Thursday, August 8, 2024


ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 62

ஓம் நமசிவாய

சிவதாஸன்ஜகன்நாதன்                                                                                                      

வியாழக்கிழமை  ஆகஸ்ட் 8 , 2024

அனைவருக்கும் வணக்கம்

நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 151 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 796 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,152,153 மற்றும் 154 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 796 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 797  முதல் 820 வரையிலான 24  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

களானிதிஃ, காவ்யகளா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ |
புஷ்டா, புராதனா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா || 152 || 

கலா

கலைகளின்

நிதி

பொக்கிஷம்,(கலைகளின் இருப்பிடமானவள்)

காவ்ய

காவியங்கள்,கவிதைகள்

கலா

மூலம் வெளிப்பட்டு விளங்குபவள்

ரஸ

சுவை,சாரம்,மனோபாவம் எட்டுவிதமான மனோபாவங்கள்

ஞானா

அறிவு (மனோபாவத் தன்மையை அறிந்தவள்) அதனைத் தன் வஸப் படுத்தியவள்

ரஸ

சுவை,சாரம்,மனோபாவம்

சேவதி

சேவித்துவைக்கும் பொக்கிஷமானவள்

புஷ்டா

வளமாக போஷிக்கப் பட்டு செழிப்பாயிருப்பவள் (பக்தர்களின் பக்தியால் செழித்திருப்பவள்)

புராதனா

புராதணமானவள் தொன்மையானவள்

பூஜ்யா

பூஜைக்குரியவள்,பூஜிக்கப் படுபவள்

புஷ்கரா

பூரணமான ,உன்னதமான ஞானம் உடையவள்

புஷ்கர

நீலத் தாமரை என்னுமுயர்ந்த

அக்ஷணா

கண்கள், உயர்ந்த பார்வையை உடையவள்        (ஞான த்ரிஷ்டி)

 

அம்பாள் 64 கலைகளின் பொக்கிஷமாக அவைகளின் இருப்பிடமாக உள்ளாள்.கவிதைகள் மற்றும் காவியங்களுள் இருந்து வெளிப்பட்டு மிளிர்பவள்.எட்டு விதான மனோ பாவங்களான ஸ்ருங்காரம்,ஹாஸ்யம்,ருத்ரம்,காருண்யம், வெறுப்பு,ஆச்சர்யம், வீரம்,பயம் என சௌந்தர்ய லஹரியில் வர்ணிக்கப்படும் தன்மைகளை நன்கு அறிந்து அவற்றின் கருவூலமாக அவற்றைத் தன்னுள்ளே கொண்டு விளங்குபவள். வளமாக போஷிக்கப் பட்டு புஷ்டியானவள்.ஸ்ருஷ்டியின் ஊட்டமான ஸாரமானவள். அனைத்திற்கும் முன்னதாகி புராதனமானவள். அனைவராலும் பூஜித்து வணங்கக்கூடிய பூஜைக்கு உரியவள்.பூரணமான ,அதிஉன்னதமான,முழுமையான ஞானத்தை உடையவள். நீலத்தாமரை என்னும் உயர்ந்த ஞானப் பார்வையின் மூலமாக ப்ரபஞ்சத்தையும் உயிர்களையும் பரிபாலிக்கின்றாள்.


பரம்ஜ்யோதிஃ, பரம்தாம, பரமாணுஃ, பராத்பரா |
பாஶஹஸ்தா, பாஶஹம்த்ரீ, பரமம்த்ர விபேதினீ || 153 ||

பரம்

பரிபூரண, அதிஉன்னத

ஜ்யோதி

ஒளி,(பூரண ஒளிவ டிவானவள்)

