ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 67
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை ஆகஸ்ட் 13 , 2024
அனைவருக்கும் வணக்கம்
நமது லலிதா சஹஸ்ரநாம ஸ்லோகம் பதிவில் தற்போது விபூதி
விஸ்தாரம் என்ற பகுதியைப் பார்த்து வருகிறோம்..
இதுவரை 166 ஸ்லோகங்களையும் அவைகளில் உள்ள 897 நாமாவளிகளையும் பார்த்து விட்டோம். இன்று நமது லலிதா சஹஸ்ரநாம வர்ணனைகளின் தொடரில் மூன்று
ஸ்லோகங்களைப் பார்க்கப் போகின்றோம் அவை ,167, 168 மற்றும் 169 ஆகும். அம்பாளின் நாமாவளிகளில் இதுவரை 897 நாமாவளிகளின் வர்ணனைகளைப் பார்த்துவிட்டோம். இன்றைய ஸ்லோகங்களில் 898 முதல் 917 வரையிலான 20நாமாவளிக்ளைப் பார்ப்போம்.
வீரகோஷ்டீப்ரியா, வீரா, னைஷ்கர்ம்யா, னாதரூபிணீ |
விஜ்ஞான கலனா, கல்யா விதக்தா, பைம்தவாஸனா || 167 ||8
வீரகோஷ்டி |
வீரர்களின் கோஷ்டி, குழுவின்
சபை |
ப்ரியா |
விரும்புபவள் |
வீரா |
வீரமும் ஆற்றலும் நிறைந்தவள் |
நைஷ் |
செயலற்ற தன்மை |
கர்ம்யா |
நிலைகொண்டிருப்பவள் லயத்தில்
ஒடுங்குதல் |
நாதம் |
இனிய நாதம் |
ரூபிணீ |
வடிவானவள், நாதஸ்வரூபமானவள் |
விஞ்ஞான |
உயர்ந்த மெய் ஞானம் |
கலனா |
தூண்டி நடத்துபவள் மெய் ஞானத்தைத்தூண்டி
நடத் துபவள் |
கல்யா |
நலம் நல்கும் மங்களமானவள் |
விதக்தா |
நிபுணத்துவம் நிறைந்த பேரறிவாளி
(ஸ்ருஷ்டி) |
பைந்தவ |
மேருமலையின் பிந்து ஆக்ஞா சக்கரம் |
ஆஸனா |
வீற்றிருப் பவள்.ஸ்ரீ சக்கரம் |
அன்னை வீரம் நிறைந்த குழுக்களையும் கூட்டங்களையும் விரும்புபவள்.அம்பாளே
பெரும் வீரமும் ஆற்றலும் நிறைந்தவள்.பற்றற்ற நிலையினால் காரன காரியங்களால் பாதிக்
கப்டாதவள்.அவைகளுக்க அப்பார்ப் பட்டு நிற்பவள். லயத்தில் ஒடுங்கி இருப்பவள்.ஸ்ருஷ்டியின்
முதல் நாதமான ஓங்கார வடிவானவள்.உயர்ந்த மெய் ஞானத்தை தூண்டி அதனை விழிக்கச் செய்பவள்.மெய்
ஞானமே பேரறிவு ஆகும்.படைத்தல் தொழிலை செய்ய தயாராகி மங்களமாயிருப்பவள்.ப்ரபஞ்சத்தை
ஸ்ருஷ்டிக்கும் பேரறிவு நிறைந்தவள்.மேரு மலையின் உச்சியில் ஸ்ரீ சக்கரத்தில் இருந்து
ஆட்சி செய்பவள்.
