ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 69
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழக் கிழமை ஆகஸ்ட் 15 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 172 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 933 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் நான்கு ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,173, 174,175 மற்றும் 176 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 933 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 934 முதல் 963 வரையிலான 29
நாமாவளிக்ளைப் பார்ப்போம். 963
விஶ்வமாதா, ஜகத்தாத்ரீ, விஶாலாக்ஷீ, விராகிணீ|
ப்ரகல்பா, பரமோதாரா, பராமோதா, மனோமயீ || 173 ||8
விஷ்வ |
ப்ரபஞ்சத்தின் |
மாதா |
அன்னை |
ஜகம் |
உலகம்,ப்ரபஞ்சம் |
தாத்ரீ |
துணை நின்று தாங்குபவள் |
விஸால |
அகண்ட விரிந்த |
அக்ஷி |
கண்களை உடையவள் |
விராகிணீ |
விருப்பு வெறுப்பு களுக்கு
அப்பார்ப் பட்டு வைராக்யமுள்ளவள் |
ப்ரகல்பா |
உறுதியும் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
துணிவும்,கொண்டவள் |
பரம |
உயர்ந்த |
உதாரா |
தாராளமான கொடையாளி |
பரா |
உயர்ந்த |
மோதா |
இன்பம்,பேரின்பத்தின் இருப்பிடமாயிருந்து
மகிழ்ச்சி அளிப்பவள் |
மனோ |
மனம் |
மயீ |
உள்ளடக்கி மனமாக இருப்பவள் |
அன்னையே இந்த ப்ரபஞ்சத்தின் தாயானவள்.ப்ரபஞ்சத்தை தூணாகத் தாங்கி ரக்ஷித்துக்
காப்பவளும் அம்பாளே.அகண்டு விரிந்த பெரிய அருள்பொழியும் கண்களை உடையவள்.சுய விருப்பு
வெறுப்புகளுக்கு அப்பார்ப் பட்டு வைராக்ய மனம் உடையவள். உறுதியும் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும்
துணிவும்,கொண்டவள். உயர்ந்த பெரும் கொடையளிப்பவள். உயர்ந்த பேரின்பத்தின் இருப்பிடமாயிருந்து
ஜீவராஸிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பவள். மனதின் உள்ளே இருந்து அந்தமனமே தானாக இருப்பவள்
வ்யோமகேஶீ, விமானஸ்தா, வஜ்ரிணீ, வாமகேஶ்வரீ |
பம்சயஜ்ஞப்ரியா, பம்சப்ரேத
மம்சாதிஶாயினீ || 174 ||6
வ்யோமன் |
ஆகாயம், அண்டம் ( அண்டத்தையே
) |
கேஷீ |
கேசமாகக் கொண்டவள் (அண்டரூபி) |
விமான |
வான் ஊர்திகள், ரதங்கள் |
ஸ்தா |
இருத்தல்,விமானத் தேரில்
உலா வருபவள் |
வஜ்ரிணீ |
இந்திரனின் வஜ்ராயுதம் தாங்கியவள் |
வாமக |
வாமகேஷ்வர தந்திரம் |
ஈஸ்வரீ |
ஸ்ரீ வித்யா உபாஸனை தேவதையாக விளங்குபவள் |
பஞ்ச |
ஐந்து |
யக்ஞம் |
தேவ,ப்ரம்ம,பித்ரு, மனுஷ்ய,பூத
யக்ஞங்கள் |
ப்ரியா |
விருப்பம் கொண்டவள் |
பஞ்சப்ரேத |
ஐந்து ப்ரேதங்கள் |
மஞ்சாதி |
மஞ்சம்,படுக்கையாக |
ஷாயினீ |
சாய்ந்திருந்து ஓய்வு எடுப்பவள் |
அகாயத்தையே தனது அழகான கேஸமாகக்கொண்டு இந்த அண்டமே வடிவானவள். வான ஊர்திகளான
ரதங்களிலும் தேர்களிலும் பவனி வருபவள். இந்திரனின் வஜ்ராயுதத்தை தன் கரங்களில் தாங்கியவள்.ஸ்ரீ
வித்யாம்பிகை உபாஸனா தேவியாக விளங்கும் வாமகேஷ்வர தந்திரத்தின் உபாஸனா தேவியாக விளங்குபவள்.தேவர்கள்,பரப்ரம்மம்,பித்ருக்கள்,மனிதர்கள்
மற்றும் பூதங்களுக்கான யாகங்களில் விருப்பம் கொண்டவள். லயத்தில் அனைத்தும் ஒடுங்கி
ஐந்து மஹா தேவர்களான ப்ரம்ம,விஷ்னு,ருத்ரன்,மஹாதேவர், மற்றும் சதாசிவரும் ஒடுங்கி
செயல்ற்று இருக்கும் போது முதல் நால்வரை கால்களாகவும் சதாசிவரை இருக்கையாகவும் கொண்ட
மஞ்சத்தில் சாய்ந்திருப்பவள்.
பம்சமீ, பம்சபூதேஶீ, பம்ச ஸம்க்யோபசாரிணீ |
ஶாஶ்வதீ, ஶாஶ்வதைஶ்வர்யா, ஶர்மதா, ஶம்புமோஹினீ || 175 ||7
பஞ்சம |
கடவுள்களில் ஐந்தாவதான சதாசிவன் |
மீ |
துணைவியானவள் |
பஞ்ச |
ஐந்து |
பூத |
நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆஹாயம் |
ஈஷீ |
அவைகளின் தலைவியானவள் |
பஞ்ச |
ஐந்து விதமான (தூபம்,தீபம்,மலர்,சந்தனம்
மற்றும் நைவேத்யம்) |
சாங்க்ய |
தொடர்புடைய |
உபசாரிணீ |
உபசாரங்கள் கொண்டு துதிக்கப்பெற்று
அவைகளை விரும்பி ஏற்பவள் |
சாஷ்வதீ
|
அழிவற்ற நிரந்தரமானவள் |
சாஸ்வத |
அழிவற்ற உயர்ந்த |
ஐஷ்வர்யா |
ஐஷ்வர்யமாக நின்று கோலோச்சுபவள் |
ஷர்மன் |
பேரின்பம் |
தா |
ஜீவாத்மாக்களுக்கு அருள்பவள் |
சம்பு |
சிவபெருமான் |
மோஹினீ
|
மோஹித்து வசீகரிப்பவள் |
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல் மற்றும் அருளல் என்னும் ஐந்து தொழில்
களில் அருள்பாலிக்கும் ஐந்தாவது தேவரான சதாசிவரின் பத்தினியானவள்.பஞ்ச பூதங்களான
அஹாயம்,காற்று,நிலம்,நெருப்பு மற்றும் நீர் ஆகியவற்றின் தலைவியானவள்.ஐந்துவிதமான உபசாரங்களான
தூபம்,தீபம்,சந்தனம்,மலர் மற்றும் நெய்வேத்யம் ஆகியவற்றில் பெரும் ஈடுபாடு கொண்டவள்.அழிவற்ற
உயர்ந்த பெரும் பொக்கிஷமாயிருந்து கோலோச்சுபவள்.ஜீவாத்மாக்களுக்கு பேரின்பத்தை அருள்பவள்.சிவபெருமானை
மோஹித்து வசீகரித்து தன் வஸப் படுத்துபவள்.
தரா, தரஸுதா, தன்யா, தர்மிணீ, தர்மவர்தினீ |
லோகாதீதா, குணாதீதா, ஸர்வாதீதா, ஶமாத்மிகா || 176 ||9
தரா |
தரை,பூமி
பூமியாக அனைத்தையும் தாங்குபவள் |
தர |
மலை |
சுதா |
மகள்,
ஹிமவானின் மகளானவள் |
தன்யா |
அனைத்துவித
தனங்களுக்கும் அதிபதியானவள் |
தர்மிணீ |
தர்ம
வடிவானவள் |
தர்ம |
த்ரமத்தினை |
வர்த்தினீ |
வளர்த்து
பெருகச்செய்பவள் |
லோக |
உலகங்கள் |
அதீதா |
கடந்து
அப்பாப்பட்டு நிற்பவள் |
குணா |
சத்வம்,ரஜசம்,தாமஸம்
என்ற மூன்று குங்கள்ன |
அதீதா |
அவைகளைக்
கடந்து அப்பாப்பட்டு நிற்பவள் |
சர்வா |
சர்வமும்
அனைத்தும் |
அதீதா |
கடந்து
அப்பாப்பட்டு நிற்பவள் |
சமா |
அமைதியான
,நிதானமான |
ஆத்மிகா |
போக்கை
உடையவள் |
அன்னை தானே பூமியாகி
அனைத்தையும் பொறுமையுடன் தாங்குபவள்.பர்வத ராஜன் ஹிமவானின் மகளாகி பார்வதி என்ற பெயர்
பெற்றவள்.அம்பாளே தர்மத்தின் வடிவமாயிருந்து தர்மத்தை வளர்த்து பெருக்குபவள்.எல்லா
உலகங்களையும் கடந்து அவைகளுக்கு அப்பார்ப் பட்டு நிற்பவள்.சத்வ,ரஜோ மற்றும் தாமசம்
என்னும் மூன்று குணங்களையும் கடந்து அவைகளுக்க அப்பார்ப் பட்டு நிற்பவள். ப்ரபஞ்சத்தின்
அனைத்தையும் கடந்து அவைகளனைத்திற்கும் அப்பார்ப் பட்டு நிற்பவள்.அமைதியும் நிதானமும்
கொண்ட போக்கினை உடையவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழக் கிழமை ஆகஸ்ட் 15 , 2024
No comments:
Post a Comment