ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 71
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனிக் கிழமை ஆகஸ்ட் 17 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் இதுவரையில்
விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வந்தோம்..னேற்றோடு
இந்த நீண்ட விபூதி விஸ்தாரம் என்ற பகுதி நிறைவுற்ற்து .அடுத்ததாக இன்று சிவசக்தி
ஐக்யம் என்ற நிறைவுப் பகுதியோடு இந்த உன்னதமான ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம வ்ர்ணனையின்
183 வது ஸ்லோகத்துடன் நிறைவடைகின்றது.
இதுவரை 180 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 989 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் அதன்
நிறைவான மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,180, 183, மற்றும் 183 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 989 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 990 முதல் 1000
வரையிலான 11
நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
அப்யாஸாதி ஶயஜ்ஞாதா, ஷடத்வாதீத ரூபிணீ |
அவ்யாஜ கருணாமூர்தி, ரஜ்ஞானத்வாம்த தீபிகா || 181 ||
அப்யாஸ |
பயிற்சி,அப்பியாஸம் |
அதிஷய |
அதிகமான ,ஏராளமான |
ஞாதா |
அறியப்படுபவள் |
ஷட |
ஆறு |
அத்வ |
பாதைகள்,மார்கங்கள்,வழிபாட்டு
முறைகள் |
அதீத |
அப்பாற்பட்டு |
ரூபிணீ |
நிற்கும் வடிவம் தாங்கியவள் |
அவ்யாஜ |
நம்பத்தகுந்த ,உண்மையான |
கருணா |
கருணையே வடிவான |
மூர்த்தி
|
வடிவம் கொண்டவள் |
அஞ்ஞான |
அஞ்ஞான வடிவம் |
த்வாந்த |
அந்தகாரமான இருள் |
தீபிகா |
ஒளிவிளக்கானவள் |
அம்பாள் முறையாக அளவிலாத
செய்யப்படும் அபரிமிதமான பயிர்ச்சிகளினால் மட்டுமே அறியப் படக் கூடியவள். ஆறு மார்கங்
களானவைகளுக்கு அப்பார்ப்பட்டு நிற்கும் ரூபம் தாங்கியவள். பாரபக்ஷமற்ற கருணையே வடிவான
பெரும் ரூபம் கொண்டவள்.அஞ்ஞானமென்னும் பேரிருளை விலக்கும் ஒளி விளக்காய் சுடர்விடுபவள்
ஆபாலகோப விதிதா, ஸர்வானுல்லம்க்ய ஶாஸனா |
ஶ்ரீ சக்ரராஜனிலயா, ஶ்ரீமத்த்ரிபுரஸும்தரீ || 182 ||
ஆபால |
பாலகர்கள், குழந்தைகள் |
கோப |
இடையர்கள், மேய்ப்பவர்கள்
( ஜீவராசிகளை மேய்ப்பவள் ) |
விதிதா |
புரியக்கூடியவள் ( குழந்தைகளாலும்
புரிந்து கொள்ளக்கூடிய ரக்ஷகி ) |
சர்வ |
அனைத்தும்,எல்லாம் |
அன் |
அது அல்லாத |
உல்லாங்க்ய |
கீழ்ப் படியாது மீறுதல் |
ஷாஸனா |
ஆணை சாஸனம் ( அனைத்தும் தன்
ஆணைக்கு உட்பட்டே இயங்க வைப்பவள் ) |
ஸ்ரீ சக்ர |
மேரு மலையையும், மனித சரீரத்தையும்
குறிக்கும் யந்த்ர வடிவம் |
நிலயா |
பேரரசியாகக் குடிகொண்டிருப்பவள் |
ஸ்ரீமத் |
பெருமைமிகு |
த்ரிபுர |
ப்ரபஞ்சத்தின் மூன்றுகளான
அனைத்தையும் |
சுந்தரி |
ஆளுகின்ற சுந்தரி |
சிஸுக்களையும் மேய்ப்பவளாக
புரிந்துகொண்டு அவர்களை ரக்ஷிப்பவள்.அம்பாளின் ஆணைக்கு உட்பட்டே அனைத்தையும் இயங்க
வைக்கும் அதிவல்லமை பெற்றவள்.அம்ம்பாளின் ஆணையை யாராலும் வெல்லவும் முடியாது .மேருவிலமைந்துள்ள
ஸ்ரீ சக்கரத்திலும்,மனித சரீரத்தில் உள்ள உச்ச சக்கரத்திலும் நிலைகொண்டுள்ளவள் திரிபுர
சுந்தரியாக ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டியன ஆக்கத்திற்கும்,லயம் என்னும் ஒடுக்கத்திற்கும்
காரணமானவள்.
ஸ்ரீ ஸிவா, ஸிவஸக்த்யைக்ய ரூபிணீ, லலிதாம்பிகா |
ஏவம் ஸ்ரீலலிதாதேவ்யா னாம்னாம்
ஸாஹஸ்ரகம் ஜகுஃ || 183 ||
ஸ்ரீ சிவா |
ஸதானந்த
பரிபூரணமான சிவனுமானவள் |
ஷிவ ஷக்தி |
பரமாத்வாவும்
அவரின் சக்தியாகவும் |
ஐக்ய |
இணைந்து
ஓருருவான |
ரூபிணீ |
வடிவம்
கொண்டவள் |
லலிதாம்பிகா |
லலிதா
தேவியாகி உலகங்களையும் ப்ரபஞ்சத்தையும் ரக்ஷித்துக் காப்பவள் |
அம்பாளே
சதானந்தமானவரும் பரிபூரணமானவருமான பரமேஸ்வர ரானவள். சிவசக்தி ஐக்கியத்தின் வடிமாக அம்பாள்
திகழ்கின்றாள்.சிவன் என்னும் பரமாத்மாவின் ஆதிசக்தியாக உள்ளுறைபவள்.ப்ரபஞ்சம் உருவாவதே
ஆதிசக்தியின் ஆற்றலினால் தான் சிவனும். சக்தியும் பிரியாது இணைந்து ஐக்கியமாகி இருப்பதே
ப்ரம்மத்தின் உண்மையான நிலமையாகும்.சிவன் சச்சிதான ந்தம்.சக்தியே சச்சிதானந்தத்தை உணர்த்துவதாகும்.
உணர்வின்றி உணரப்படும் பொருளில்லை..உணரப்படும் பொருளின்றி உணர்வில்லை.அந்த மாபெரும்
சக்தியே உலகமெல்லாம் காத்து ரக்ஷிக்கும் தேவி
ஸ்ரீ லலிதாம்பிகை.
இத்துடன்
வாக்தேவிகளால் இயற்றப் பட்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் நிறைவுற்றது. வாக்தேவிகளுக்கும்,இதை
எடுத்து இயம்பிய ஸ்ரீ ஹயக்ரீவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்களை பணிந்து அளித்து அன்னை
ஸ்ரீ லலிதாம்பிகா தேவி அனைத்துலக ஜீவராசிகளுக்கும் தனது இன்னருளையும்,பெரும் கருணையையும்
வழங்கியருள ப்ரார்த்தி து நிறைவு செய்வோம்.
ஓம் ஸ்ரீ லலிதாதேவியை ஸ நமோ நமஹ
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
சனிக் கிழமை ஆகஸ்ட் 17 , 2024
No comments:
Post a Comment