தேனமர் பொழில்
கொள்
சிவதாஸன் ஜகன்நாதன்
அனைவருக்கௌம்
வணக்கம் .இன்று நாம் நம்து கோளறு பதிகப் பதிவின் இறுதிக் கட்த்துக்கு வந்துள்ளோம் இது
நாள்வரைகோளறுபதிகத்தின் பத்து பாடல் களையும்ன் அவற்றிர்க்கான விளக்கங்களையும் பார்த்தோம் இன்று பதினோராவது
பாடலான கோளறு பதிகத்தின் பலசுத்தியைப் பார்ப்போம்
திருஞானசம்பந்தர்
தனது ஒவ்வொரு பதிகத்திலும் பதினோராவது பாடலாக பலசுத்தியை சொல்லுவார்
தேனமர்
பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை
வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள்
வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
தேன் நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும்
கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு நோக்கினும் கரும்பாலைகளும்
செந்நெல் எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்
நான்முகனாகிய பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத்
தங்கியிருக்கும் பிரமாபுரமாகிய சீர்காழியின்
மறைஞானமும் மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான
திருஞான சம்பந்தர்
தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை
நலியாத வண்ணம் உரைத்த
சிறந்த இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற
அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி
இதிலே ஆணை நமதே என்று உறுதியிட்டு சொல்வது சிறப்பாகும்
எனில் கோளறு பதிகம் மூலம் ஈசனை மனதிலிருத்துபவர்களை கோள்கள் மற்றுமல்ல எந்தவைதமான்
தீமைகளும் தீயவையும் அண்டா என்பதே கருத்தாகும்
தேனமர் பொழில் கொள் ஆலை - தேன்
நிரம்பிய மலர்கள் நிரம்பிய சோலைகளும் கரும்பு மிகுதியாக விளைவதால் எங்கெங்கு
நோக்கினும் கரும்பாலைகளும்
விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ - செந்நெல்
எங்கும் மிகுதியாக விளைந்து சிவந்த பொன்னைப் போல் திகழ இருக்கும்
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து - நான்முகனாகிய
பிரம்மனை முதலாகக் கொண்டு எல்லாத் தேவர்களும் நிலையாகத் தங்கியிருக்கும்
பிரமாபுரமாகிய சீர்காழியின்
மறைஞான ஞான முனிவன் - மறைஞானமும்
மறைகளைத் தாண்டிய இறையருளால் பெற்ற மெய்ஞ்ஞானமும் உடைய முனிவனான திருஞான சம்பந்தர்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத
வண்ணம் உரை செய் - தன்
நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம்
உரைத்த
ஆன சொல் மாலை ஓதும் - சிறந்த
இந்தச் சொல்மாலையை ஓதுகின்ற
அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே - அடியவர்கள்
வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி
சிவனேசச் செல்வர்களே என்ன அழகான பதிகம் . இதை உங்களோடு
இந்த பதினொரு நாட்களாக பகிர்ந்துகொள்ள எனக்கு ஒரு நல் வாய்ப்பு நல்கிய சர்வேஸ்வரை வணங்கி
நாளை முதல் வைத்யநாதாஷ்டகம் பற்றிய பதிவில் சந்திப்போம் வணக்கம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment