ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 58
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட், 4 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 139 ஸ்லோகங்களையும் அவைகளில்
உள்ள 722 நாமாவளிகளையும் பார்த்து
விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப்
போகின்றோம் அவை ,140, 141 மற்றும் 142 ஆகும்.
அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 722 நாமாவளிகளின் வர்ணனைகளைப்
பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 723 முதல் 741 வரையிலான
19 நாமாவளிக்ளைப்
பார்ப்போம்.
ஸ்வதந்த்ரா, ஸர்வதந்த்ரேஸு, தக்ஷிணாமூர்தி ரூபிணீ |
ஸனகாதி ஸமாராத்யா, ஸிவஜ்ஞான ப்ரதாயினீ || 140 ||
ஸ்வதந்த்ரா |
எதையும் சாராமல் சுதந்திரமானவள் |
சர்வ |
அனைத்துவிதமான |
தந்த்ர |
தந்த்ர உபாசனை மற்றும் வழிபாட்டு
முறைகள் |
ஈஷீ |
ஈஸ்வரியாக அதிபதியாக விளங்குபவள் |
தக்ஷிணாமூர்த்தி |
தென்முகக் கடவுள் ஆலமரமர்ந்தவர் |
ஸ்வரூபிணீ |
வடிவமாக விளங்குபவள் |
ஸனகர் |
ப்ரம்ம புத்திரர் நால்வருள்
ஒருவர் |
ஆதி |
முதலான,முதலியவர் களுடனான |
ஸமாராத்யா |
போற்றித் தொழுது வணங்கப்
படுபவள் |
ஸிவ |
சுபமான, மங்களமான |
ஞானம் |
நல்லறிவு, ஞானம் |
ப்ரதாயினீ |
அருளி வழங்குபவள் |
எதையும் யாரையும் சாராமல் அம்பாள் தனித்து இயங்கக் கூடியவள். அனைத்து
விதமான் தந்த்ர உபாசன வழிபாடு முறைகளின் தலைவியாக விளங்குபவள்.தந்த்ர உபாஸனா வழிபாட்டு
முறைகள் சுயத்தை உணர்த்தி முக்திக்கு இட்டுச் செல்லுகின்றன.ஆலமரத்தடியில் தென் முகமாக
அமர்ந்து ஞானோபதெசியான சிவபெரும்மனி வடிவமானவள்.ப்ரம்மாவின் மனதில் இருந்து உருவாக்கப்
பட்ட நான்கு புதல்வர்களான,சனகர்,சனாதனர்,சனந்தனர்,சனத்குமாரர் என்ற ரிஷிகளினால் தொழுது
போற்றி வணங்கப் படுபவள்.சுபமும் மங்களமும் வடிவான சிவ ஞானம் என்னும் மெய் ஞானமான பேரமுதத்தை
நல்குபவள்.
சித்களா,உனந்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியம்கரீ |
னாமபாராயண ப்ரீதா, நந்திவித்யா, நடேஸ்வரீ || 14
சித் |
சுத்த சைதன்ய உணர்வு |
களா |
அதன் பகுதியாக விளங்குபவள்.சுத்த
சைதன்ய பேராற்றலாக ஜீவ ராஸிகளிடம் விளங்குபவள் |
ஆன ந்த |
பேரான ந்த த்தின் |
கலிகா |
அவிழாத,மலராத மொட்டு.ஞானம்
பிறப்பதற்கு முந்தைய நிலை |
ப்ரேம |
அன்பு ப்ரேமை |
ரூபா |
வடிவானவள்.அன்னை அன்பே வடிவானவள் |
ப்ரியம் |
பர்ஸ்பரமான அன்பு |
கரீ |
உயிர்களிடத்தில் உண்மையான
அன்பை உண்டாக் குபவள் ப்ரியங்களை பூர்த்தி செய்பவள் |
பாராயண |
இடைவிடாத ஈடுபாடு கொண்டு த்யாணிக்கப்படும் |
நாம |
அம்பாளின் திவ்ய நாமாவளிகள் |
ப்ரீதா |
துதிக்கப் படுவதால் மகிழ்வடைபவள் |
நந்தி |
சிவபெருமானி சேவகர்,சிவனின்
ஒரு பெயர், |
வித்யா |
வித்தை,மெய்ந்தி தேவரால் ன
