ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும் சிவதாஸனின் இனிய கலை
வணக்கம். இன்று ஸ்ரீ வைத்யநாதாஷ்டகத்தின் ஐந்தாவது வது மற்றும் ஆறாவது ஸ்லோகங்களைப்
பார்ப்போம்
5-வது ஸ்லோகம்
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ: வாக்ஸ்ரோத்ரனேத்ராங்க்ரிஸுகப்ரதாய குஷ்டாதிஸர்வோன்னதரோகஹந்த்ரே ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய ॥ 5॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ
வாக் ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:
பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு
வாக்ஸ்ரோத்ரனேத்ராங்க்ரிஸுகப்ரதாய
அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும்। குஷ்டாதிஸர்வோன்னதரோகஹந்த்ரே
குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய
ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான
ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
6-வது ஸ்லோகம்
வேதாந்தவேத்யாய ஜகன்மயாய
யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய ।
த்ரிமூர்திரூபாயஸஹஸ்ரநாம்னே ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய ॥ 6॥
ஸம்போ மஹாதேவ
ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாதேவ ஸம்போ மஹாதேவ
ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாதேவ
வேதாந்தவேத்யாய
வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும்,
ஜகன்மயாய
உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும்,
யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய ।
யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும்,
த்ரிமூர்திரூபாய
பிரம்ம-விஷ்ணு ருத்ர வடிவாய் விளங்குபவரும்
ஸஹஸ்ரநாம்னே
ஆயிரம் நாமங்களை உடையவருமான
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய
ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
இந்த அழகான இரண்டு ஸ்லோகங்களையும்
இன்று பொருளோடு படித்து மகிழ்ந்து இன்புற்று ஈசன் அருள் பெற்று உய்யுங்கள்
நாளை மீண்டும் வைத்யநாதாஷ்டகத்தின்
இறுதிப் பகுதியுடன் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment