Sunday, August 18, 2024

 

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 72

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                    

ஞாயிற்றுக் கிழமை  ஆகஸ்ட் 18 , 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் சிவதாஸன் ஜகன்நாதனின் இனிய் வணக்கம். நாம் இதுவரை 71 நாட்கள் தொடர்ந்து லோக மாதாவான                 ஸ்ரீலலிதாம்பிகையின் பெருமை மிகு சஹஸ்ரனாம ஸ்லோகங்களையும் ஒவ்வொரு நாமாவளியையும் தினம் பொருளோடு பார்த்து வந்தோம்.அந்த வ்ர்ணனைகளை நேற்றோடு நாம் நிறைவு செய்தோம்.

அதன் பின்னுறையாக ஒரு சிறிய பதிவினை இன்று தந்து இந்த பதிவினை நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

இந்த மாபெரும் ஸ்லோகத்தின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் முன்னுறையிலே சிலவற்றைப் பற்றி பார்த்துவிட்டோம்.நிறைவாக இன்று இந்த பதிவினைத் தருகின்றேன்

ஓம் நமசிவாய

ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையை ஸ நமஹ:

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 18, 2024

 

லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது

ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு                                                                                          மந்திரங்கள் தந்திரங்கள்,                                                                                                        பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள்                                                                            என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.                    சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.               இது நோய்களைப்போக்கும்.                                                                                                    செல்வத்தை அளிக்கும்.                                                                                                    அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.                                                                                                                        பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல்,                                                க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல்,            பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம்செய்தல்,                                                                                                                       இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

இது பாவத்தை நீக்கும்.                                                                                                 பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க                                                                                                            நோய்கள் நீங்கும்.                                                                                                                              பூத பிசாச உபாதைகள் விலகும்.                                                                              இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.                                                                                                                            எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள்.                                            அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.                                                                                                                                        கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.                                                                                                     தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது “ என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.                                                                                                                      

எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையைப் பற்றி எடுத்துக்கூறினார் ஹயக்கிரீவர். இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க அதற்கு ஹயக்கிரீவர், “பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்என்றார்.

 

அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.

லலிதா சகஸ்ரநாமம் பற்றி ஸ்ரீ மஹாபெரியவா சொல்கிறார்…..

லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே” என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.

லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.

இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

இது நோய்களைப் போக்கும்.

செல்வத்தை அளிக்கும்.

அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்)

நீண்ட ஆயுள் தரும்.

அடியேனுக்கு இந்த மாபெரும் வாய்ப்பை நல்கி கடந்த 71 நாட்களாக தின்மும் தொடர்ந்து அம்பாளின் திவ்ய நாமங்களை படிப்பதற்கும்,சொல்லுவதற்கும் ,எழுதுவதற்கும்,விளக்கங்கள் அளிப்பதற்கும் பேறருள் செய்த பரமேஸ்வர் ரின் பெரும் கருணைக்கும் அம்பாளின் அருட்கடாக்ஷத்துக்கும் என்னுடைய சிரத்தை அவர்களின் பாத கமலங்களில் வைத்து வணங்கி இந்த பெரும் பதிவினை நிறைவு செய்கிறேன்.

ஓம் நமசிவாய:

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ:

சிவதாஸன் ஜகன்நாதன்

ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர

 

No comments:

Post a Comment