6 வாள்வரி அதளதாடை
சிவதாஸன் ஜகன்நாதன்
இன்று கோளறு பதிகத்தின் ஆறாவது பாடலைப் பார்ப்போம்
சிவபெருமானை னாம் உள்ளத்திலேஎ
புகுத்தி இருத்திக்
கொண்டேமேயானால், கொடிய புலியும் வலிய யானையும்,காட்டுப்
பன்றியும்,கொடும் நாகமும்,கரடியும்கொலைவெரியுடனான சிங்கம் போன்ற எல்லாக் கொடிய விலங்குகளும் நல்லவைகளாக
மாறி மிக நல்லவைகளாக இருக்கும்
என்று சொல்லுகிறார் காழிப் பிள்ளை அவர்கள்
பரமேஸ்வரனை நம் உள்ளத்தில் நிறுத்தினால் கொடுமையையே
தன் இயல்பாக்கொண்ட கொடிய
விலங்குகளும் நல்லவையாக மாறிவிடும்
என்பதையே இந்தப் பாடல் உணர்த்துகின்றது
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட ஆன மேலாடையும்
வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும்
அணிந்த சிவபெருமான்
அன்பு மனையாளோடு சேர்ந்து
தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும்
கங்கை நதியும் தன் திருமுடியின்
மேல் சூடி
தானாக என் உள்ளம் புகுந்து அங்கே
நிலைத்துநின்றதால்
கொடுமையே வடிவான பயங்கரமான யானையும் காட்டுப் பன்றியும்
கொடிய நாகமும்
கரடியும் ஆளைக் கொல்லும் சிங்கமும்
அவை அடியார்களுக்கு மிக
நல்லவைகளாக இருக்கும்
வாள்வரி அதளதாடை - வாளைப்
போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்
வரிகோவணத்தர் - வரிகளையுடைய
புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்
மடவாள் தனோடும் உடனாய் - அன்பு
மனையாளோடு சேர்ந்து
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும்
வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி
என் உளமே புகுந்த அதனால் - தானாக என்
உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்
கோளரி உழுவையோடு - கொடுமையே
வடிவான புலியும்
கொலையானை - பயங்கரமான
யானையும்
கேழல் - காட்டுப்
பன்றியும்
கொடுநாகமோடு - கொடிய நாகமும்
கரடி - கரடியும்
ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்
நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை
அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்
இன்று
இந்தப் பாடலை பொருளோடு படித்துணர்ந்து சர்வேஸ்வரின்
பேரருள் பெற்றுய்யுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment