Saturday, August 10, 2024

 

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 64

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                      

சனிக் கிழமை  ஆகஸ்ட் 10 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 157 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள  843 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,158, 159 மற்றும் 160 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 843  நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 844  முதல் 861 வரையிலான 18  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||7

ஸந்த

உயர்ந்த வேதங்கள்,பாஸுரங்கள்,திருமுறைகள்

ஸாரா

சாரமானவள்

ஷாஸ்த்ர

சாஸ்த்திரங்கள்,சம்ப்ரதாயங்கள்

ஸாரா

சாரமானவள்

மந்த்ர

மந்த்ரங்க்ள், உட்சாடனைகள்

ஸாரா

சாரமானவள்

தலோ

மெலிந்த ,மெல்லிய

உத்தனதரீ

இடையை உடையவள்

உதார

பெரும் அளவற்ற,

கீர்த்தி

புகழ்,பெருமைக்கு உரியவள்

உத்தாம

அளவற்ற ,எல்லையில்லாத

வைபவா

பெருமை உடையபவள்

வர்ண

ஒலி,எழுத்து ,அசை சீர் வடிவம், வண்ணங்கள்

ரூபிணீ

வடிவமாக இருப்பவள்.

 

அன்னை உயர்ந்த வேதங்கள், பாசுரங்கள் மற்றும் திருமுறைகளின் வடிவமாகத் திகழ்கின்றாள் சாஸ்த்ர் சம்ப்ரதாயங்களின் சாரமாக உள்ளாள்.மந்திரங்கள் மற்றும் மந்திர உச்சாடனைகளாகவும் அவைகளின் சாரமாகவும் உள்ளாள்.மெலிந்த இடையை உடைய மெல்லிடையாள்.பெரும் பெருமைக்கும் புகழுக்கும் உரியவள்.கீர்த்தி மிக்கவள். வண்ணங்களாகவும்,அக்ஷரங்களின் சப்தம்,ஓசை மற்றும் பேச்சாகவும் உள்ளாள்.


ஜன்மம்றுத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |
ஸர்வோபனிஷ துத்குஷ்டா, ஶாம்த்யதீத களாத்மிகா || 159 ||3

ஜன்ம

பிறப்பு

ஜர

வயோதிகம்

ம்ருத்யு

மரணம்

தப்த

தாபம்,துன்பம்

ஜன

ஜனங்கள், ஜீவராசிகள்

விஷ்ராந்தி

ஓய்வு, நிறுத்துதல், இளைப்பாறுதல்

தாயினீ

வழங்குபவள்

சர்வ

எல்லாம்,ஒவ்வொவொன்றும்

உபனிஷத்

உபனிஷதங்கள்

உத்குஷ்டா

அறியப் பட்டவள்,ப்ரகடனப் படுத்தப் பட்டவள்

ஷாந்தி

அமைதி நிலைமை

அதீத

அப்பார்ப்பட்ட

கலா

கலைகள்

ஆத்மிகா

இயல்பை உடையவள் ( சாந்தி நிலைக்கு அப்பார்ப் பட்டு முக்தி நிலையில் இருப்பவள் )

 

ஜீவராசிகளின் பிறப்பு வயோதிகம்,மரணம் என்ற துன்பங்களிலிருந்து விடுதலை அளித்து இளைப்பாறச் செய்பவள். அனைத்து உபனிஷத்துக் களாலும் அறியப்பட்டு ப்ரகடணப் படுத்தப் பட்டவள். ஷாந்தி நிலைக்கு அப்பார்ப் பட்டதான முக்தி நிலையிலிருந்து அருள்பவள்


கம்பீரா, ககனாம்தஃஸ்தா, கர்விதா, கானலோலுபா |
கல்பனாரஹிதா, காஷ்டா, காம்தா, காம்தார்த விக்ரஹா || 160 ||8

.

கம்பீரா

புரிதலுக்கு அப்பார்ப் பட்டவள்,ஆழமானவள்

ககன

ஆகாஸம்,ஸ்வர்கம்

அந்த

உள்ளே

ஸ்தா

வசிப்பவள் ( அம்பரத்தில் இருப்பவள் )

கர்விதா

கர்வமுடையவள்

கான

இசை,பாடல்கள்

லோலுபா

இச்சையும் நாட்டமும் கொண்டவள்

கல்பனா

கற்பனைகள்,அனுமானங்கள்

ரஹிதா

இல்லாதவள்,விடுபட்டவள்

காஷ்டா

உச்சி முகடு,(வேதாந்த த்தின்உன்னதப் பொருளானவள்)

அகா

அழுக்கு, பாபங்கள்

அந்த

முடிவு ( பாபங்களை அழிப்பவள்)

காந்த

அன்பிற்குரியவரான பதி சர்வேஸ்வர்ர

அர்த்த

பாதி

விக்ரஹா

தோற்றத்தில் இணைந்திருப்பவள்

 

புரிதலுக்கு அப்பார்ப் பட்ட தான புதிரானவள்.அம்பரத்தில் உள்ள ஆகாஸ ஸ்வர்கத்தில் வசிப்பவள்.கர்வம் மிகுந்தவள்.இசை பாடல்களில் ஆர்வமும் நாட்டமும் கொண்டவள். கர்ப்பனைக்கும் அனுமா னங்களுக்கும் அப்பார்ப் பட்டவள்.வேதாந்த த்தின் உன்னதப் பொருளானவள்.பாபங்க்ளையும் அழுக்கு களையும் போக்குபவள்.தன்னுடைய அன்பிற்குரியவரான சர்வேஸ்வரரின் உடலில் பாதி கொண்ட் அர்த்த நாரியாக இணைந்து விளங்குபவள்.

 

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

சனிக் கிழமை  ஆகஸ்ட் 10 , 2024

  

No comments:

Post a Comment