ஸ்ரீ
லலிதா சஹஸ்ரநாமம் 70
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளிக் கிழமை ஆகஸ்ட் 16 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..இன்றோடு இந்த நீண்ட விபூதி
விஸ்தாரம் என்ற பகுதி நிறைவுக்கு வருகின்றது.அடுத்ததாக னாளை சிவசக்தி ஐக்யம் என்ற பகுதியோடு
இந்த உன்னதமான ஸ்ரீ ல லிதா சஹஸ்ர நாம வ்ருணனையின் 183 வது ஸ்லோகத்துடன் நிறைவடைகின்றது.
இதுவரை 176 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 963 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் நான்கு ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,177, 178,179 மற்றும் 180 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 963 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 964 முதல் 990 வரையிலான 25
நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
பம்தூக குஸும ப்ரக்யா, பாலா, லீலாவினோதினீ |
ஸுமம்களீ, ஸுககரீ, ஸுவேஷாட்யா, ஸுவாஸினீ || 177 ||
பந்துக |
சிவந்த ,அழகிய |
குஸும |
மலர் |
ப்ரக்யா |
சிறந்த மாட்சிமை பொருந்திய
உருவம் |
பாலா |
கள்ளம் கபடமற்ற சிறுமியின்
உருவம் கொண்டவள் |
லீலா |
லீலகள்,விலையாட்டுகள்,ப்ரபஞ்ச
ஸ்ருஷ்டி |
வினோதினீ |
கேளிக்கைகள்,ஸ்ருஷ்டி ஸ்திதி
லயம் போன்றவற்றில் மகிழ்ந்திருப்பவள் |
சுமங்களீ |
சுமங்களங்களான எல்லாம் அருள்பவள் |
சுக |
சுகமானகாரியங்கள் |
கரீ |
நடத்துபவள் |
சுவேஷாட்யா |
அழகிய ஆபரணங்களை அணிந்து
இருப்பவள் |
சுவா |
சௌபாக்யம், மங்களம் |
ஆஸினீ |
திகழ்பவள் |
அம்பாள் சிவந்த அழகிய மலர்போல் மாட்சிமை கொண்ட உருவம் கொண்டவள்.கள்ளம்
கபடமற்ற சிறுமியாக உருவம் கொண்டவள்.ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் ஆகிய மூன்று
செயல்பாடுகளையும் விளையாட்டாக நிகழ்த்தி மகிழ்பவள். மங்களகரமான அனைத்தையும் அருள்பவள்.
சுக காரியங்களுக்கும் தானே காரணமாகி அவற்றை நிகழ்த்துபவள்.அழகிய ஆபரணனகளை அணிந்திருப்
பவள் அன்னையே மங்களம் மற்றும் சௌபாக்யமாகத் திகழ்பவள்
ஸுவாஸின்யர்சனப்ரீதா, ஶோபனா, ஶுத்த மானஸா |
பிம்து தர்பண ஸம்துஷ்டா, பூர்வஜா, த்ரிபுராம்பிகா || 178 ||
ஸுவாசின் |
மங்களமான சௌபாகயவதிகளால் |
அர்சணா |
அர்ச்சித்து வழிபடப் படுவதில் |
ப்ரீதா |
மிகுந்த மகிழ்ச்சி கொண்டவள் |
ஷோபனா |
ப்ரகாஸத்துடன் அழகாக ஜ்வலிப்பவள் |
ஸுத்த |
சுத்தமான, தூய்மையான |
மானஸா |
மனதை உடையவள் |
பிந்து |
அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ
சக்கரத்தின் மத்தியில் |
தர்பண |
அளிக்கப் படு காணிக்கை |
சந்துஷ்டா |
த்ருப்தி அடைபவள் |
பூரவஜா |
ஆதியானவள்.ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கும்
முன்னவள் |
த்ரிபுர |
மூன்றானவை அனைத்தையும் |
அம்பிகா |
ஆள்பவள் |
மங்கலமான சௌபாக்யவதிகளால்
அர்ச்சித்து வணங்கப் படுவதில் அதிக பிரியம் உடையவள்.மிகுந்த ப்ரகாஸத்துடன் ஜ்வலித்து
மிளிர்பவள்.பரிசுத்தமான தூய மனதை உடையவளம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீசக்கரத்தின் மத்தியில்
அளிக்கப் படும் காணிக்கை களால் த்ருப்தியும் மகிழ்ச்சியும் அடைபவள்.ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கும்
முன்னவளாகி ஆதி மூலமானவள்.மூன்றானவைகள் போன்ற திரி மூர்த்திகள்,முக்காலம்,மூவுலகம்,முக்குணம்
போன்ற அனைத்தையும் தானே ஆள்பவள்.
