ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கும் சிவதாஸனின் இனிய கலை வணக்கம். இன்று ஸ்ரீ வைத்யநாதாஷ்டகத்தின்
மூன்றாவது மற்றும் நாலாவது ஸ்லோகங்களைப் பார்ப்போம்
3.மூன்றாவது
ஸ்லோகம்
பக்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பினாகினே துஷ்டஹராய நித்யம் । ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய ॥ 3॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
பக்த:ப்ரியாய
பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும்
த்ரிபுராந்தகாய
திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும்,
பினாகினே
பினாகம் என்ற வில்லை தரித்தவரும்,
துஷ்டஹராய நித்யம் ।
தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும்
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய
ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்
பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்
4.நாலாவது ஸ்லோகம்
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரனாஸகர்த்ரே முனிவந்திதாய । ப்ரபாகரேந்த்வக்னி விலோசனாய
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய ॥ 4॥
ஸம்போ மஹாதேவ ஸம்போமஹாதேவ ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ஸம்போ மஹாதேவ
ஸம்போமஹாதேவ
ஸம்போ மஹாமஹாதேவ ஸம்போ மஹாஹேவ ॥
ப்ரபூதவாதாதி பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய ஸமஸ்தரோக எந்த ஒரு நோயையும் ப்ரனாஸகர்த்ரே நாசமாக்குகிறவரும் முனிவந்திதாய மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும்,
ப்ரபாகரேந்த்வக்னி சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும்
விலோசனாய முக்கண்களாகக் கொண்டவருமான
ஸ்ரீவைத்யனாதாய நம: ஸிவாய ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும் மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
இந்த அழகான இரண்டு ஸ்லோகங்களையும் இன்று பொருளோடு படிடித்துணர்ந்து சர்வேஸ்வரரின் பேரருள் பெற்றுய்யுங்கள் நாளை அடுத்த இரண்டு ஸ்லோகங்களுடன் மீண்டும் சந்திப்ப
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment