7.செப்பிள முலை நன்மங்கை
சிவதாஸன் ஜகன்நாதன்
இன்று கோளறு பதிகத்தின் ஏழாவது பாடலைப் பார்ப்போம் இதில்
சர்வேஸ்வரர் நமது இதயத்திலே புகுந்து தங்கிவிட்டால் பலவிதமான நோய்களும் நமை அண்டமாட்டா.மேலும்
அவைக நல்லவைகளாக மாறி நம்மைவிட்டு விலகி ஓடிவிடும் என்கிறார்
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
அழகான
கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக
விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம்
சிவபெருமான் சேரும் இடம்
ஒப்பு கூறத்தக்க இளமதியமும்
கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து
தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு
நிலை நின்றதனால்
வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற
எந்த நோயும்
வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது
சிவனடியார்களுக்கு அந்த வினைகளும்
மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை
(அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய்
இருக்கும்)
செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான
உமையன்னை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார் - விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம்
சிவபெருமான் சேரும் இடம்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு
கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு
கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - தானாகவே
என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான
காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த
நோயும்
வினையான வந்து நலியா - வினைப்பயனாக
வந்து என்னை வாட்டாது
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும்
மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும்
மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய்
இருக்கும்
இந்த அழகான ஏழாவது பாடலை பொருளுடன்
படித்துணர்ந்து இன்புற்று சர்வேஸ்வரரின் பேருள் பெற்றுய்யுங்கள் நாளை அடுத்த பாடலுடன்
சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment