Wednesday, May 15, 2024

8. வேள்பட விழி செய்து

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் எட்டாவது பாடலைப் பார்ப்போம்

சர்வேஸ்வரர் நமது உள்ளம்புகுந்து அங்கேயே குடிகொண்டிருப்பாரேயானால் கொடிய குணம் கொண்ட இலங்கை ராவணன் போன்ற வல்லரக்கர்களும் நல்லவர்களாக மாறி நன்மையையே செய்வார்கள் மேலும் ஆழ்கடலும் அங்கு வாழும் கொடியவைகளுன் நல்லவையாய் அமையும் அவர்கள் மிக நல்லவர்களாக மாறி விடுவர் எங்கிறார் திருஞான சம்பந்தர் அவர்கள்

வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து
அறவுருவான எருதின் மேல் அமர்ந்து
அழகிய உமையன்னையுடன் சேர்ந்து
ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி
என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்
ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது
ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.
இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

வேள்பட விழி செய்து அன்று - அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - அறவுருவான எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.
இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

இன்று இந்த அழகான பாடலை பொருளோடு படித்துணர்ந்து ஈஸனின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை அடுத்த பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

No comments:

Post a Comment