திருவையாறு பதிகம்
இன்று திருவையாறு பதிகத்தின் பிற பாடல்களைப் பார்ப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
இரண்டாவது பாடல்
போழிளங்
கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம்
போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி
வலவன் நின்றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி
பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே
னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
சந்திரனுடைய
இளைப்பாகிய பிறையை
முடிமாலையாகச் சூடிய பெருமானை ,
பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த
பார்வதியோடு இணைத்துப்பாடி ,
` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , `
அவர்களுக்கு
அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு
வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில்
ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட
இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும்
சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன்
கண்டறியாதவற்றைக் கண்டேன் .
மூன்றாவது பாடல்
எரிப்பிறைக்
கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த
விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயா றடைகின்ற
போது
வரிக்குயில்
பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே
னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .
நான்காவது
பாடல்
பிறையிளங்
கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம்
பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம்
பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம்
பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே
னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்
பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .
இன்று
இந்த மூன்று அழகான பாடல்களையும் படித்து மக்ழுங்கள்
அடுத்த
பதிவில் மீண்டும் சந்திப்போம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment