ஶ்ரீலலிதா
சஹஸ்ரநாமம் 59
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள்கிழமை ஆகஸ்ட்
5 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது
விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து
வருகிறோம்..
இதுவரை 142 ஸ்லோகங்களையும் அவைகளில்
உள்ள 741 நாமாவளிகளையும் பார்த்து
விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப்
போகின்றோம் அவை ,143, 144 மற்றும் 145 ஆகும்.
அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 741 நாமாவளிகளின் வர்ணனைகளைப்
பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 742 முதல் 756 வரையிலான
15 நாமாவளிக்ளைப்
பார்ப்போம்.
பவதாவ ஸுதாவ்றுஷ்டிஃ, பாபாரண்ய தவானலா |
தௌர்பாக்யதூல வாதூலா, ஜராத்வாம்த ரவிப்ரபா || 143 ||
பவ |
சம்ஸார சாஹரம், பூவுலகின்
லௌகீக வாழ்வு |
தாவ |
துன்பம்,தவிப்பு |
ஸுதா |
தேன் |
வ்ருஷ்டி |
வர்ஷித்தல், பொழிதல் |
பாப |
பாபங்கள் நிறைந்த |
ஆரண்ய |
காடு,வனம் |
ஆனலா |
அணல், நெருப்பு |
தவா |
நீக்குபவள் |
தௌர்பாக்ய |
துர்பாக்கியம் |
வாதுலா |
சூறாவளிக் காற்று |
தூல |
பஞ்சு |
ஜரா |
முதுமை |
த்வாந்த |
இருள் |
ரவி |
சூரியனின் |
ப்ரபா |
ஒளிமுதுமை என்னும் இருளை
ப்ரகாசிக்கும் சூரிய ஒளியாக அகற்றுகிறாள். |
இந்த பூலோக வாழ்வின் துன்பம்
தவிப்பு போன்ற கஷ்டங்களில் இருந்து அருள் எனும் தேன் மழை பொழிந்து அன்னை அருள் செய்கின்றாள்.பாபங்கள்
நிறைந்த பெரும் காட்டினை காட்டுத்தீ போல அழித்து நீக்குகின்றாள். பக்தர்களின் துர்பாக்கியங்களை சூராவளியில் அகப்பட்ட பஞ்சினைப் போல அகற்றுகிறாள்.
முதுமை என்னும் இருளை ப்ரகாஸமான சூரிய ஒளியைப் போல மிளிர்ந்து அகற்றுகிறாள்.
பாக்யாப்தி சம்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போளி, ர்ம்றுத்யு தாரு
குடாரிகா || 144 ||
பாக்ய |
சௌபாக்யம் ,அதிஷ்டம் |
ஆப்தி |
பெரும் கடல், ஸமுத்திரம் |
சந்த்ரிகா |
குளிர்ந்த தண் நிலவொளி |
பக்த சித்த |
பக்தர்களின் மனதில் |
கேகி |
தோகை விரித்தாடும் மயில் |
கனாகனா |
அடர்ந்த கருமேகங்கள் |
ரோக |
நோய் நொடிகள் |
பர்வத |
மலைபோன்ற |
தம்போளி |
பேரிடியைப் போன்றவள் |
ம்ருத்யு |
மரணம் |
தாரு |
மரத்திலான |
குடாரிகா |
கோடாரி போன்றவள் |
|
|
.
மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹாஉஶனா |
அபர்ணா, சம்டிகா, சம்டமும்டாஉஸுர னிஷூதினீ || 145 ||
மஹேஸ்வரீ |
உயர்ந்த தலைவி,மஹேஸ்வரரின்
மனைவி |
மஹா |
பெரிய ,உயர்ந்த,ப்ரம்மாண்டமான |
காளீ |
க்ருமை நிறம் கொண்ட காளீஸ்வரி |
மஹா |
மிகப் பெரிய ,அனைத்தையும் |
க்ரஸா |
விழுங்குபவள் |
மஹா |
மிகப் பெரிய |
ஆஸனா |
உணவு உண்ணுபவள்,ஸ்ருஷ்டியின்
ஒடுக்கத்தின் போது,அன்னையே லயத்திற்கும் பின்னர் ஸ்ருஷ்டிக்கும் காரணமாகிறாள் |
அபர்ணா |
இலைகள் இல்லாத கொடியாக சுற்றியிருப்பவள்
பார்வதி |
சண்டிகா |
மேலோங்கிய கோபம்,சினம் கொண்ட
துர்கா |
சண்டமுண்ட |
சண்டன் முண்டன் எனும் இரு
அசுரர்கள் |
நிஷூதினீ |
அழித்து சம்ஹரித்தவள் சாமுண்டேஸ்வரி
என்ற பெயர் பெற்றவள் |
|
|
மஹேஸ்வரரின் பத்தினியாகவும் மிகப் பெரிய தலைவியாகவும் மஹேஸ்வரியானவள்.ப்ரம்மாண்டமான
அழகிய கருமை நிறமுடைய மகா காளியானவள்.பெரும் தீதுறுபவைகள் அனைத்தையும் விழுங்கி அழிப்பவள்.ஸ்ருஷ்டியின்
லயமான ஒடுக்கத்தின் போது அனைத்தையும் தன்னுள்ளே அடக்கி அதன்பின் ஸ்ருஷ்டியின் போது
அதற்குக் காரணமானவள். இலைகள் இல்லாத கொடியாக சூக்ஷுமமாக ஸ்ருஷ்டிக்கு காரணமானவள்.பெரும்
சினம் கொண்ட துர்கா வடிவமானவள்.சண்ட முண்டன் என்ற அசுர் களை அழித்து சாமுண்டீஸ்வரி
எனப் பெயர் பெற்றவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி
வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
திங்கள்கிழமை ஆகஸ்ட்
5 , 2024
No comments:
Post a Comment