Thursday, August 1, 2024


ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 55

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழக்கிழமை,  ஆகஸ்ட், 1 , 2024

அனைவருக்கும் வணக்கம்

 நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 130 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 661 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம்.இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,131, 132 மற்றும் 133 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 661 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 662 முதல் 683 வரையிலான 22  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயினீ |
ஏகாகினீ, பூமரூபா, னிர்த்வைதா, த்வைதவர்ஜிதா || 131 ||

அஷ்டமூர்த்தி

அன்னை பராசக்தியின் எட்டு வடிவங்களைக் கொண்டவள்

அஜாதா

அறியாமை எனும் இருள்

ஜைத்ரீ

வெறிகொண்டவள் ஞானத்தின் வடிவமானவள்

லோக

உலகின்

யாத்ர

நடைமுறைகளும், காரண காரியங்களும்

விதாயினீ

காரணமானவள்

ஏகாகினீ

ஏக ரூபமாக தனித்திருப்பவள்

பூம

அனேகம்,பலவும்

ரூபம்

வடிவமானவள்

நிர்

அல்லாத, விடுபட்ட

த்வைதம்

இரண்டான நிலை, இருமையற்றவள்

த்வைத

இரண்டான நிலை

வர்ஜிதா

விலக்கியவள், அத்வைதமாக இருப்பவள்

 

அன்னை பராசக்தி எட்டு வடிவங்களைக் கொண்டவள்.ப்ராம்மி,மஹேஸ்வரி,கோமாரி,வைஷ்னவி,வராஹி,சாமுண்டி,மஹேந்த்ரி மற்றும் நரசிம்ஹி.எட்டுவடிவான இந்த அஷ்ட தேவிகளே அம்பாளுக்கு லோக பரிபாலனத்தில் துனையாய் இருக்கின்றார்கள்.ஞானத்தின் முழு உருவாகி அக்ஞானத்தை வெற்றி கொண்டவள்.லோகத்தின் எல்லா காரியங்களுக்கும் லௌகீக செயல்பாடுகளுக்கும் அம்பாளே காரனமாயிருந்து அவைகளை நடத்தி வைக்கின்றாள்.ஒன்றான வடிவமாக தனித்து இருப்பவள்.ஏகாந்தமானவள்.அனேக வடிவங்கள் கொண்டு அனைத்தும் தானேயாகி இருப்பவள். பூரணத்தின் மொத்த வடிவமானவள்.த்வைதம் என்ற இரண்டு என்ற நிலையிலிருந்து விலகி இருந்தும், த்வைதத் திலிருந்து விடுபட்டும் இருப்பவள்.உன்னதமான அத்வைத நிலையில் இருப்பவள்.


அன்னதா, வஸுதா, வ்றுத்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்றுஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மானம்தா, பலிப்ரியா || 132

அன்னதா

அன்னபூரணியாக அன்னமளிப்பவள்

வஸுதா

வளமான சுபீக்ஷத்தை அளிப்பவள்.ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கு காரணமான அனைத்தையும்

வ்ருத்தா

விருத்தர் என்றால் வயது முதிர்ந்தவர்.அம்பாள் எத்தனையோ கோடி கல்பங்களுக்கும் முன்னவள்

ப்ரம்மா

பரப்ரம்மமான சர்வேஸ்வரர்,பரமாத்மா

ஆத்ம

ஜீவாத்மாக்கள்

ஐக்ய

சங்கமம், ஐக்கியம்

ஸ்வரூபிணீ

வடிவானவள்

ப்ருஹதீ

ப்ரம்மாண்டமானவள்

ப்ராஹ்மணீ

ப்ராஹ்மணமான ப்ரம்ம தத்துவத்தின் அம்ஸம்

ப்ராஹ்மீ

வாக்கின் அடிப்படையானவள் வாணீயாக அஷ்ட சக்திகளில் முதன்மையான சக்தி

ப்ரம்ம

உன்னதமான,பெரிய,தெய்வீகமான

ஆனந்தா

ஆனந்தத்தில் மூழ்கி திளைத்திருப்பவள்

பலி

யாகங்களில் கொடுக்கப் படும் நிவேதனம்

ப்ரியா

விரும்புபவள்

 