பரம்

பரிபூரண, அதிஉன்னத

தாம

இருப்பிடம், உய்ர்ந்த இருப்பிடம்

பரம்

பரிபூரண, அதிஉன்னத

அணு

நுண்ணிய அணுவாகி எங்கும் வியாதித்துஇருப்பவள்

பராத்பரா

உயர்ந்தவைகளில் உயர்ந்து ஒப்புயர்வற்றவள்

பாஸ

பந்தங்களின் கயிறான பாஸம்

ஹஸ்தா

கரங்களில் கொண்டிருப்பவள்

பாஸ

பந்த பாஸங்களை

ஹந்த்ரீ

வேரறுப்பவள்

பர

வேரானது,இன்னொன்று

மந்த்ர

மந்திரம்

விபேதினீ

அழிப்பவள்,(தீயசக்திகளின் மந்திரப் ப்ரயோகங்களை அழிப்பவள்

 

உன்னதமான்,பரிபூரனமான ஒளிவடிவமாக அன்னை திகழ்கின்றாள். அதி உன்னதமான ஸ்தானத்தை தனது இருப்பிடமாகக் கொண்டவள். நுண்ணிய அணுவாகி எங்கும் வியாதித்துஇருப்பவள். உயர்ந்தவைகளில் உயர்ந்து ஒப்புயர்வற்றவள். உவிர்களை கட்டும் பாஸம் என்ற பிணைக் கயிற்றை தன் கரங்களில் கொண்டவள்.அம்பாளே பாஸத்தை வேரறுத்து ம்க்தி நல்குபவள்.தீய சக்திகளின் மந்திர சக்தியின் ப்ரயோகங்களை அழித்துக் காப்பவள்


மூர்தா,உமூர்தா,உனித்யத்றுப்தா, முனி மானஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா, ஸத்யரூபா, ஸர்வாம்தர்யாமினீ, ஸதீ || 154 ||

மூர்த்தா

வடிவமான்வள்,ஸ்வரூபம்,ஸ்வரூபினீ

அமூர்த்தா

வடிவமற்றவள்,அருவமானவள்

அநித்ய

நிலையற்றவைகளால் செய்யப்படும் பூஜை

த்ருப்தா

த்ருப்தியடைபவள்

முனி

முனிவர்கள், தவ யோகிகள்

மானஸ

மனதினில்

ஹம்ஸிகா

அன்னப் பறவைபோல் மிளிர்பவள்

சத்ய

உண்மை,ஸத்தியம்

வ்ரதா

நிலைநாட்ட விரதம் கொண்டு உறுதிபூண்டவள்

சத்ய

உண்மை,ஸத்தியம்

ரூபா

சத்தியமே வடிவமானவள்

சர்வ

அனைத்தும்,எல்லாம்

அந்தர்

உள்ளே அந்தராத்மா

யாமினீ

வியாபித்து உள்ளுறைபவள்

ஸதீ

தக்ஷனின் மகளாக்ப் பிறந்த ப்ரமேஸ்வரி

 

அன்னை உருவவடிவம் கொண்டு ஸ்தூல ஸ்வரூபமாகத் திகழ்பவள். அப்பாளே உருவமற்று அரூபமாகவும் விளங்குகிறாள்.இது பரப்ரம்ம ஸ்வரூபமாகும்.அனித்யமான் நிலையற்றவைகளால் ஆன உபசாரத்திலும் த்ருப்தி அடைபவள்.முனிவர்கள் மற்றும் தவ ஸ்ரேஷ்டகளின் பரந்த சலமற்று தெளிந்த ஏரி போன்ற தடாகத்தில் நீந்தும் அன்னப் பறவையைப் போல மிளிர்பவள்.ப்ரபஞ்சத்தில் உண்மை சத்தியம் ஆகியவற்றை நிலை நாட்ட உறுதி பூண்டவள்.அதனால் அந்த சத்தியமே வடிவாகி சத்யஸ்வரூபியான்வள்.அனைத்து உயிறுள்ள மற்றும் ஜடப் பொருள்களின் உள்ளும் ஊடுருவி அவைகளின் உள்ளுணர்வான அந்தராத்மாகத்திகழ்பவள்.

 

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழக்கிழமை  ஆகஸ்ட் 8 , 2024

 

No comments:

Post a Comment