Friday, August 2, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 56

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                      வெள்ளிக்கிழமை,  ஆகஸ்ட், 2 , 2024

அனைவருக்கும் வணக்கம்

 நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 133 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 683 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம்.இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,134, 135 மற்றும் 136 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 683 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 684 முதல் 700 வரையிலான 17  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

 

ராஜராஜேஸ்வரீ, ராஜ்யதாயினீ, ராஜ்யவல்லபா |
ராஜத்-க்றுபா, ராஜபீட னிவேஸித னிஜாஸ்ரிதாஃ || 134 ||

ராஜ ராஜ

மன்னாதி மன்னர்களின் ராஜ்யங்களையும், ப்ரஞ்சத்தையும், மும் மூர்த்திகளையும்

ஈஸ்வரீ

ஆளுபவள்.ராஜராஜரான சிவனின் மகிஷி

ராஜ்ய

கைலாயம்,வைகுண்டம் போல உயர்ந்தபதவிகளை

தாயினீ

வழங்குபவள்

ராஜ்ய

ப்ரபஞ்சம் என்னும் ராஜ்யம்

வல்லபா

அதிபதியாக அதன் பொறுப்பானவள்

ராஜத்

மிகப் ப்ரிய

க்ருபா

கருணை கொண்டவள் கருணா ஸாகரம்

நிஜா

விடாமல்,தொடர்ந்து மெய் ஞானத்தை

ஆஷ்ரித்

பின்ப்ற்றுபவர்கள்

ராஜ பீட

சிம்மாஸனம்

நிவேஷிதா

அரியணை ஏற்றுவாள்

 

அன்னை லோக நாயகியாக எல்ல மன்னர்களையும் மன்னாதி மன்னர்களையும் மும்மூர்த்திக்ளையும் தனது ஆளுமைக்கு கீழ்வைத்து பரிபாலனம் செய்கின்றாள்.ராஜராஜரான சிவபெருமானின் பத்தினியாக ராஜராஜேவரியாக உள்ளாள் உன்னதமான ராஜ்ய பதவிகளான கைலாஷம் வைகுண்டம் போன்ற  பெரும் பதவிகளை பக்தர் களுக்கு வழங்குபவள்.இந்த முழு ப்ரபஞ்சத்துக்கும் தானே அதிபதியாகி அதன் முழுப் பொருப்பையும் ஏற்றவள்.கருணை கடலாக விளங்கி கருணை மழை பொழிபவள்.உண்மையான மெய் ஞானத்தை பின்பற்றுபவர்களை உயர்ந்த ஸ்தானமான் அரியணை ஏற்றுபவள்.


ராஜ்யலக்ஷ்மீஃ, கோனாதா, சதுரம்க பலேஸ்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ, ஸத்யஸந்தா, ஸாகரமேகலா || 135 ||

ராஜ்ய

ப்ரபஞ்சத்தின் அனைத்தின்

லக்ஷ்மீ

செல்வங்களுக்கும் லக்ஷ்மியாக உரிமை உள்ளவள்

கோஷ

ப்ரபஞ்சம் என்னும் பொக்கிஷம்

நாதா

உரிமையான் முதலாளியானவள்

சதுரங்க

ரத கஜ துரக பதாதி என நால்வகை சேனைக்கும்

பலேஸ்வரீ

படைத்தலைவி. மனம்,புத்தி,அஹங்காரம் ,ஜீவன் ஆகிய நான்கிற்கும் தலைவியானவள்

ஸாம்ராஜ்ய

ஞானம் என்னும் பெரும் சாம்ராயத்தை

தாயினி

அருளி வழங்குபவள்

சந்தா

வாக்கு,சத்தியம்

சத்ய

கட்டுப்பட்டிருந்து உலகை போஷிப்பவள்

மேகலா

இடுப்பணி ,ஒட்டியாணம்

ஸாகர்

பெரும் கடல் ஸமுத்திரம்

 

அன்னையே ப்ரபஞ்சத்தின் மஹாலக்ஷ்மியாகி அனைத்து செல்வங்களுக்கும் உரிமையானவளாகத்திகழ்கின்றாள்.ப்ரபஞ்சம் என்னும் பொக்கிஷத்தின் உரிமையுள்ள முதலாளியானவள்.ரத கஜ துரக பதாதி என்ற நால் வகை சேனைகளுக்கும் உரியவளாகி ஆள்பவள்.மனிதனின் மனம்,அறிவு,அஹங்காரம் மற்றும் ஜீவன் ஆன நான்கிற்கும் தலைவியானவள்.ஞானம் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தை வழங்குபவள்.சொல்லுக்கும் வாக்கு மற்றும் சத்தியத்துக்கு கட்டுப் பட்டு உலகை போஷித்துக் காப்பவள்.மாபெரும் சமுத்திரங்களை தந்து ஒட்டியானமாக அணிந்து தானே இந்த ப்ரபஞ்சம் என்பதை விளக்குபவள்.


தீக்ஷிதா, தைத்யமனீ, ஸர்வலோக வம்கரீ |
ஸர்வார்ததாத்ரீ, ஸாவித்ரீ, ஸச்சிதானம்த ரூபிணீ || 136 ||

 

தீக்ஷிதா

ஆன்மீக குருவாக தானேயாகி தீக்ஷை அருள்பவள்

தைத்ய

திதி என்ற அசுரர்களின் தாயனவளின் புதல்வர்களை

ஷமனீ

தடுத்து சம்ஹாரம் செய்தவள்

சர்வலோக

அனைத்து உலக ஜீவாத்மாக்களையும்

வஸம்கரீ

அடக்கி ஆளுபவள்

சர்வ

அனைத்துவிதமான

அர்த்த

அபிலாஷைகள், ஆஸைகள்

தாத்ரீ

அருளி பூர்த்தி செய்பவள்

சாவித்ரீ

கலைமகள் சரஸ்வதியின் வடிவமானவள்

சத்

சத்தியம்,இருத்தல்

சித்

சித்தமான அத்ம அறிவு

ஆனந்தம்

பேரானந்தம்,சாஸ்வதமான பேரின்ப வடிவானவள்

 

ஆன்மாக்களுக்கு அம்பாளே ஆன்மீக குருவாக இருந்து அவர்களுக்கு தீக்ஷை அளிப்பவள்.திதி என்ற அரக்கியின் புதல்வர்களான அஸுரர்களை தடுத்து அழித்து உலகைக் காத்தவள்.அனைத்து உலக ஜீவ ராஸிகளையும் வசீகரித்து அடக்கி ஆள்பவள்.ஜீவாத்மாக்காளின் அனைத்துவிதமான ஆஸைகளையும் அருளி பூர்த்தி செய்பவள்.கலைமகள் சரஸ்வதியின் வடிவமாயிருந்து ஞானத்தையும் கல்வியையும் அனைவருக்கும் அளிப்பவள்.சத்சித்தான வடிவமாயிருந்து சாஸ்வதமான பேரின்பவடிவானவள்

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வெள்ளிக்கிழமை,  ஆகஸ்ட், 2 , 2024

 

No comments:

Post a Comment