ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 61
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன் கிழமை ஆகஸ்ட் 7 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 148 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 776 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,149,150 மற்றும் 151 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 776 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 777 முதல் 796 வரையிலான 20 நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ | ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ || 149 ||
வீர |
வீரர்கள்,துணிவுமிக்கவர்கள் |
ஆராத்யா |
துதித்து வணங்கப் படுபவள் |
விராட் |
பேரண்டம் |
ரூபா |
உருவமாகக் கொண்டவள் |
வி ரஜா |
அசுத்தமில்லாத தூய்மையானவள் |
விஸ்வதோ |
எல்லாத் திசைகளிலும் பரவிய |
முகீ |
முகம்,(எங்கும் நீக்கமற முகம்
தாங்கி இருப்பவள்) |
ப்ரத்யக்ஞ |
உள்முகமாக |
ரூபா |
விளங்குபவள் (ஆத்ம விளக்கமானவள்)
உள்ளத்தின் உள்ளே காக்ஷி கொடுப்பவள் |
பரா |
இன்னொன்று ஒப்புவமையில்லாத |
ஆகாஸா |
பரந்த ஆகாஸமாயிருப்பவள் |
ப்ராண |
பிராணம், உயிர் மூச்சு |
தா |
வழங்குபவள்,(அனைத்து ஜீவராஸிகளுக்கும்
,ப்ராண சக்தியாகி உயிர் அளிப்பவள்) |
ப்ராண |
ப்ரபஞ்சத்தின் ப்ராணன்,உயிர் |
ரூபிணீ |
வடிவமானவள் |
அம்பாள் வீரர்களாலும்
துணிவு மிக்கவர்களாலும் போற்றித் துதி த்து வணங்கப் படுபவள். இந்த பேரண்டமான ப்ரபஞ்சமே
தனது உருவமாகக் கொண்டவள். அஸுத்தமில்லாத தூய பரிஸுத்தமானவள்.எல்லாத்திசை களிலும் பரவி
இந்த ப்ரபஞ்சம் முழுதும் வியாபித்து இருப்பவள்.உள்ளத்தின் உள்ளே இருந்து ஆத்ம விளக்கமாக
காக்ஷியளிப்பவள்.தனக்கு ஒப்பாக மற்றொன்று இல்லாதுபரந்த அகண்ட ஆகாயமாயிருப்பவள்.அனைத்து
ஜீவ ராசிகளுக்கும் ப்ராணனான உயிர் மூச்சாயிருந்து அதனை வழங்குபவள்.இந்த ப்ரபஞ்சத்தின்
ப்ராணனான உயிர் மூச்சாயிருப்பவள்.
மார்தாம்ட பைரவாராத்யா, மம்த்ரிணீ
ன்யஸ்தராஜ்யதூஃ |
த்ரிபுரேஶீ, ஜயத்ஸேனா, னிஸ்த்ரைகுண்யா, பராபரா || 150 ||
மார்த்தாண்ட |
மார்த்தாண்டவர் என்னும் |
பைரவ |
64 பைரவர்களுள் ஒருவரானவர் |
ஆராத்யா |
ஆராதி த்து வணங்கப்படுபவள் |
மந்த்ரிணீ |
அம்பாளின் பரிபாலன மந்திரிர்களில்
ஒருவர் |
ந்யஸ்த |
உட்பட்டு வரையறுக்கப் பட்ட |
ராஜ்யது |
ராஜ்யம் (ப்ரபஞ்சம் என்னும்தனது
ராஜ்ய பரி பாலனத்துக்கு மந்த்ரிணியை நியமித்திருப்பவள் |
த்ரிபுர |
மூவுலகங்கள் |
ஈஷீ |
ஈஸ்வரி,தலைவியானவள் |
ஜயத் |
வெற்றி கொள்ளும்,ஜயமேயான |
ஸேனா |
சேனை படையைக் கொண்டவள் |
நிஸ் |
ஒதுக்குதல், புறந்தள்லுதல் |
த்ரிகுணா |
மூன்று குணங்கள் |
பரா |
ஞானமான பரத்துவம் |
அபரா |
ஞானமற்ற அறியாமை யாகவும் திகழ்பவள் |
அஷ்ட பைரவர்கள் எட்டு
எட்டாக அறுபத்து நாலு பேராவார்கள்.அவர்களுல் ஒருவரான மார்த்தாண்ட பைரவரால் ஆராதித்
து வணங்கப் பட்டவள்.இந்த பெரிய ப்ரபஞ்சத்தை ராஜ்ய பரிபாலனம் செய்வதற்காக தன்னுடைய
உப தேவதை களுள் ஒருவரான மந்த்ரிண்யம்பாஎன்பவரை நியமித்து அரசாக்ஷி செய்பவள்.மூவுலங்களான
கைலாஸம்,வைகுண்டம் மற்றும் சத்யலோகம் ஆகியவ்ற்றின் தலைவியாக மஹாராணியாக ஆட்சி செய்பவள்.த்ரிபுரம்
என்னும் அசுரர்களின் நகரங்களை சிவபெருமான் அந்தகம் செய்தபின் அந்த திரிபுரங்களையும்
பரிபாலனம் செய்பவள்.எப்பொழுதும் வெற்றியே கொள்ளும் பெரும் சேனையைக் கொண்டவள்.மூன்று
குணங்களான சத்வ,ரஜோஸ,மற்றும் தாமஸ குணங்களை ஒதுக்கி அவைகளில் இருந்து விடுபட்டிருப்பவள்
ஞானமான பரா வாகவும், அறியாமையான அபரா வாகவும் திகழ்பவள்.
ஸத்யஜ்ஞானாஉனம்தரூபா, ஸாமரஸ்ய பராயணா |
கபர்தினீ, கலாமாலா, காமதுக்,காமரூபிணீ || 151 ||
சத்ய |
உண்மை |
ஞான |
ஞானம்
மெய்யறிவு |
ஆனந்த |
பேரானந்தம்,பெருமகிழ்ச்சி9சத்தியு,அறிவு
மற்றும் பேரானந்த வடிவமானவள் |
ஸாமரஸ்ய |
யோக நிலையில்
இணங்கி சங்கமித்திருத்தல் |
பராயணா |
ஈடுபட்டு
மூழ்கி இருத்தல் |
கபர்தினீ |
ஜடாமுடியுடைய
சிவனின் பத்தினி |
கலா |
அறுபத்து
நா ங்கு கலைகளையும்,கலை வடிவங்களையும் |
மாலா |
மாலைகளாக
அணிந்தவள் |
காமதுக் |
அபிலாக்ஷைகளை
அனுக்ரஹிப்பவள் |
காம
|
விரும்பிய |
ரூபிணீ |
வடிவம்
தரிப்பவள் |
|
|
சத்தியமான்
உண்மை,ஞானமான மெய்யறிவு,பேரானந்தமான பெருமகிழ்ச்சியின் வடிவானவள்.யோக நிலையில் பரம்பொருளுடன்
இணங்கி சங்கமித்து இருப்பவள்.கபர்த்தி என்னும் ஜடாமுடியுடைய சிவபெருமானின் பத்தினியாகி
கபர்த்தினி யானவள்.அறுபத்து நாலு கலைகளையும்,அவைகளின்
வடிவங்களையும் மாலையாக அணிந்தவள்.பக்தர்களின் அபிலாக்ஷைகளை நிறைவேற்றுபவள்.தனக்கு விருப்பமான
வடிவம் தரித்துக் கொள்ளுபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை
ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட்
கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
புதன் கிழமை ஆகஸ்ட், 7 , 2024
No comments:
Post a Comment