ஞான போதனைகள் கொண்டு துதிக்கப் படுபவள் |
நட |
நடமாடும் நடன சிவனான நடராஜப்
பெருமான் |
ஈஷ்வரீ |
துணைவி, நடனத்தின் ஈஸ்வரி |
சுத்த சைதன்ய உணர்வாக,பேருணர்வின் அளப்பரிய ஆற்றலாக ஜீவனிடத்தில் ஒளிபவள்.பேரானந்தத்தின்
அவிழாத மொட்டாக மிளிர்பவள். பேரான ந்தம் மலர்வதற்கு முந்தைய நிலையே கலிகா வாகும்.அன்னை
அன்பு பாஸம் மற்றும் ப்ரேமையே வடிவானவள்.உயிர்கலிடம் பர்ஸ்பரமான் அன்பையும் ப்ரியத்தையும்
உண்டாக்குபவள்.ப்ரியங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்பவள்.அம்பாளின் திவ்ய நாமாவளிகளின்
மீது பிரியமும் ஈடுபாடும் கொண்டு பாராயணம் செய்து பக்தர்களால் துதிக் கப்படும்போது பெரு மகிழ்ச்சி
அடைபவள்.வித்தை ஞான போதனைகளால் நந்தி தேவரால் போற்றித் துதித்து வணங்கப் படுபவள்.நந்தி
என்ற நாமம் பரமேஸ்வரருக்கும் உள்ளதால் அவராலும் போற்றப் படுபவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
நடப் ப்ரியான நடனசபேஸரான் பரமனின் துணைவியாக நடேஷ்வரீ யாகத் திகழ் கின்றாள்.
மித்யா ஜகததிஷ்டானா, முக்திதா, முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா, லயகரீ, லஜ்ஜா, ரம்பாதி வம்திதா || 142 ||
மித்யா |
மாயை,மாயமான |
ஜகத் |
ஜகம்,உலகம்,ப்ரபஞ்சம் (நிலைகொண்டிருக்க) |
அதிஷ்டானா |
ஆதாரமானவள் |
முக்தி |
முக்தி வீடு பேறு (தர்மார்த்த
காம மோக்ஷ) |
தா |
அளிப்பவள் |
முக்தி |
விடுதலை அளிக்கும் வீடு பேறு |
ரூபிணீ |
வடிவமானவள் |
லாஸ்ய |
ப்ரேம பாவங்கள் நிறைந்த நடனம்(நவரஸம்) |
ப்ரியா |
பிரியமும் ஈடுபாடும் கொண்டவள் |
லய |
ஒடுக்கம் (ப்ரபஞ்ச ஒடுக்கம்) |
கரீ |
காரணமானவள் (நடத்துபவள்) |
லஜ்ஜா |
நாணம் என்னும் பண்பு மிகுந்தவள் |
ரம்பா |
தேவலோக அழகு மங்கை |
ஆதி |
போன்றவர்களால் |
வந்திதா |
கொண்டாடி வந்தனை செய்யப்
படுபவள் |
மாயையே வடிவமானது இந்த ப்ரபஞ்சம்.இந்த
நிலையற்ற ப்ரபஞ்சம் நிலைகொண்டிருப்பதற்கு ஆதாரமாக அன்னையே விளங்குகிறாள்.உயிர்களுக்கு அறம்
பொருள் இன்பம் வீடு என்னும் நாலவகைப் பேறுகளில் உன்னதமான மோக்ஷம் அல்லது வீடு பேறு
என்னும் முக்தியை அளிப்பவள்.நவரஸ பாவங்கள் கொண்ட நடனத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள்.
லயம் என்னும் ப்ரபஞ்ச்த்தின் ஒடுக்க காலத்தில் தான் மட்டுமே தனித்திருந்து அனைத்தையும்
நத்துபவள்.லயம் என்பது பேரூழி முடிந்து அடுத்த ஸ்ருஷ்டி ஆரம்பிப் பதர்கு முன்பான காலமாகும்.அந்த
நிலையில் அம்பாளைத் தவிர் அனைத்தும் ஒடுங்கிய நிலையாகும்.தேவ லோக அப்ஸர அழகு மங்கைகளான
ரம்பை,ஊர்வஸீ,மேனகா,திலோத்தமா போன்றவர்களால் போற்றித் துதி த்து கொண்டாடி வணங்கப்படுபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி
வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட், 4 , 2024
No comments:
Post a Comment