தஸமுத்ர ஸமாராத்யா, த்ரிபுரா ஶ்ரீவஶம்கரீ |
ஜ்ஞானமுத்ரா, ஜ்ஞானகம்யா, ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணீ || 179 ||
தஸ |
பத்துவிதமான |
முத்ரா |
யோக,நாட்டிய,ஆன்மீகசாஸ்த்ரமுத்திரைகள் |
சமாராத்யா |
அபினய சமிக்ஞைகளினால் துதிக்கப்
படுபவள் |
த்ரிபுராஸ்ரீ |
ஸ்ரீ சக்கரத்தின் ஐந்தாம்
ஆவர்ண தேவி |
வஸம்கரீ |
தன்னுடைய ஆளுமைக்கு உட்படுத்தியவள் |
ஞான |
ஞானவடிவம் |
முத்ரா |
ஞானத்தின் வடிவமான சின்முத்திரை
வடிவம் |
ஞான |
ஞானத்தின் மூலம் |
கம்யா |
அடையக் கூடியவள் |
ஞான |
ஞானம் ,அறிவு |
ஞேய |
அறியப்படும் பொருள் |
ஸ்வரூபிணீ |
வடிவம் கொண்டவள் |
பத்துவிதமானயோக,நாட்டிய,ஆன்மீகசாஸ்த்ரமுத்திரைகளின்
அபினய சமிக்ஞைகளினால் துதிக்கப் படுபவள் ஸ்ரீ சக்கரத்தின் ஐந்தாம் ஆவர்ண தேவியை தன்னுடைய ஆளுமைக்கு உட்படுத்தியவள்.ஞானத்தின் வடிவமான்
சின்முத்திரை வடிவம் தாங்கியவள்.ஞானத்தின் மூலம் அடையக் கூடயவள் அம்பாளே ஞானமான அறிவாகவும்,
அறியப் படும் பொருளாகவும் வடிவம் கொண்டு திகழ்பவள்
யோனிமுத்ரா, த்ரிகம்டேஶீ, த்ரிகுணாம்பா, த்ரிகோணகா |
அனகாத்புத சாரித்ரா, வாம்சிதார்த ப்ரதாயினீ || 180 ||
யோனி |
ப்ரபஞ்சத்தின் பிறப்பிடம் |
முத்ரா |
முத்திரையானவள் |
த்ரிகண்ட |
த்ரிகண்டம் என்னும் பத்தாவது
முத்திரை |
ஈஷீ |
அதை ஆள்பவள் |
த்ரிகுணா |
சத்வ,ராஜஸ மற்றும் தமச் குணங்க்ளானவள் |
அம்பா |
தாயாகி அருள்பவள் |
த்ரிகோணகா |
ஸ்ரீ சக்கரத்தின் மையப்பகுதியில்
உள்ள் த்ரிகோணமான முக்கோணத்தில் உறைபவள் |
அனாகா |
அப்பழுக்கற்ற பரிசுத்தமானவள் |
அத்புத |
ஆச்சர்யமான,அப்பழுக்கற்ற |
சாரித்ரா |
சரித்திர பெருமை வாய்ந்தவள் |
வாஞ்சிதார்த்த |
பக்தர்களின் விருப்பங்கள்,
அபிலாக்ஷைகள் |
ப்ரதாயினீ |
வழங்கி பூர்த்தி செய்பவள் |
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியி
பிறப்பிடமான் முத்திரை வடிவம் கொண்டவள்.திரிகண்டம் எனும் பத்தாவது முத்திரையை ஆள்பவள்.மூன்று
குணங்களான் சத்வ ரஜோஸ மற்று தாமஸ குணங்கள் அனைத்தும் தானே யாகி அவற்றை ஆள்பவள். ஸ்ரீ
சக்கரத்தின் மையப் பகுதியில் உள்ள த்ரிகோண
முக்கோணத்தில் உறைபவள்.அப்பழுக்கற்ற பரிசுத்தமானவள்.ஆச்சர்யமான அப்பழுக்கற்ற சரித்திர
பெருமை வாய்ந்தவள்.பக்தர்களின் விருப்பங்களையும் அப்லாக்க்ஷைகளையும் பூர்த்திசெய்து
அருள்பவள்
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வெள்ளிக் கிழமை ஆகஸ்ட் 16 , 2024
No comments:
Post a Comment