Sunday, June 30, 2024

 

 

சகுணமும் நிர்குணமும்

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய:

ஞாயிறு, 30 ஜூன் 2024

நமது லலிதா சஹஸ்ரநாமப் பதிவில் இது நாள் வரையில் அம்பாளின் நிர்குண ஸ்வரூபங்களை பார்த்தோம்.இப்பொழுது அம்பாளின் சகுண ரூபங்களைப் பார்க்கப் போகின்றோம்.அதற்கு முன்பாக சகுணம், நிர்குணம் என்றால் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

மனம் என்பது இன்னது தான் என யாராலும் தெளிவாக தீர்த்து கூறவே இயலாது. நம் துன்பங்கள் அனைத்திற்கும் ஒரே காரணம் நம் மனம்தான். ஆனால் மனம் எங்கே உள்ளது என்று தேடினால் அப்படி எதுவுமே நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கற்பனைகளின் உறைவிடமே மனம் தவிர, மனம் என்ற ஒன்று இல்லை. இல்லாத மாயா மனம் நம்மை எப்படிஎல்லாம் ஆட்டுவித்து துன்புறுத்துகிறது என்பது நாம் அனைவரும் உணர்ந்ததே.

மதமும் சனாதன நெறிமுறைகளும்  நமக்கு அளித்துள்ள வேதங்கள், அனுஷ்டானங்கள், பாராயண விதிகள், பூஜை புனஸ்காரங்கள், நியம நிஷ்டைகள், ஆகமங்கள், அனைத்துமே நாம் நம் மனதை நம் கட்டுப்பாடிற்கு கொண்டுவர உறுதுணையாய் இருப்பதற்கே யாகும்..

அவ்வாறு செய்யும் உபாசனைகள் இரண்டு விதமாக உள்ளன. ஒன்று சகு உபாசனை அதாவது ஒரு உருவத்தை கொண்ட ஏதாவது ஒரே தெய்வத்தின் வழிபாடு.

மற்றொன்று நிர்குண உபாசனை அதாவது அந்த உருவமும் பெயரும் குணமும் எதுவும் அற்ற பரம்பொருளை, மனதில் வேறு எதையுமே சிந்திக்காமல் இருந்து, மனதை மௌனமாக்கும் பிரம்ம உபாசனை.

இவ்விரண்டை குறிக்கும் விதமாகவே மாணிக்கவாசகர் திருவாசகத்தின் முதல் அடியை "நம: சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!!" என துவங்கியுள்ளார்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரவடிவில் நாம் ஈஸனை எண்ணும்பொழுது அங்கே சிவன் எந்த உருவமுமில்லாமல் அந்த உருவமற்ற ஓங்காரத்திலேயே நிலைத்திருக்கின்றார்.கண்னை மூடிக்கொண்டு நமசிவாய என்று சொல்ல்ம்பொது நமக்கு எந்த உருவமும் கற்பனையிலும் தோன்றுவதில்லை.அங்கே பரம்பொருளான சிவபெருமான் உருவமற்ற நிர்குணனாக விளங்குகிறார்.

நாதன்தாள் என்ற சொல்லும்போது அங்கே நம் த்யானத்தில் பரமனின் திருவடிகளை நம்மால் உருவகப் படுத்தி வணங்க முடிகிறது.அதாவது இறவனுக்கு ஒரு உருவம் கொடுத்து வழிபட் முடிகின்றது இதையே நாம் சகுண வடிவம் எங்கிறோம்

சகுன மற்றும் நிர்குன உபாசனைகளில் நிற்குண அதாவது மனதில் எந்த வீண் சிந்தனையும் எழாமல் இருக்க பயிற்சி செய்வதே சிறந்ததாகும். ஏனெனில், கற்பனைகள் இல்லாத நிலையே நம் சுயநிலை. ஆனால் ஒரு உருவத்தை வழிபடும்போது, அதற்க்கு பெயர், உருவம், குணம், தோஷம், முதலிய கற்பனைகள் நாம் செய்யவேண்டியுள்ளது. எங்கும் நிறைந்து, அனைதுமாயும் உள்ள பரத்திற்கு நாம ரூபம் தருவது நம் மடமை அன்றோ?!!