தத்த்வாதிகா, தத்த்வமயீ, தத்த்வமர்த ஸ்வரூபிணீ |
ஸாமகானப்ரியா, ஸௌம்யா, ஸதாஶிவ குடும்பினீ || 168 ||6
தத்வ |
சத்திய தத்துவங்கள்( படைப்பின்
மூலதத்துவங்கள் 24 |
அதிகா |
கடந்து நிற்பவள் |
தத்வ |
சத்திய தத்துவங்கள் |
மயீ |
உள்ளடக்கியவள் தானே தத்துவ
மயமானவள் |
தத் |
அது |
த்வம் |
நீ |
அர்த்தம் |
பொருள், |
ஸ்வரூபிணீ |
வடிவமானவள்.தத்வமஸீஎன்றமஹாவாக்கியத்தன்
பொருளானவள் (நீயே அதுவாகிறாய்) |
ஸாமகான |
சாம வேதங்களின் மந்திரம் |
ப்ரியா |
பிரியமுடையவள் |
சௌம்யா |
வெண்மதியைப் போல இதமானவள் |
சதாஷிவ |
சதாஸிவரான பரமேஸ்வரரின் |
குடும்பினீ |
பத்தினியான மனைவி ப்ரபஞ்சத்தாய் |
படைப்பின் மூலம் எனப்படும் 24 தத்துவங்களைக் கடந்து நிற்பவள். எல்லாதத்துவங்களையும்
தன்னுள்ளே அடக்கி தத்துவ மயமானவள்.
தத்வமஸீ என்ற மஹா வாக்கியத்தின் பொருளான நீயே அதுவாக இருக்கிறாய் என்ற ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தின்
பொருளாகத் திகழ்கிறாள். சாம வேதத்தின் பாராயணத்திலும் இசையிலும் பெருமகிழ்வு கொண்டவள்.
வெண்மதியைப் போறு இதமான மென்மையானவள். சதாஸ்வர`ரான பரமேஷ்வரரின் பத்தினியாகி சிவகுடும்பத்தின்
தாயாய் ப்ரபஞ்ச மாதாவானவள்.
ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா, ஸர்வாபத்வி னிவாரிணீ |
ஸ்வஸ்தா, ஸ்வபாவமதுரா, தீரா, தீர ஸமர்சிதா || 169 ||6
சவ்ய |
வலம்
சார்ந்த வேத வழிபாட்டு முறைகள் |
அபசவ்யா |
இடம்
சார்ந்த தாந்த்ரீக வழிபாட்டு |
மார்கம் |
மார்க்கம் |
ஸ்தா |
நிலைகொண்டிருத்தல் |
சர்வ |
ஒவ்வொரு,
அனைத்து, எல்லா |
ஆபத் |
ஆபத்துகள் |
வினிவாரிணீ |
இடர்களை
நீக்கிக் களைபவள் |
ஸ்வஸ்தா |
த்ன்னில்
நிறைவு காண்பவள் |
மதுர் |
இனிமையான
,தேன் போன்ற |
ஸ்வபாவ |
சுபாவம்
,தன்னிலை,குணம் |
தீரா |
வீரம்
அறிவு ஆற்றல் |
தீர |
வீரம்
அறிவு ஆற்றல் மிகுந்தவர்கள் |
சமர்சிதா |
போற்றி
வண்ங்கப் படுபவள் |
வலம் சார்ந்த
வேத வழிபாட்டு முறைகளிலும்,தாந்த்ரீக முறை சார்ந்த இடக்கை வழிபாட்டு முறைகளிலும் ப்ரசன்னமாகி
இருப்பவள். பக்தர்களின் அனைத்து இடர்களையும் களைந்து காப்பவள். தன்னில் தனது இயல்பு
நிலையில் நிறைவு காண்பவள்.இனிமையான தேன் போன்ற சுபாவம் கொண்டவள்.வீரம்,அறிவு, ஆறல்
மிகுந்தவள்.வீரம் அறிவு ஆற்றல் மிகுந்தவ்ர்களால் வணங்கிப் போற்றப் படுபவள்.
இத்துடன் இந்த இன்றைய பதிவை நிறைவு
செய்கிறேன்.இவைகளை ஒலி வடிவமாகவும் தந்துள்ளேன் கேட்டும் படித்தும் மகிழ்ந்து
அம்பாளின் பேருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் கடாக்ஷத்துக்கும் பாத்திரமாகுங்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை ஆகஸ்ட் 13 , 2024
No comments:
Post a Comment