ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
சிவதாஸன்
ஜகன்நாதன்
இன்று
ஸ்ரீ வைத்யநாதாஷ்டகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தைப் பார்ப்போம்
இரண்டாவது
ஸ்லோகம்:-
2.கங்கா
ப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசனாயஸ்மரகாலஹந்த்ரே ஸமஸ்த தேவை
ரபிபூஜிதாய
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய
॥
2॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
இதன் தமிழ்ப் பொருள்
கங்கா ப்ரவாஹேந்து கங்கையின் ப்ரவாகத்தையும் சந்திரனையும் ஜடாதராய ஜடையில் தாங்கியவர் த்ரிலோசனாய மூன்றுகண்களஉடையவரும் ஸ்மர காலஹந்த்ரே மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும் ஸமஸ்த தேவை ரபி எல்லா தேவர்களாலும் பூஜிதாய பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
இந்த அழகான பொருள் நிறைந்த எளிமையான ஸ்லோகத்தை இன்று பொருளுடன் படித்து மகிழ்ந்து அந்த வைத்யநாதேஸ்வரரின் பேறருள் பெற்றுய்யுங்கள் நாளைமீண்டும் மூன்றாவது ஸ்லோகத்துடன் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment