5 நஞ்சணி கண்டன்
சிவதாஸன்
ஜகன்நாதன்
இன்று
கோளறு பதிகத்டின் ஐந்தாவது பாடலைப் பார்ப்போம் இதில் சர்வேஸ்வர் அடியார்களின் உள்ளத்திலே புகுந்து
உறைந்து உள்ளிருந்தால் பலவிதமான இடர்களை அளிக்க்கூடிய பல சக்திகளும் நல்லவையாகமாறி
அடியவர்களுக்கு நன்மையை மட்டும் செய்வார்கள் என்று காழிப் பிள்லையவர்கள் விளக்குகின்றார்
நஞ்சணி
கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை
முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும்
மின்னும்
மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல
நல்ல
அடியாரவர்க்கு மிகவே.
தேவர்களும்
அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த
உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே
தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய என் தந்தை
அன்பும் அருளும் மிக்க அன்னை
உமையவளோடு அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்
அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு
நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும் (சிவந்த) கொன்றை மலரையும்
தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு
அவனது அளவில்லா அருளினாலே என்
உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்
வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்
உருமும் இடியும் மின்னலும்
மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும்
(நிலம், நீர், காற்று, தீ, விண்)
இறைவனது பெருமையையும் அவனடியார்களது
பெருமையும் எண்ணி அஞ்சிடும்
அதனால் அவை அடியார்களுக்கு மிக
நல்லவைகளாக இருக்கும் எனவே இந்த
சக்திகளினால் நமக்கு எந்ததீமையும் என்று வராது என்கிறார்
நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை
மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த
உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே
தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய
எந்தை - என் தந்தை
மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும்
அருளும் மிக்க அன்னை உமையவளோடு அறவுருவாகிய எருதின் மேல் ஏறி வரும் எங்கள்
பரமனாகிய சிவபெருமான்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும்
ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி
மலரையும் (சிவந்த) கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு
என் உளமே புகுந்த அதனால் - அவனது
அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்
வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும்
கோபமும் மிகுந்த அவுணரும்
உருமிடியும் மின்னும் - உருமும்
இடியும் மின்னலும்
மிகையான பூதமவையும் - மிக்க
சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)
அஞ்சிடும் நல்ல நல்ல - இறைவனது
பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்
அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக
இருக்கும்
இந்த அழகான பாடலை இன்று பொருளுடன் படித்துணர்ந்து
இன்புற்று ஈசனருஅள் பெற்றுய்யுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment