Monday, August 12, 2024


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 66

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                      

திங்கள் கிழமை  ஆகஸ்ட் 12 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 163 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள  879 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,164, 165 மற்றும் 166 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 879  நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 880  முதல் 897 வரையிலான 18  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

ஸம்ஸாரபம்க னிர்மக்ன ஸமுத்தரண பம்டிதா |
யஜ்ஞப்ரியா, யஜ்ஞகர்த்ரீ, யஜமான ஸ்வரூபிணீ || 164 ||4

ஸம்ஸார

ஸம்ஸாரபொருள் சார்ந்த உலகம்,லௌகீக நிலை

பங்க

அஸுத்தம் ,சகதி

நிர்மக்ன

மூழ்கி இருத்தல்

சமுத்த்ரண

நீக்குதல் ,களை எடுத்தல்

பண்டிதா

வல்லவள்

யக்ஞம்

யாகங்கள்,வேள்விகள்

ப்ரியா

விருப்பமுள்ளவள்

யக்ஞ

யாகங்கள்,வேள்விகள்

கர்த்ரீ

புரிபவள்

யஜமான

வேள்விக்குக் காரணமான யஜமானர்

ஸ்வரூபிணீ

ரூபம் வடிவம் தாங்கியவள்

 

 

 

நிரந்தரமற்ற சம்ஸாரங்கள் என்னும் அசுத்தமான சேற்றில் மூழ்கி இருந்து உழலும் ஜீவராசிகளை பயிர்களின் களை எடுப்பது போல நீக்கி காத்து அருள்பவள்.பெரும் வேள்விகளிலும் யாகங்களிலும் விருப்பமுடையவள்.யாகங்கள் புரிபவளும் அம்பாளே.அனைத்துவிதமான வேள்விகளுக்கும் யஜமானராகவும் வேள்விகர்த்தராகவும்  தலமைதாங்குபவளும் அவளே


தர்மாதாரா, தனாத்யக்ஷா, தனதான்ய விவர்தினீ |
விப்ரப்ரியா, விப்ரரூபா, விஶ்வப்ரமண காரிணீ || 165 ||6

தர்ம

அறம் சார்ந்த வாழ்க்கை முறை

ஆதாரா

ஆதாரமாகத் திகழ்பவள்

தனாத்

பொருள்,செல்வம்

அயக்ஷா

பொருளாளர்,பொக்கிஷமாகக் காப்பவர்( ப்ரபஞ்சம் என்னும் பொக்கிஷத்தை காப்பவள்

தன

செல்வம்

தான்ய

தான்யங்கள்

விவர்தினீ

அதிகரித்து சுபீக்ஷமாக்குதல்

விப்ர

அறிவாளிகள்,கற்றறிந்தவர்கள் ( ஆன்ம ஞானிகள்)

ப்ரியா

பிரியம் உடையவள்

விஷ்வ

ப்ரபஞ்சத்தின்

ப்ரம்மண

சுழர்ச்சி (ஶ்ருஷ்டி,ஷ்திதி லயம்)

காரிணீ

காரனமாயிருந்து நிகழ்த்துபவள்

 

தர்ம நெறிக்குட்பட்ட அறம் சார்ந்த வாழ்க்கை முறையின் ஆதாரமாக அம்பாளேத் திகழ்கின்றாள்.செல்வங்களையும் தானியங்களையும் பொக்கிஷக் காப்பாளர்போலக் காப்பவள். செல்வத்தையும் தான்யங்களையும் பெருக்கி வளத்தையும் சுபீக்ஷத்தையும் பெருக்குபவள்.அறிவாளிகளிடமும் ஆத்ம ஞானிகளிடமும் பிரியம் கொண்டவள்.ப்ரபஞ்சத்தின் சுழர்சியான பிறப்பு வாழ்க்கை மரணம் என்றவைகளுக்குக் காரணமாயிருந்து அவற்றை நிகழ்த்துபவள்


விஶ்வக்ராஸா, வித்ருமாபா, வைஷ்ணவீ, விஷ்ணுரூபிணீ |
அயோனி, ர்யோனினிலயா, கூடஸ்தா, குலரூபிணீ || 166 ||8

விஷ்வ

பஞ்சத்தைப

க்ராஸா

விழுங்குபள், (ஓடுக்குபவள்,லயமாக்குதல்)

வித்ரும

பவழம்போல்

ஆபா

ஜ்வலிப்பவள் சிந்தூர விக்ரஹம்மானவள்

வைஷ்ணவீ

விஷ்ணுவின் ஆற்றல் சக்தியானவள்

விஷ்ணு

மஹாவிஷ்னுவின்

ரூபிணீ

வடிவம் தாங்கியவள்

அயோனி

துவக்கமற்றவள், அனாதி, சாஸ்வதமானவள்

யோனி

ஆதி, மூலம்

நிலயா

நிலைபெற்றிருப்பவள்,ஆதிமூலமானவள்

கூடஸ்தா

மாறுபாடுக்கு உட்படாமல் நிலையானவள்

குல

பரம்பரை,நற்குலமான ஒழுக்கமுள்ள பரம்பரை

ரூபிணீ

வடிவம் தாங்கியவள்

 

மஹாப்ரளய்த்திற்குப் பின் லயத்தில் ப்ரபஞ்சத்தையே விழுங்கி அதை ஒடுக்கி லயப்படுத்துபவள்.சிவந்த பவழம் போல ஜ்வலித்து சிந்தூர விக்ரஹமாகத் திகழ்பவள்.மஹாவிஷ்ணுவின் ஆற்றல் சக்தியானவள்.மஹாவிஷ்ணுவின் வடிவம் தாங்கியவள்.ஆதியான துவக்கமற்றவள்.சாஸ்வதமானவள்.அதனால் ஆதிமூலமாக நிலைபெற்று இருப்பவள்.எக்காலத்திலு மாறுபாடு களுக்கு உட்படாமல் நிலையாயிருப்பவள்.பாரம்பரியம் மிக்க குலத்தின் ஒழுக்க நிலையில் அதன் வடிவம் தாங்கி இருப்பவள்

 

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

திங்கள் கிழமை  ஆகஸ்ட் 12 , 2024

  

No comments:

Post a Comment