ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 65
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                      
ஞாயிற்றுக் கிழமை  ஆகஸ்ட் 11 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  
இதுவரை 160 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள  861 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,161, 162 மற்றும் 163 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 861  நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 862  முதல் 879 வரையிலான 18  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 
கார்யகாரண னிர்முக்தா, காமகேளி தரம்கிதா |
கனத்-கனகதாடம்கா, லீலாவிக்ரஹ தாரிணீ || 161 ||4
| கார்ய | செயல்பாடுகள் | 
| காரண | அதர்க்கான காரணம் | 
| நிர்முக்தா | அப்பார்ப்பட்டவள்.அவைகளால்
  பாதிக்கப் படாதவள் | 
| காம | காமேஸ்வர ரான ஈஸ்வரன் | 
| கேளி | கேளிக்கை ,விளையாட்டு | 
| தர்ங்கிதா | அலைகளின்
  பெருக்கு,(ஈஸ்வரரின்ஐக்கியவிளையாட்டில் அலையென இன்பத்தைப் பெருக்குபவள்). | 
| கனத் | மினுமினுப்பு | 
| கனக | தங்கம், ஸ்வர்னம் | 
| தாடங்கீ | காதணியை அணிந்தவள் | 
| லீலா | லீலைகள்,விளையாட்டுகள் | 
| விக்ரஹ | தோற்றங்களை | 
| தாரணீ | தாங்கியிருப்பவள், கொண்டிருப்பவள் | 
எந்த ஒரு செயலுக்கும்,காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.ஆனால் அம்பாள்
எல்லாவித காரியங்களுக்கும் அவைகளுக்கான காரணங்களுக்கும் அப்பார்ப்பட்டு விளங்குபவள்.தன்னுடைய
கணவரான காமேஸ்வர ருடன் சிவசக்தி ஐக்கியம் என்ற விளையாட்டில் இணைந்து பேரின்பத்தை
அலையென பெருக்குபவள்.மிளிர்ந்து ஒளிரும் தங்கத்திலான அழகிய காதணியை அணிந்தவள்.விளையாட்டுத்
தனமான் தோற்றங்களைக் கொண்டு ப்ரபஞ்சத்தை ஆக்ஷி செய்பவள்.
அஜாக்ஷய வினிர்முக்தா, முக்தா
க்ஷிப்ரப்ரஸாதினீ |
அம்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா || 162 ||6
| அஜா | ஜனனமற்றவள், பிறப்பற்றவள் | 
| க்ஷய | முடிவு,சிதைவு, மரணம் | 
| வினிர்முக்தா | விடுபட்டவள் ( அழிவற்றவள்
  )பிறபிறப்பற்றவள் | 
| முக்தா | அப்பழுக்கற்ற கவர்ச்சியான
  அழகானவள் | 
| க்ஷிப்ர | எளிதில், கணத்தில் | 
| ப்ரஸாதினீ | மகிழ்ச்சியடைபவள் | 
| அந்தர்முக | அந்த்ராத்மாவாக,உள்முகமாக | 
| ஸமாராத்யா | த்ருப்தியடைபவள்.( உள்முகமாக
  த்யானிக்கும் ஆத்ம ஞானிகளால் த்ருப்திப் ப்டுத்தப் படுபவள் | 
| பஹிர்முக | வெளிப்புறமான செயல்பாடுகளால் | 
| துர்லபா | அடையமுடியாதவள் | 
தனக்கென பிறப்பும் ,இறப்பும் இல்லாது என்றென்றும் ஸாஸ்வதமானவள். அப்பழுக்கற்ற
அழகுடையவள்.எளிதில் மகிழ்ச்சி கொள்ளுபவள்.உள்முகமாக த்யானிப்பவர்களின் த்யானங்களால்
த்ருப்தியடைபவள்.வெளிப்புறமான ஆடம்பரமான செய்ல்பாடுகளாய் அடைய முடியாதவள்
த்ரயீ, த்ரிவர்க னிலயா, த்ரிஸ்தா, த்ரிபுரமாலினீ |
னிராமயா, னிராலம்பா, ஸ்வாத்மாராமா, ஸுதாஸ்றுதிஃ || 163 ||879  8
| த்ரயீ | ரிக்,யஜுர்,ஸாம
  என்ற மூன்று வேதங்களானவள் | 
| த்ரிவர்க | தர்ம
  அர்த்த காம என்னும் மூன்று புருஷார்த்த நிலைகளில் உறைபவள் | 
| த்ரிஸ்தா | மூன்றான
  அனைத்து தத்துவங்களிலும் உறைபவள் | 
|  | மும்மூர்த்திகள்,முக்காலம்,மூவுலகம்,முக்குணம் | 
| திரிபுரமாலினீ | திரிபுரங்களின்
  தலைவியாக விளங்குகிறாள் | 
| ஆமய | நோய்
  நொடிகள்,பிணிகள் | 
| னிர் | விடுபடுதல்
  பிணிகளில் இருந்து அப்பார்ப் பட்டு | 
| ஆலம்ப | துனை
  ,சஹாயம் | 
| நிர் | எதையும்
  சாராதிருப்பவள் அம்மையே ஆதாரம் | 
| ஸ்வாத்ம | தனக்குத்தானே
  ,சுயமாக | 
| ஆரம | மகிழ்பவள் | 
| சுதா | அமிர்தம் | 
| ஸ்ருதி | பொழிதல்(ஸஹ்ஸ்ராரத்தில்
  அமுதத்தை பொழிபவள்) | 
அம்பாளே ரிக்,யஜுர்,ஸாம
என்ற மூன்று வேதங்களானவள் தர்மார்த்தகாம என்று மூன்று புருஷார்த்த நிலைகளில் உறைபவள்.மூன்றான
அனைத்து தத்துவங்களான் மூன்று தேவர்,முக்காலம்,மூவுலகம்,முக்குணம்,என் அனைத்திலும்
அம்பாளே உறைகிறாள்.திரிபுரங்களின் தலைவியாக சஹஸ்ராரத்தில் இருந்து ஆட்சி செய்கிறாள்.நோய்
நொடிகள் பிணிகலிலிருந்து விடுபட்டு நின்று ஜீவராஸிகளின் பிணிகளை தீர்க்கிறாள்.தனக்காக
எதையும் யாரையும் சாராதிருப்பவள்.தன்னுடைய மகிழ்ச்சிக்கு தானே காரணமாகி சுயமாக மகிழ்பவள்.ஸஹஸ்ராரத்தில்
குடிகொண்டிருந்து அமுதம் என்னும் பேர ருளை ப்ரபஞ்சத்தில் பொழிபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை
ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட்
கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:                                                              
சிவதாஸன் ஜகன்நாதன்                                                         
ஞாயிற்றுக் கிழமை  ஆகஸ்ட் 11 , 2024
 
No comments:
Post a Comment