தினம் ஒரு லலிதா
நாமம்----36,
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,30
செப்டம்பர், 2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம் அம்பாளின் முப்பத்து ஆறாவது திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் வயிற்று ப்ரதேசத்தின் அழகையும்,,அதன் உண்மைத்
தத்துவத்தையும் விவரிக்கின்றது. இந்த நாமம் அம்பாளின் பதினைந்தாவது ஸ்லோகத்தில்
வருகின்றது
36. ஸ்தநபார தலந் மத்ய பட்டபந்த வளித்ரய:
|
ஸ்தனபார |
கனக்கும் மார்பகங்கள் |
|
தலன் |
ஒடிவது
|
|
மத்ய |
நடு வயிற்றுப் பகுதி
|
|
பட்டபந்த |
ஒட்டியானம்
|
|
த்ரயா |
மூன்று |
|
வலி |
மடிப்புகள்
|
அம்பாள் தன்னுடைய இடையில் கச்சையும் அதன் மேல் ஒட்டியானமும் அணிந்திருக்கின்றாள்.கீழே இடைக்கும் மேலே மார்பகங்களுக்கும் இடையில் வயிற்றுப் பகுதி அமைந்துள்ளது.வயிற்றில் மூன்று அழகான மடிப்புகள் உள்ளன.அம்பாளின் ஸ்தன பாரங்களினால்தான் அந்த மூன்று வயிற்று மடிப்புகளும் ,மெல்லிடையும் கச்சையும்ன் ஒட்டியானமும் ஒடிவதுபோல் காணப்படுகின்ற அழகோடு திகழ்கின்றன.
அவள்
அணிந்திருக்கும் தங்கக் கச்சை, அவளுடைய மார்பின் கனத்தின் கீழ் வளைந்து, அவளுடைய வயிற்றுப் பகுதியில் மூன்று மடிப்புகளை
ஏற்படுத்துகிறது.
சவுந்தர்ய
லஹரி (பாடல் 80) கூறுகிறது, "உன் மார்புகள் மேல் கைகளில்
தேய்ந்து, நடுவில் நிரப்பி, உன் இடுப்பை உடைவதிலிருந்து பாதுகாக்க, அன்பின் கடவுள் உன் இடுப்பை மூன்று மடிப்பு இழைகளால்
பிணைத்துள்ளார்."
பிரபஞ்சத்தின்
மீதான அவளுடைய இரக்கம் மிகப்பெரியது, இது இங்கே கனம் என்று குறிப்பிடப்படுகிறது. அவளுடைய இடுப்பில் உள்ள
மூன்று கோடுகள் அவளுடைய மூன்று செயல்பாடுகளைக் குறிக்கின்றன - படைத்தல், காத்தல் மற்றும் கலைத்தல். அவளுடைய இரக்கத்திற்கான நேரம்
அவளுடைய மற்ற செயல்பாடுகளை விட அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவள் உயர்ந்த தாய்.
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்கிறேன் .நாளை
முப்பத்து ஏழாவது நாமாவளியின் விளக்கமோடு
சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
தினம் ஒரு லலிதா
நாமம்----36,
ஓம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,30
செப்டம்பர், 2025
sree matre namaha
ReplyDelete