சும்மா இருக்கத்தெரியாத மனதிற்கு எதோ ஒரு இறைவனுடைய நாமத்தை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருக்க, சிறிது காலத்தில் சும்மாஇருக்க கற்றுக்கொள்ளும். நாம ஜபம் செய்யும்போது, மனதில் வேறு எந்த எண்ணமும் எழாமல், எந்த உருவத்தையும் கற்பனை செய்யாமல் இருத்தல் முக்கியம். ஒரே நாமத்தையே ஜபம் செய்யவேண்டும். மாற்றி மாற்றி ஜபம் செய்யக்கூடாது.

அனைவராலும் நாமஜபம் செய்ய சாத்தியமல்ல. அப்படிப்பட்டவருக்கு அளிக்கப்பட்டதே இறை உருவங்கள். ஏதாவது ஒரு உருவத்தை மனதில் கற்பித்து தியானித்து வர சிறிது காலத்தில் மனம் ஒருமைப்பட்டு நாமஜபத்திற்க்கோ, மௌனமாய் இருக்கவோ தயாராகிவிடும். அவ்வாறு தியானம் செய்யும் போது ரூபத்தை மாற்றி மாற்றி தியானம் செய்யக்கூடாது. ஒரே உருவத்தை தான் நினைக்க வேண்டும். .

நாமஜபம் நம்மை நம் சுய வடிவான மனதற்ற நிலைக்கு இட்டுச்செல்லும்.

உருவ தியானம் மன ஒருமைப்பாட்டையே உண்டாக்கும் ஆனால் மனதை நாசம் செய்யாது.

இதன் காரணமாகவேதான் லலிதா சஹஸ்ரநாமத்தில்,அம்பாளின் நாமங்களில் நிர்குண நாமங்களும், சகுண நாமங்களும் சொல்லப் பட்டுள்ளன.

இந்த சிறிய விளக்கத்துடன் நாம் நளை முதல் அம்பாளின் சகுண ரூபங்களின் வடிவங்களின் ஸ்லோகங்களைத் தொடருவோம்

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.நாள அடுத்த இரண்டு ஸ்லோகங்களின் விளக்கமோடு தொடருவோம்.

நன்றி .வனக்கம்

சிவதாஸன் ஜகன்நாதன்

ஓம் நமசிவாய:

ஞாயிறு, 30 ஜூன் 2024

 

Saturday, June 29, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 23

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

சனி,ஜூன் 27  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின் ,49 மற்றும்  50 வது ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்த இரண்டுஸ்லோகங்களும் அம்பாளின் நிர்க் குண உபாஸனையை சொல்லும் கடைசி ஸ்லோகங்களாகும்.இவைகளும் அம்பாளின் சூக்க்ஷும ஸ்வரூபங்களையே விவரிக்கின்றன

49) னிர்விகல்பா, னிராபாதா, னிர்பேதா, பேதனாஸினீ |
னிர்னாஸா, ம்றுத்யுமதனீ, னிஷ்க்ரியா, னிஷ்பரிக்ரஹா || 49 ||

நிர்விகல்பா

பொய்யான ப்ரதி பிம்பங்களில் ஆட்படாதவள்

நிர் ஆபாதா

இடையூறுகளால் நிலைகுலையாதவள்

னிர்பேதா

பேதம் / வேறுபாடு அற்றவள்

பேதநாசினீ

பேதங்களை அழிப்பவள்

நிர்நாஸா

அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்

ம்ருத்யு

மரணம்

மதனி

முடிவுக்கு கொண்டுவருபவள்

நிஷ்க்ரியா

கர்மங்களுக்கு அப்பார்ப் பட்டவள்

நிஷ்பரிக்ரஹா

தேவைகள் ஏதும் சாராதிருப்பவள்

அம்பாள் பொய்யான ப்ரதிபிம்பங்களுக்கு ஆட்படாதவள்.தனக்கென ஒரு உண்மையான ஸ்வரூபம் உடயவள் எனவே ப்ரதி பிம்பங்களுக்கு ஆட்படாமல் இருக்கின்றாள்.உன்னதமான பெரும் சக்தியானதால் அம்பாள் எந்தவித இடையூறுக்கும் நிலைகுலையாத தன்மையுடையவள்.எல்லாவிதமான பேதங்களையும் வேறுபாடுகளையும் அழிப்பவள்.அழிக்க முடியாத ,அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்.பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அழித்து மரணத்தை முடுவுக்குக் கொண்டுவருபவள். எல்லாவிதமான கர்மங்களுக்கும் அப்பார்ப் பட்டவள்.எந்தவிதமான தேவைகளும் இல்லாமலிருப்பவள்

50)
னிஸ்துலா, னீலசிகுரா, னிரபாயா, னிரத்யயா |
துர்லபா, துர்கமா, துர்கா, துஃகஹம்த்ரீ, ஸுகப்ரதா || 50 ||


நிஃஸ்துலா

ஈடு இணையற்றவள்

நீலசிகுரா

கருநீல வண்ணக் கூந்தலை உடையவள்

நிரபாயா

அபாயம் அல்லது அழிவுக்கு அப்பார்ப் பட்டவள்

நிரத்யாயா

வரையறைகளுக்கு உட்படாது கடந்தவள்

துர்லபா

அடைவதற்கும் வெல்வதற்கும் அரியவள்

துர்கமா

அணுகுவதற்கு கடினமானவள்

துர்கா

பக்தர்களுக்கு கவசமாகி பாதுகாப்பவள்

துஃக

துக்கம் மற்றும் துயரங்களை

ஹந்த்ரீ

அழிப்பவள்

சுக

மகிழ்ச்சியையும்,ஆனந்தத்தையும்

ப்ரதா

வழங்குபவள்

 

 

தனக்கு இணையாக எந்த ஈடும் இணையும் இல்லாதவள்.அழகிய கரு நீலவண்ணக் கூந்தலை உடையவள். அபாயம் அல்லது அழிவுக்க அப்பார்ப் பட்டவள்.வரையறைகளைக் கடந்து அவற்றிற்கு உட்படாதவள்.வெல்லப் படுவதற்கும்,அடைவதற்கும் அரியவள்.அணுகுவதற்கு கடினமானவள்.பக்தர்களின் கவசமாக இருந்து பாதுகாப்பவள்.துக்கம் மற்றும் துயரங்களை அழிப்பவள்.சுகத்தையும் மகிழ்ச்சியையும் வழங்குபவள்

இன்று இந்த  ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

சனி ஜூன்,29,, 2024

 

  

Friday, June 28, 2024

 

ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம் 22

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்                                                        

வியாழன்,,ஜூன் 27  2024

அனைவருக்கும் வணக்கம்

இன்று லலிதா சஹஸ்ர நாமத்தின்                                                                                  46,47 மற்றும் 48 வது என மூன்று                                                          ஸ்லோகங்களைப் பார்ப்போம்

இந்தமூன்று ஸ்லோகங்களிலும் அம்பாளின் நிர்குண வடிவங்களே தொடர்ந்து விளக்கப் பட்டுள்ளன அம்பாளின் தனித்துவத்தையும்,இயல்பையும் சில பெயர்களால் மட்டுமே விளக்கிவிட முடியாது .எனினும் இயன்றவரை அவற்றை விளக்க முற்படபட்டுள்ளது.இவைகள் அனைத்துமே அம்பாலின் சூக்க்ஷம வடிவங்களையே போற்றுகின்றன

46) னிஷ்காரணா, னிஷ்களங்கா, னிருபாதி, ர்னிரீஸ்வரா |
னீராகா, ராகமதனீ, னிர்மதா, மதநாஸினீ || 46 ||

நிஷ்காரணா

காரணமற்று முதன்மையாகத் திகழ்பவள்

நிஷ்களங்கா

களங்கமற்று தூய்மையாய் திகழ்பவள்

நிருபாதி

வரையறை யற்றவள்

ஈஷ்வர

தலைவர் முதன்மையான இறைவர்

நிரீஷ்வரா

தனக்கு அப்பார்ப் பட்ட தலைமை அற்றவள்

ராக

புல இன்பத்தின் அபிலாஷைகள்

நிராகா

புலங்களின் இச்சைக்கு கட்டுப் படாதவள்

ராகமதனி

லோகாபிலாஷைகளை அழிப்பவள்

மதம்

ஆணவம்,செறுக்கு

நிர்மதா

ஆணவம் / செறுக்கு அற்றவள்

மத

ஜீவங்களின் ஆண்வம் என்னும் மாயை

நாஸினீ

ஒதுக்கி அழிப்பவள்

 

 

அம்பாள்காரணமற்றுமூலமாகத்திகழ்கிறாள். களங்கமில்லாத்தூய்மையானவள்.வரையறைக்கு உட்படாமல் எல்லையற்று விளங்குபவள்.ப்ரபஞ்சத்தில் தனக்கு அப்பாற்பட்ட தலைமையில்லாதவள்.ஐம்புலன் களின் இச்சைக்குக் கட்டுப் படாதவள்.லோகத்தின் அப்லாஷைகளை அழித்து ரக்ஷிப்பவள்.ஜீவன்களின் கர்வம் என்ற குணத்தை அழித்துக் காப்பவள்.


47) னிஸசிந்தா, னிரஹங்காரா, னிர்மோஹா, மோஹனாஸினீ |
னிர்மமா, மமதாஹம்த்ரீ, னிஷ்பாபா, பாபனாஸினீ || 47 ||

நிஷஸிந்தா

கவையோ பதற்றமோ அற்றவள்

நிர்

இல்லாதவள்

அஹங்காரா

மமதை என்ற தீய குணம்

னிர்

அப்பார்ப் பட்டவள்

மோஹா

மாயை,குழப்பம்,கவனச் சிதறல்

மோஹநாசினீ

மோஹ மாயைகளை அழிப்பவள்

நிர்மம

தான் தனதெனும் சுய நலம் அற்றவள்

மமதா

தனது என்ற சுயநலத்தை

ஹந்த்ரீ

அழிப்பவள்

நிஷ்

ஆட்படாதவள்

பாபா

பாபங்களுக்கு

பாப

பாபச் செயல்களை

நாஸ்னீ

அழித்து நாஸம் செய்பவள்

கவலையோ பதற்றமோ அற்றவள் தெளிவான சிந்தனை உடையவள்.மமதை என்னும் அஹங்காரம் அற்றவள்.மோஹம் என்னும் மாயை களுக்கு அப்பாற் பட்டவள்.அவளடியை சரணடிந்தவர்களின் மோக வலையை அறுத்தெரிந்து நாஸம் செய்பவள்.தன்னலமற்றவள்.இருமையற்ற ஒருமைப் பாட்டின் தத்துவமாய் விள்ங்குபவள்.ஜீவாத்மாக்களின் தான் தனது என்ற சுய நலத்தை ஒழிப்பவள்.பாபங்களுக்கு உட்படாமல் அப்பார்ப் பட்டவள்.ஜீவங்களின் பாபங்களை நசுக்கி அழிப்பவள் பாப விமோசனத்திற்குக் காரணமாயிருப்பவள்                                                                         

48) னிஷ்க்ரோதா, க்ரோதஸ்மனீ, னிர்லோபா, லோபனாஸினீ |
னிஃஸம்ஸ்யா, ஸம்ஸ்யக்னீ, னிர்பவா, பவநாஸினீ || 48 ||

நிஷ்க்ரோதா

கோபம்,ஆத்திரங்களுக்கு ஆட்படாதவள்

க்ரோத

கோபம் ஆத்திரம்

ஸமனீ

சாந்தப் படுத்துபவள்

நிர்

இல்லாத

லோபா

லோபம் என்னும் பேராசையற்றவள்

நாசினீ

அழிப்பவள்

லோப

பக்தர்களின் பேராசையை

நிஸ்ஸம்ஸ்யா

ஐயங்களுக்க அப்பாற்பட்டவள் அம்பாள்

ஸம்ஷ்யக்னீ

ஐயங்களை தகர்த்து தெளிவாக்குபவள்

பவா

ஆரம்பம்,மூலம்

நிர்பவா

ஆரம்பமும் முடிவும் அற்றவள்

பவநாசினீ

பிறப்பு இறப்பு சுழற்சியை தவிர்ப்பவள்

அம்பாள் ஆத்திரம் கோபம் போன்ற உணர்வுகளுக்க அப்பார்ப் பட்டவள்,ஜீவராசிகளிம் கோபம் ஆத்திரம் போன்ற குணங்களை சாந்தப் படுத்துபவள்.லோபம் என்னும் பேராசை அற்றவள்.அவ்வறே அந்த லோபம் பேராசை என்ற பக்தர்கள்ன் குணங்களையும் அழிப்பவள். ஐயங்களுக்கு அப்பார்ப் பட்டவள். அதேபோன்று பக்தர்களின் ஐயங்களைப் போக்குபவள்.ஆரம்பமும் முடிவுமல்லாத ஆதியந்தமற்றவள்.பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை தவிர்ப்பவள்.கானல் நீர் போன்ற கற்பனையான பிம்பங்களுக்கு பொய்மைக்கு ஆட்படாதவள்

இன்று இந்த மூன்று ஸ்லோகங்களுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன் பொருளுடன் படித்துணர்ந்து அம்பிகையின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்.

ஓம் நமசிவாய:                                                              

சிவதாஸன் ஜகன்நாதன்                                                         

வியாழன்,, ஜூன்,27,, 2024