சகல ஜீவ ராசிகளுக்கும் அன்னபூரணியாக அன்னம் அளிப்பவள்.ப்ரபஞ்சத்தின் இயக்கத்துக்கு அத்யாவசியமான அனைத்தையும் அருளி சுபீக்ஷத்தை அளிப்பவள்.எண்னற்ற கோடி கல்பங்களுக்கும் முற்பட்டு மிகவும் புராதணமானவள். பரப்ரம்மமான சர்வேஸ்வரருடன் ஜீவாத்மாக்கள் ஐக்கியமாவற்கு காரணமாகி அந்த ஐக்கிய ஸ்வரூபமானவள். ப்ரம்மண்டமானவள்.ப்ரஹ்மணமான ப்ரம்ம தத்துவத்தின் அம்ஸமாகத் திகழ்பவள்த.வாக்கின் அதிபதியான் சரஸ்வதியாக அஷ்ட சக்திகளில் முதன்மையான ப்ராமி யானவள். உன்னதமான பரமானந்ததில் மூழ்கித் திளைத்து இருப்பவள்.யாகங்களில் சமர்பிக்கப்படும் காணிக்கை களான பலியில் நாட்டம் மிகுந்தவள்.


பாஷாரூபா, ப்றுஹத்ஸேனா, பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா, ஸூபகரீ, ஸோபனா ஸுலபாகதிஃ || 133 ||

பாஷா

அனைத்து மொழிகளின்

ரூபா

வடிவமானவள்

ப்ருஹத்

ப்ரம்மாண்டமான, மிகப்பெரிய்

சேனா

சேனை ,ப்ரபஞ்சத்தை ஆளக்கூடிய படையை உடையவள்

பாவா

உண்டு என்று இருத்தல்

அபாவா

இல்லை என்ற இல்லாத நிலை

விவ்ர்ஜிதா

விடுபட்டவள்.

சுக

சௌகர்யமான ,எளிதான முறையில்

ஆராத்யா

ஆராதித்து வணங்கத்தகுந்தவள்

சுப

நன்மை,சுபீக்ஷம்,மங்களம்

கரீ

அருளி வழங்குபவள்

ஷோபனா

நல்லவை,மங்களமானவை

சுலபா

எளிமையான வழிபாட்டிர்க்கு இரங்கி

கதி

வழங்குபவள்

 

ஞானமும் ,அறிவும் போதிக்கப் படும் மொழியே வடிவமாக அம்பாள் விளங்குகிறாள்.இதையே சென்ற ஸ்லோகத்தில் அம்பாள் ப்ராமி என்ற வடிவில் இருப்பதை விளக்கினோம். இந்த ப்ரம்மாண்டமான ப்ரபஞ்சதை ஆளுவதற்கான மிகப் பெரிய சேனையை உடையவள். உண்டு என்றும் இல்லை என்றுமான இரண்டு நிலைகளும் இல்லாமல் அவைகளில் இருந்து விடுபட்டு நிற்பவள்.எளிதான சௌக்யமான முறைகளால் மட்டுமே தன்னை ஆராஅதித்து வழிபடப்படுவதை விரும்புபவள்.பக்தர்களுக்கு நன்மைகளையும் சுபீக்ஷங்களையும் அளவில்லாது வழங்குபவள்.எளிமையான் ஆத்மார்த்த வழிவாட்டில் மகிழ்ந்து இரங்கி வளங்களும் மங்களங்களும் ஜீவாத்மாக்களுக்கு அருள்பவள்.

 

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழக்கிழமை,  ஆகஸ்ட், 1 , 2024

 

No comments:

Post a Comment