஸிகளின் உயிரையும் ஆன்மாவையும் ஆளும் பேரரசியாக உள்ளாள்.ஜீவராஸிகளுக்கு
உயிர் சக்தியும் ஊட்டமும் தந்து அருள்பவள்.ஐம்பத்தொரு பீடங்களில் சக்தியின் ரூபமாக
நிலை கொண்டிருப்பவள்.ஐம்ப்த்தொரு அக்ஷரங்களின் வடிவமாகவும் உள்ளவள்.காலம் நேரம் இடம்
தேசம் என எதனாலும் பிணைக் கப்படாமல் சுதந்திரமாகவிளங்குபவள்.பரிஸுத்தமான தனிமையான ஏகாந்த
நிலையில் இருப்பாவள்.நெஞ்சுரம் மிக்க வீரர்களின் அன்னையானவள்.பரந்த ஆகாய வெளியை
உண்டாக்கித் தந்தவள்.
முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ, பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||
முகுந்தா |
முக்தி
அளிப்பவள் |
முக்தி |
மோக்ஷம்,விடுதலை |
நிலயா |
இருப்பிடமானவள் |
மூல |
அடிப்படையான
|
விக்ரஹ |
தோற்றம் |
ரூபா |
வடிவமானவள்
(ஶ்ருஷ்டியின் அடிப்படை முதல் அனைத்திற்கும் ஆதாரமானவள் ) |
பாவ |
உனர்வுகள்
,எண்ண ஓட்டங்கள் |
க்ஞா |
ஞானமும்
அறிவும் உடையவள் |
பவ |
உலகம்,ப்ரபஞ்சம் |
ரோக |
வியாதி
(பிறப்பு இறப்பு போன்ற ) |
அக்னீ |
நீக்குதல்,தீர்த்தல்
களைபவள் |
பவ |
ப்ரபஞ்சத்தின் |
சக்ர |
பிறப்பு
இறப்பு என்னும் சுழர்ச்சி |
ப்ரவர்த்தனீ |
இயக்கி
நிகழ்த்துபவள் |
முக்தியை அளிப்பவள்.
அம்பாளே முக்தியின் இருப்பிடமானவள். தோற்ற வடிவங்களின் ஆதாரமாகி ஸ்ருஷ்டியின் அடிப்படையாக
விளங்குபவள்.நவரஸ பாவங்களையும் எண்ண ஓட்டங்களையும் அறிந்து செயலாற்றுபவள். ப்ரபஞ்சத்தின்
பேரும் வியாதியன பிறப்பு இறப்பு என்ற வியாதிகளைக் களைந்து முக்தி நல்குபவள்.ப்ரபஞ்ச்த்தின்
பிறப்பு இறப்பு என்ற சுழர்ச்சியை இயக்கி நிகழ்த்துபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளிக் கிழமை ஆகஸ்ட் 9 , 2024
No comments:
Post a Comment