ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
அனைவருக்கும் சிவதாஸனின் இனிய கலை வணக்கம். இன்று ஸ்ரீ வைத்யநாதாஷ்டகத்தின்
ஏழாவது வது மற்றும் எட்டாவது ஸ்லோகங்களையும் இந்த ஸ்லோகத்தின் பல சுத்தியையும் பார்ப்போம்
பார்ப்போம்
ஏழாவது ஸ்லோகம்
ஸ்வதீர்தம்ருத் பஸ்மப்ருதாங்க
பாஜாம் பிஸாசது:கார்திபயாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம் ஸ்ரீவைத்யனாதாய நம: ஸ்வாய
॥
7॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
ஸ்வதீர்தம்ருத் தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும் பஸ்மப்ருதாங்க பாஜாம் தனது வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோவிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிஸாசது:கார்திபயாபஹாய । பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீவைத்யனாதாய நம: ஸ்வாய ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
எட்டாவது ஸ்லோகம்
ஸ்ரீனீலகண்டாய வ்ருஷத் வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய
॥
8॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ
ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
ஸ்ரீனீலகண்டாய விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், வ்ருஷத் வஜாய ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும் ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீவைத்யனாதாய நம: ஸீவாய ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்
பலசுத்தி ஒன்பதாவது ஸ்லோபம்
வாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோகஹரேதி ச ஜபேன்நாமத்ரயம்
நித்யம் மஹாரோகனிவாரணம் ॥ 9॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ
ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
வாலாம்பிகை என்ற தையல்
நாயகி அம்மையுடன், வைத்யநாதர் என்ற பரமேஸ்வரர் நாமத்தை தினம் நாம் ஜபித்தால் உலகில்
உள்ள எல்லா வியாதிகளும், துன்பங்களும் மஹா ரோஹம் எனப்படும் பெரும் வியாதிகளும் திண்னமாக
அற்றுப் போய்விடும் என்று அறுதியிட்டு சொல்லுகிறார்
அன்பர்களே இந்த மூன்று ஸ்லோகங்களையும் பொருளோடு படித்துணர்ந்து
சர்வேஸ்வரர் பேரருள் பெற்றுய்யுங்கள்
இத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். ஏதேனும் சந்தேகம் உள்ளவர்கள்
தயங்காமல் என்னிடம் கேட்கலாம், அணுகலாம்.
நன்றி
வணக்கம்
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment