10.கொத்தலர் குழலியோடு
சிவதாஸன் ஜகன்நாதன்
இன்று கோளறு பதிகத்தின் பத்தாவது பாடலைப் பார்ப்போம் இதில் பரமேஸ்வரர்
பக்தர்களின் உள்ளத்திலே புகுந்து குடிகொண்டிருந்தால் பௌத்தர் சமணர் போன்ற பிற மத்தினரின்
வாதங்களை எதிர்க்கவும்,வாதில் அவர்களை எளிதில் வென்றிடவும் அவர்கள் நல்லவர்களாக மாறவும்
முடியும் என்கிறார்
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்)நாகம் முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
கொத்தாக மணம் மிகுந்த மலர்களை கூந்தலில்
அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
இறைவனின் குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத்
தோன்றும் திருவிளையாடல்கள் செய்பவரான
பரமேஸ்வர் ரகங்கை
என்னும் நீரையும்
பிறை நிலவினையும்
பாம்பினையும்
தன் திருமுடிமேல் அணிந்து
என் உள்ளம் புகுந்து நிலை நின்றதனால்
பௌத்தரையும் சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின்
திருநீற்றின் பெருமையில் எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக
நல்லவையாக மாறும்
கொத்தலர் குழலியோடு - கொத்தாக
மணம் மிகுந்த மலர்களை கூந்தலில் அணிந்திருக்கும் உமையன்னையோடு
விசயற்கு நல்கு - விசயனான அருச்சுனனுக்கு அருள் செய்வதற்காக
குணமாய வேட விகிர்தன் - இறைவனின்
குணங்களைப் பறைசாற்றும் உருவினை விடுத்து மாய உருவில் வேடனாகத் தோன்றும்
திருவிளையாடல்கள் செய்பவன்
மத்தமும் - கங்கை என்னும் நீரையும்
மதியும் - பிறை நிலவினையும்
நாகம் - பாம்பினையும்
முடிமேலணிந்து - தன் திருமுடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம்
புகுந்து நிலை நின்றதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே - பௌத்தரையும்
சமணர்களையும் வாதப்போரில் செருக்கழிக்கும் அண்ணலின் திருநீற்றின் பெருமையில்
எனக்கு ஆழ்ந்த திடமான நம்பிக்கை உண்டு
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே - அத்தகு
எதிர்ப்புகளும் சிவனடியார்களுக்கு நல்லவையாக மாறும் அவை மிக நல்லவையாக மாறும்
அழகான இந்த பாடலை பொருளோடு படித்து மகிழ்ந்து இன்புற்று
ஈஸன் அருள் பெற்றுய்யுங்கள்
நாளையோடு இந்த கோளறு பதிகம் பதிவு நிறைவடைகின்றது
நாளை இந்த பதிகத்தின் பலசுத்திப் பாடலைப் பார்ப்போம்
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment