ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 60
ஓம் நமசிவாய
சிவதாஸன்ஜகன்நாதன்
செவ்வாய் கிழமை ஆகஸ்ட் 6 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 145 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 756 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,146,147 மற்றும் 148 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 756 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 757 முதல் 776 வரையிலான 20 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ |
த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா || 146 ||
க்ஷர |
அழியக்கூடிய |
அக்ஷர |
அழிவற்ற |
ஆத்ம்கா |
அடிப்படையானவள்,ஆதாரமானவள் |
ஸர்வ |
எல்லாமும்,அனைத்தும் |
லோக |
லோகங்கள்,உலகங்கள் |
ஈஷீ |
ஈஸ்வாரி, |
விஸ்வ |
பேரண்டமான ப்ரபஞ்சம் |
தாரிணீ |
தாங்கி இருப்பவள் |
த்ரிவர்க |
தர்ம,அர்த்த,காமம் எனும்
மூன்று வகையான குறிக் கோள்களையும் |
தாத்ரீ |
வழங்குபவள் |
சுபகா |
வளம்,செழிப்பு,நலவளமை,செழுமை
மற்றும் நலமானமானவைகளின் ஜீவ நாடியானவள் |
த்ர்யம்பகா |
மூன்று கண்களை உடையவள்(ஞானக்கண்) |
த்ரிகுண |
மூன்று குணங்கள்,(சத்வ,ரஜோ,தாமஸ) |
ஆத்மிகா |
ஆதாரமாகக் கொண்டவள் |
அன்னை நிலயற்று அழியக் கூடிய மாயை மற்றும் நிலையானதான பரப்ரம்மம் என்
இரண்டும் தானேயாகி அவைகளின் ஆதாரமாகித் திகழ்பவள். ஈரேழு புவனங்கள் அனைத்திற்கும் தலைவியாக
ஆட்சி நத்துபவள்.இந்த ப்ரபஞ்சத்தின் ஆதாமாகி அதனைத் தாங்கி இருப்பவள்.நால்வகை பேறுகளான
தர்ம அர்த காம மோக்ஷம் என்பவகளில் முன்னதான மூன்றையும் அளிப்பவள்.மோக்ஷம் அளிப்பதை
முந்தைய ஸ்லோகங்களில் பார்த்துவிட்டோம்.வளமை,செழுமை மற்றும் நலமானவை களின் ஜீவ நாடியானவள்.
ஞானக் கண்ணுடன் மூன்று நேத்ரங்களை உடையவள்.சத்வம்,ரஜோஸம்,மற்றும் தாமஸம் என்னும் மூன்று
குணங்களின் சராம்சமாக விளங்குபவள்
ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப னிபாக்றுதிஃ |
ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா || 147 ||
ஸ்வர்க |
மோக்ஷலோகம்,ஸ்வர்க லோகம் |
அப்வர்க |
பரமானந்தம்,முக்தி |
தா |
தருதல் |
ஸுத்தா |
புனிதமும் சுத்தமும் ஆனவள் |
ஜபாபுஷ்ப |
செம்பருத்தி |
நிப |
ஒத்த சாயல் உடைய |
ஆக்ருதி |
தோற்றம் கொண்டவள் |
ஓஜஸ் |
வலிமை .ஆற்றல் |
வதி |
நிறைந்தவள்,கொண்டவள் |
த்யுதி |
காந்தம் ப்ரகாஸம் |
தரா |
உடையதாக்கி கொண்டிருப்பவள் |
யக்ஞ |
யாகங்களும் அவைகளின் அர்ப்பணிப்புகளும் |
ரூபா |
வடிவமானவள் |
வ்ரதா |
விரதங்களாலும் அனுஷ்டானங்களாலும் |
ப்ரிய |
விரும்பி ப்ரீதியடைபவள் |
அம்பாள் ஸ்வர்க்க லோகத்து
இன்பமும் இறுதில் பேரான ந்தமான முக்தியும் அருள்பவள். தூய்மை மற்றும் புனிதத்தின் வடிவமானவள்.அழகான
சிவந்த செம்பருத்தி மலர் போன்ற சாயலை உடையவள்.அளவிலாத வலிமையும் ஆற்றலும் கொண்டவள்.அளவிலா
ப்ரகாஸத்தையும் காந்தியையும் கொண்டு மிளிர்பவள்.யாக,யக்யங்களில் நடைபெறும் வழிபாடு,பூஜை,
மற்றும் நிவேதனம் காணிக்கை களின் வடிவானவள். விரதங்களாலும் அனுஷ்டானங்களாலும் விரும்பி
ப்ரீதியடைபவள்
துராராத்யா, துராதர்ஷா, பாடலீ குஸுமப்ரியா |
மஹதீ, மேருனிலயா, மம்தார குஸுமப்ரியா || 148 ||
ஆராத்யா |
துதித்து வணங்கப் படுதல் |
துராராத்யா |
துதித்து வணங்க கடினமானவள்
(எளிதில் வஸப் படாதவள்) |
துராதர்ஷா |
வெல்ல முடியாதவள் (கட்டுப்
படாதவள்) |
பாடலீ |
பாதிரி மரம் |
குஸும |
மலர்களை |
ப்ரியா |
விரும்பி மகிழ்பவள் |
மஹதீ |
ப்ரம்மாண்டமானவள்,அளப்பரியவள் |
மேரு |
மேருவான இமய மலையில் |
நிலையா |
நிலைபெற்று வசிப்பவள் |
மந்தார |
மந்தார |
குஸும |
மலர்கள் |
ப்ரியா |
விரும்பி மகிழ்பவள் |
எளிதில் வஸப்படாமலும்
க்ரஹித்தலுக்கு அரிதாகவும் விளங்கி வழிபடுபவதற்கு அரியதானவள்.எதற்கும் கட்டுப் படாமல்
வெல்லுத்ற்கு அரியவள்.பாதிரி மலர்களை விரும்பி ஏற்று அணிபவள்.அளப்பரிய முடியாத ப்ரம்மாண்டமான
நிலையில் உள்ளவள்.மேரு மலையான இமய மலையில் நிலைகொண்டு வாஸம் செய்பவள்.மந்தார மலர்களின்
மீது ப்ரியம் கொண்டு விரும்பி அணிபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய் கிழமை ஆகஸ்ட் 6 , 2024
No comments:
Post a Comment