பஞ்சபூதத் தலங்கள்
பஞ்சபூதத் தலங்கள்
என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும்.
இத்தலங்களில் மூலவராக உள்ள
சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள்
அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும்
பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி
இருக்கும்.
பஞ்சபூதம் பெயர்க்காரணம்
பஞ்சம் என்பது ஐந்து என்ற
எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாகப் பஞ்சலோகம் என்பது 5 உலோகங்களின் கலவை எனலாம். இது போல முக்கியமான 5 கூறுகளினை 5 பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள்
என்பர். ஒவ்வொரு சிவத்தலமும் ஒரு வரலாறு காரணமாகவும், ஏதேனும் ஒரு தன்மையினாலும் அல்லது இயற்கையான நிலவரத்தினாலும்
இப்பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
சிவத்தலங்கள்
பஞ்சபூதங்களுக்கு உரிய 5 சிவத்தலங்கள்
பின்வருமாறு:
படிமம் |
கோவில் பெயர் |
குறிக்கும் பூதம் |
லிங்கத்தின் பெயர் |
இடம் |
நிலம் |
பிருத்வி
லிங்கம் |
|||
நெருப்பு |
அக்னி
லிங்கம் அல்லது ஜோதி லிங்கம் |
|||
நீர் |
அப்பு
லிங்கம் அல்லது ஜம்பு லிங்கம் |
|||
ஆகாயம் |
ஆகாச
லிங்கம்] |
|||
காற்று |
வாயு
லிங்கம் |
ஐந்து முக
விளக்கும் தீபாராதனைகளும்
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை
நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம்.
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி
ஆகியவை.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்குக்
கோவில் வழிபாடுகளில் ஐந்து முக விளக்குகள் ஏற்றுவதும், தீபாராதனைகளும்
நடைபெறுகின்றன
பஞ்சபூதங்களாக விளங்கும் சர்வேஸ்வரை வணங்கி அவரின் பேரருள் பெற்றுய்வோமாக
மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment