9 பல பல வேடமாகும்
சிவதாஸன்
ஜகன்நாதன்
இன்று கோளறு
பதிகத்தின் ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம் இதில் பரமேஸ்வர் நமது உள்ளத்திலே புகுந்து அங்கே குடிகொண்டிருந்தால்,நான்முகனும்
திருமாலும் உயிர்பறிக்கும் காலனும் பெரும் கடல்களும் மேருவைப் போல உயர்ந்த மலைகளும்,
மற்றும் பலவும் நல்லவர்களாகவே அமையும்
பல பல
வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல்
அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு
தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே
அடியார்கள் விரும்பியவாறு வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி பெண்ணாகிய
உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டருள் புரிந்து
விடையின் மேல் ஏறிவரும் எங்கள் பரமன்
நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும்
தன் திருமுடி மேல் அணிந்து
தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே
அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும்
தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது
போன்ற பலவும்
அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை
அடியார்களுக்கும் மிக மிக நல்லவையாகவே அமையும்.
பல பல வேடமாகும் பரன் -
அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள்
புரியும் பரமன்
நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்
பசுவேறும் எங்கள் பரமன் - விடையின்
மேல் ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய
கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் - தானாகவே
(என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து
நிலைநின்றதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான
பலவும் -
மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும்
தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது
போன்ற பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு
மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.
இன்று இந்த அழகான ஒன்பதாவது பாடலை பொருளோடு படித்துணர்ந்து
சர்வேஸ்வரரின் பேரருள் பெற்றுய்யுங்கள் நாளை அடுத்த பாடலுடன் சந்திப்போம்
ஓம்
நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment