Saturday, August 3, 2024

 

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 57

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                                                                      

சனிக்கிழமை,  ஆகஸ்ட், 3 , 2024

அனைவருக்கும் வணக்கம்

 நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில்  தற்போது விபூதி விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..  

இதுவரை 136 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 700 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,137, 138 மற்றும் 139 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 700 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம் இன்றைய ஸ்லோகங்களில் 701 முதல் 722 வரையிலான 22  நாமாவளிக்ளைப் பார்ப்போம். 

 

தேகாலா ‌உபரிச்சின்னா, ஸர்வகா, ஸர்வமோஹினீ |
ஸரஸ்வதீ, ஸாஸ்த்ரமயீ, குஹாம்பா, குஹ்யரூபிணீ || 137 ||

தேஷ

தேஸம்,ப்ரதேஸம்,பரந்த வெளி

கால

காலம்

அபரிச்சின்னா

எல்லைக்கு உட்படாத

சர்வகா

எங்கும் பரவி வியாபித்து நிறைந்திருப்பவள்.

சர்வ

அனைத்தையும் ,அனைத்து ஜீவராஸிகளையும்

மோஹினீ

வஸீகரிப்பவள், மாயை

ஸரஸ்வதி

ஞானத்தின் வடிவான கலைமகள்

ஸாஸ்த்ர

மத/ விஞ்ஞான கோட்பாடுகள்

மயீ

தன்னுள்ளே அடக்கியிருப்பவள்

குஹா

குஹன் ,முருகக் கடவள்/ இதயக்குஹை

அம்பா

அன்னையானவள்/ வசிப்பவள்

குஹ்ய

ரஹஸ்யமான,மறைபொருளான,எல்லோராலும் அறிய முடியாத

ரூபினீ

ரூபம் கொண்டவள்

அன்னை தேசம் காலம் ப்ரதேசம் ஆகியவைகளுக்கு அப்பார்ப் பட்டவள்.எந்த எல்லைக்கும் உட்படாதவள்.எங்கும் வியாபித்துப் பரந்து பரவி இருப்பவள். அனைத்து ஜீவராசிகளையும் மாயையாயிருந்து வசீகரிப்பவள்.அனைத்தையும் அனைவரையும் மாயையின் பிடியில் வைத்திருப் பவள். ஞான தேவியான சரஸ்வதியின் வடிவமானவள்.அம்பாளே சாஸ்த்ரங்கள்,மத்க் கோட்பாடுகள்,வழிமுறைகள், வேத விஞ்ஞானங்களை தன்னுள் அடக்கியவள். தானே சாஸ்த்ர மயமானவள்.குஹனாகிய முருக் கடவுளின் அன்னையானவள். பக்தர்களின் இதயமான குஹையில் வசிப்பவள். மர்ம மானவள்,மறைபொருளாயிருந்து அனைவராலும் அறிந்துகொள்ள முடியாத வடிவம் கொண்டவள்.


ஸர்வோபாதி வினிர்முக்தா, ஸதாஸிவ பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேஸ்வரீ, ஸாத்வீ, குருமம்டல ரூபிணீ || 138 ||

ஸர்வ

அனைத்துவிதமான

உபாதி

கட்டுப்பாடு,தடைகள்

வினிர்முக்தா

அப்பார்ப்பட்டு விடுபட்டவள்

சதாஷிவ

அனுக்ரஹ சிவ வடிவமான  ஸதாசிவர்

பதிவ்ரதா

பத்தினியானவள்

சம்ப்ரதாய

சம்ப்ரதாயங்கள்,ஆசார அனுஷ்டானங்கள்

ஈஸ்வரீ

மஹாராணி, ஆளுபவள்

சாது

தெளிந்த சீர்நோக்குடைய ஞானி

ஈ கார பீஜா மந்திரத்தில் ப்ரதிபலிப்பவள்

குரு

குரு வம்ஸ ,குரு பரம்பரை

மண்டல

பாதை வழி

ரூபிணீ

வடிவானவள்

 

எவ்வித தடைகளோ கட்டுப்பாடு களோ இல்லாது அவைகளுக்கு கட்டுப் படாமல் அப்பார்ப் பட்டிருப்பவள்.அருளல் நிலையில் உள்ல பரமேஸ்வரரான ச்சதா சிவனைன் பத்தினியானவள்.வழமையான பழக்க வழக்கங்கள் சமயக் கோட்பாடுகளை போஷித்து மஹாராணியாக ஆட்சி செலுத்துபவள்.தெளிந்த அமைதியும்,சம நோக்கும் கொண்ட ஞானியாக பேரண்டத்தின் உற்பத்திக்கு காரணமான்  பீஜா மந்திரத்தில் ப்ரதிபலிப்பவள்.குரு பரம்பரையின் வம்ஸாவளியாகி அதன் வடிவானவள்.குருமார்கள் அல்லது ஆச்சார்யர்களின் பர்ம்பரையின் வடிவமானவள்.


குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ |
கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாங்கீ, குருப்ரியா || 139 ||

குல

குழு ,ஒருகுறிப்பிட்ட சமூகம்

தீர்ணா

அப்பார்ப் பட்டு இருப்பவள்,எல்லையற்று பரவியவள்

பகா

பகலவன்,சூரியவன்,சூரிய மண்டலம் வட்டப்பாதை

ஆராத்யா

துதித்துப் போற்றப் படுதல்

மாயா

மாயா சக்தி ,ஸ்ருஷ்டியின் காரணம்

மது

தேன்,

மதி

அறிவு, ஞானம் மெய் ஞானத்தின் பேரானாந்தம்

மஹீ

ஸ்தூலமாக பூமியின் வடிவமானவள்

கணா

சிவ கணங்கள், சிவத்தொண்டர்கள்

அம்பா

தாயானவள்

குஹ்யகா

செல்வத்தின் அதிபதி குபேரன்

ஆராத்யா

வழிபடப் படுபவள்

கோமல

மென்மையான எழிலுடனான

அங்கீ

உடலைக் கொண்டவள்

குரு

மதிப்புடையோர், குருமார்கள்,ஆச்சார்யார்கள்

ப்ரியா

பிர்யமானவள்

 

குறுகிய வட்டத்திற்குள் தனைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் எல்லையற்று பரந்து விரிந்து இருப்பவள்.குல என்ற நாமம் புலங்களின் கூட்டு என்றும் கொள்ளப் படும் பொழுது அம்பாள் புலன்களுக்குள் அகப்படாமல் எல்லையற்று விரிந்து இருப்பவள்.என்ற பொருளையும் தரும்.பகா என்று சூரியனாலும் சூரிய வட்டப் பாதையில் அமைந்துள்ள சூரிய குடும்பத்தினராலும் போறித் துதித்து வணங்கப் படுபவள்.அம்பாளே மாய சக்தியாக இருந்து ஸ்ருஷ்டிக்கு காரணமாக விளங்குகிறாள்.இனிமையான தேன் போன்ற மெய் ஞானத்தின் எல்லையில்லா பேரானந்தமாக விளங்குகிறாள். அம்பால் ஸ்தூலமாக இந்த பூ மாதாவாக விளங்குகிறாள்.சிவ கணங்கள் ,மற்றும் சிவதாஸர்களின் தாயாக விளங்கு கிறாள்.செல்வத்தின் அதிபதியான குபேரனால் ஆராதித்து வணங்கப் படுபவள்.மென்மையான அழகான அங்கங்களைக் கொண்ட உடலைக் கொண்டவள்.மதிப்பு மிக்க அறவோர்களிடமும்,குருமார்களிடமுமஆச்சார்யார்களிடமும் பெரும் பிரியம் கொண்டவள்.

இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

சனிக்கிழமை,  ஆகஸ்ட், 3 , 2024

 

No comments:

Post a Comment