Sunday, May 19, 2024

 ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம்

சிவதாஸன் ஜகன்நாதன்

சிவநேச செல்வர்கள் அனைவருக்கும் சிவதாஸனின் வணக்கம் இன்றுமுதல் நாம் வைத்யநாதாஷ்டகம் என்ற ஒரு மிகச் சிறந்த அஷ்டகத்தைப் பார்க்க இருக்கின்றோம். இதன் பெருமைகளை ஸ்ரீ மஹாப் பெரியவர் அவர்களே தன்னுடைய அருளுரையில் விரிவாக விளக்கியுள்ளார்கள்

இந்த அஷ்டகத்தின் ஒன்பதாவது ஸ்லோகமான் பலசுத்தியில் பவ ரோஹ-----சர்வ ரோஹ நிவாரணம் என்று வருகிறது

இதிலே பவ என்றால் உலகம் ரோக என்றால் வியாதிகளும் துன்பங்களும் என்று பொருள் அதேபோல் சர்வ ரோக என்றால் சகலவிதமான் நோய்களும் என்று பொருளாகும்

எனவெ இந்த ஸ்லோகம் உலகத்தில் உள்ல எல்லாவித துன்பங்களுக்கும்,வியாதிகளுக்கும்  மருந்தாக அமையும் என்று கூறுகின்றது

ஆதி சங்கர்ர் எழுதிய ஸ்லோகங்களுள் இது மிக சிறந்தவைகளுள் ஒன்றாகும்

சமஸ்க்ருதமாக இருந்தாலும் எளிதில் புரியும்படியாக உள்ளதாகும்.

வேதங்களில் “பிஷக்” (வைத்தியன்) என்ற பதம் அதிகமாக சிவபெருமானையே குறிக்கிறது. அவரையே வைத்தியர்களுக்கெல்லாம் நாதர் வைத்தியநாதர் என்று உலகம் போற்றுகிறது.


 

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோவில்

 தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில்உள்ளது. இத்தலத்திலேயே இராமர் தனக்குதவிய ஜடாயுவிற்கு (கழுகு) அந்திமக்கிரியையை செய்தார் என்றும், அங்காரகனுக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகம் நிவர்த்தி ஆன தலம் என்றும், குமரனாகிய முருகப்பெருமான் போருக்கு முன் தன் அன்னையிடம் வேலாயுதம் பெற்ற தலம் என்றும் அறியப்படுகிறது.

பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் வைத்தியநாதர் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

இதேபோன்று எங்கள் ஊர் திருவெண்காட்டிலும் நவக்ரஹங்கள் திசைக்கொருவராக இல்லாமல் வரிசையாக நின்று காக்ஷி அளிக்கிறார்கள்

நோய் தீர்க்கும் திருச்சாந்து

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர்.


 

டாயு குண்டம்

இத்தலத்தில் சம்பாதி, டாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் டாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் டாயு குண்டம் எனப்பட்டது.

அங்காரகனுக்கு (செவ்வாய் கிரகம்) வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோவில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.

இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

வைத்தியநாதரைப் போற்றும் விதமாக இவ்வைத்யநாத அஷ்டகம் விளங்குகிறது.” இதன் இறுதியில் உள்ள சுலோகம் பா(வா)லாம்பாகேசா! வைத்யேசா! பவரோகஹரா! இந்த மூன்று நாமங்களை தினமும் சொல்பவர்க்கு மஹாரோகம் நிவரத்தி ஆகும் என்று அறுதியிடுகிறது.


 

 

தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்

இந்த துதியை பாராயணம் செய்தால் தீராத நோயெல்லாம் வைத்தீஸ்வரன் திருவருளால் தீரும். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தவுடன் வைத்தீஸ்வரனை நினைத்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சான்றோர்கள் கருத்து.


 

வைத்யனாதாஷ்டகம்

வைத்யநாதாஷ்டகத்தில் எட்டு ஸ்லோகங்களும் பலசுத்தியாக ஒன்பதாவது ஸ்லோகமும் உள்ளன ஒவ்வொரு ஸ்லோகத்தின் நிறைவிலும் பரமேஸ்வரின் நாமத்தை பதினாறு முறைகள் சொல்லவேண்டும் ஆக மொத்தமாக நாம் ஒன்பது ஸ்லோகங்களையும் சொல்லி முடிக்கும்போத் பரமனின் நாமத்தை 144 முறை சொல்லியிருப்போம் சம்போ மஹாதேவ என்று சொல்லும் போது சம்பு, மற்றும் மஹா தேவா என்று இரண்டு நாமாக்களை ஜபிக்கின்றோம்

முதல் ஸ்லோகம்

ஸ்ரீராமஸௌமித்ரிஜடாயு வேத                                                             ஷடானனாதித்ய குஜார்சிதாய  ஸ்ரீனீலகண்டாயதயாமயாய                                                                                                      ஸ்ரீவைத்யனாதாயநம:சிவாய 1

ஸம்போ மஹாதேவ  ஸம்போமஹாதேவ                                                                                                                       ஸம்போ மஹாமஹாதேவ                                                                                                ஸம்போ மஹாதேவ                                                                                                       ஸம்போ மஹாதேவ  ஸம்போமஹாதேவ                                                                                                                      ஸம்போ மஹாமஹாதேவ                                                                                          ஸம்போ மஹாஹேவ  [[

ஸ்ரீ ராம------------------ஸ்ரீ ராமரும்                                                                            சௌமித்ரி-------------லக்ஷ்மணரும்                                                                             ஜடாயு-------------------- ஜடாயு பறவையும்                                                                           வேத--------------------- வேதங்களும்                                                                          ஷடானன்--------------ஆறுமுகன்                                                                                  ஆதித்ய----------------சூரியன்                                                                                                குஜா--------------------அங்காரகன்                                                                            அர்சிதாய------------மேற்சொன்னவர்களால் பூஜிக்கப்பட்ட                                     நீலகண்டாய----------ஆலகாலத்தை கழுத்திலேகொண்டவரும்                                 தயா மயாய---------- கருணையே வடிவானவருமான                                                  ஸ்ரீ வைத்ய நாதாய----ஸ்ரீ வைத்ய நாதரான                                                               நம: சிவாய---------- பரமேஸ்வரை நமஸ்கரிக்கின்றேன்     


 
ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

எவ்வளவு எளிமையா இந்த சமஸ்க்ருத சொற்கள் இருக்கின்றன என்று பாருங்கள்.மனம் ஒன்றிப் படித்தால் சமஸ்க்ருதமும் எளிமையான மொழியே                                                   

இன்று இத்துடன் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகத்தின் முதல் ஸ்லோகத்தினை நிறைவு செய்கிறேன். நாளை மீண்டும் அடுத்த ஸ்லோகத்துடன் சந்திப்போம்

 

 

ஓம் நமசிவாய:

 

சிவதாஸன் ஜகன்நாதன்


No comments:

Post a Comment