Thursday, May 16, 2024

 

9 பல பல வேடமாகும்

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம்          இதில் பரமேஸ்வர் நமது உள்ளத்திலே புகுந்து அங்கே குடிகொண்டிருந்தால்,நான்முகனும் திருமாலும் உயிர்பறிக்கும் காலனும் பெரும் கடல்களும் மேருவைப் போல உயர்ந்த மலைகளும், மற்றும் பலவும் நல்லவர்களாகவே அமையும்

பல பல வேடமாகும் பரன் நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருகாலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

அடியார்கள் விரும்பியவாறு வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்ருள் புரிந்து
விடையின் மேல் ஏறிவரும் எங்கள் பரமன்
நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து
தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்
மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்
அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவையாகவே அமையும்.

பல பல வேடமாகும் பரன் - அடியார்கள் வேண்டிய வடிவங்களில் எல்லாம் தோன்றி அருள் புரியும் பரமன்

நாரி பாகன் - பெண்ணாகிய உமையன்னையைத் தன் உடலில் பாதியாகக் கொண்டவன்

பசுவேறும் எங்கள் பரமன் - விடையின் மேல் ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து - நீர்மகளாகிய கங்கையையும் எருக்கம் பூக்களையும் தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே (என் முயற்சி சிறிதுமின்றி அவன் அருளாலே அவனாகவே) என் உள்ளம் புகுந்து நிலைநின்றதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வருகாலமான பலவும் - மலரில் வாழும் பிரமனும் திருமாலும் வேதங்களும் தேவர்களும் எல்லோருக்கும் முடிவினை ஒரு காலத்தில் வந்து நடத்தும் காலனும் அது போன்ற பலவும்

அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அலைகடலில் இருக்கும் மேரு மலை போல் மிக நல்லவை; அவை அடியார்களுக்கும் மிக மிக நல்லவை.

 இன்று இந்த அழகான ஒன்பதாவது பாடலை பொருளோடு படித்துணர்ந்து சர்வேஸ்வரரின் பேரருள் பெற்றுய்யுங்கள் நாளை அடுத்த பாடலுடன் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

 

சிவதாஸன் ஜகன்நாதன்

 

Wednesday, May 15, 2024

 

8. வேள்பட விழி செய்து

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் எட்டாவது பாடலைப் பார்ப்போம்

சர்வேஸ்வரர் நமது உள்ளம்புகுந்து அங்கேயே குடிகொண்டிருப்பாரேயானால் கொடிய குணம் கொண்ட இலங்கை ராவணன் போன்ற வல்லரக்கர்களும் நல்லவர்களாக மாறி நன்மையையே செய்வார்கள் மேலும் ஆழ்கடலும் அங்கு வாழும் கொடியவைகளுன் நல்லவையாய் அமையும் அவர்கள் மிக நல்லவர்களாக மாறி விடுவர் எங்கிறார் திருஞான சம்பந்தர் அவர்கள்

வேள்பட விழி செய்து அன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து
அறவுருவான எருதின் மேல் அமர்ந்து
அழகிய உமையன்னையுடன் சேர்ந்து
ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி
என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்
ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது
ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.
இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

 

வேள்பட விழி செய்து அன்று - அன்று மதனவேள் சாம்பலாக நெற்றிக்கண்ணைத் திறந்து

விடைமேல் இருந்து - அறவுருவான எருதின் மேல் அமர்ந்து

மடவாள் தனோடும் உடனாய் - அழகிய உமையன்னையுடன் சேர்ந்து

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து - ஒளிமிகுந்த நிலவையும் வன்னி, கொன்றை மலர்களையும் திருமுடிமேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளம் புகுந்து நிலை நின்ற அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா - ஏழ்கடல்களால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனான இராவணன் முதலான அரக்கர்களால் எந்த இடரும் ஏற்பட்டு நம்மை வருத்தாது

ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - ஆழ்கடல்களும் அவற்றில் வாழ்பவைகளும் சிவனடியார்களுக்கு மிக நல்லவையே.
இராவணன் சிறந்த சிவபக்தன். அவ்வாறிருக்க இராவணன் போன்றவர்களால் துயரம் வராது என்று ஏன் எழுதியிருக்கிறார் சம்பந்தர் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மதனவேளை அழித்தவன், காமேஸ்வரன், காமதகனன் தன் துணைவியுடன் என் உள்ளத்தில் நிலைபெற்றதனால், பெரும்பண்டிதனாய் இருந்தும் எல்லாவிதமான அரச நற்குணங்கள் இருந்தும் பிறன் மனையை நாடிய இராவணனை போன்ற காமத்தால் நிலைதடுமாறியவர்களால் எனக்கு எந்த துயரமும் நிகழாது என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.

 

இன்று இந்த அழகான பாடலை பொருளோடு படித்துணர்ந்து ஈஸனின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை அடுத்த பாடலுடன் மீண்டும் சந்திப்போம்

 

ஓம் நமசிவாய:

 

சிவதாஸன் ஜகன்நாதன்

  

Tuesday, May 14, 2024

 

7.செப்பிள முலை நன்மங்கை

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் ஏழாவது பாடலைப் பார்ப்போம் இதில் சர்வேஸ்வரர் நமது இதயத்திலே புகுந்து தங்கிவிட்டால் பலவிதமான நோய்களும் நமை அண்டமாட்டா.மேலும் அவைக நல்லவைகளாக மாறி நம்மைவிட்டு விலகி ஓடிவிடும் என்கிறார்

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

 

அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக
விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் சேரும் இடம்
ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து
தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்
வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்
வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது
சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்)

செப்பிள முலை நன்மங்கை ஒரு பாகமாக - அழகான கொங்கைகளைக் கொண்ட மங்கையான உமையன்னை ஒரு பாகமாக

விடையேறு செல்வனடைவார் - விடையில் ஏறுகின்ற, நம்மையெல்லாம் தன் செல்வமாக உடைய செல்வனாம் சிவபெருமான் சேரும் இடம்

ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து - ஒப்பு கூறத்தக்க இளமதியமும் கங்கையும் (அப்பு - நீர், இங்கு கங்கை) தன் திருமுடி மேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - தானாகவே என் உள்ளம் புகுந்து அங்கு நிலை நின்றதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் - வெப்பமான காய்ச்சல், குளிர் காய்ச்சல், வாதம் (நரம்பு தொடர்பான நோய்கள்), பித்தம் (மனநிலை தொடர்பான நோய்கள்) போன்ற எந்த நோயும்

வினையான வந்து நலியா - வினைப்பயனாக வந்து என்னை வாட்டாது

அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அந்த வினைகளும் மிக நல்லவை; அவற்றின் பயனாக வரும் நோய்களும் மிக நல்லவை (அவை வராமல் இருந்து நல்லவையாய் இருக்கும்; வந்தாலும் வாட்டாமல் இருந்து நல்லவையாய் இருக்கும்

 

இந்த அழகான ஏழாவது பாடலை பொருளுடன் படித்துணர்ந்து இன்புற்று சர்வேஸ்வரரின் பேருள் பெற்றுய்யுங்கள் நாளை அடுத்த பாடலுடன் சந்திப்போம்

ஓம் நமசிவாய:

சிவதாஸன் ஜகன்நாதன்

Monday, May 13, 2024

6 வாள்வரி அதளதாடை

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் ஆறாவது பாடலைப் பார்ப்போம்

சிவபெருமானை னாம் உள்ளத்திலேஎ புகுத்தி                                                           இருத்திக் கொண்டேமேயானால், கொடிய புலியும்                                                  வலிய யானையும்,காட்டுப் பன்றியும்,கொடும் நாகமும்,கரடியும்கொலைவெரியுடனான சிங்கம்                                                போன்ற எல்லாக் கொடிய விலங்குகளும்                                          நல்லவைகளாக மாறி மிக நல்லவைகளாக                                                  இருக்கும் என்று சொல்லுகிறார்                                                                                                 காழிப் பிள்ளை அவர்கள்

பரமேஸ்வரனை நம் உள்ளத்தில் நிறுத்தினால்                       கொடுமையையே தன் இயல்பாக்கொண்ட                                                    கொடிய விலங்குகளும் நல்லவையாக                                                         மாறிவிடும் என்பதையே இந்தப்                                                                                                 பாடல் உணர்த்துகின்றது


 

வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட                                                     ஆன மேலாடையும்
வரிகளையுடைய புலித்தோலால் ஆன                                               இடையாடையும் அணிந்த சிவபெருமான்
அன்பு மனையாளோடு சேர்ந்து
தாமரையும் வன்னிமலரும்                                                                  கொன்றைமலரும் கங்கை நதியும் தன்                                                    திருமுடியின் மேல் சூடி
தானாக என் உள்ளம் புகுந்து அங்கே                                                                                                          நிலைத்துநின்றதால்
கொடுமையே வடிவான  பயங்கரமான                                                                    யானையும் காட்டுப் பன்றியும்
கொடிய நாகமும்
கரடியும் ஆளைக் கொல்லும் சிங்கமும்
அவை அடியார்களுக்கு                                                                                                             மிக நல்லவைகளாக இருக்கும்



வாள்வரி அதளதாடை - வாளைப் போன்ற கூரிய வரிகளைக் கொண்ட புலித்தோலால் ஆன மேலாடையும்

வரிகோவணத்தர் - வரிகளையுடைய புலித்தோலால் ஆன இடையாடையும் அணிந்த சிவபெருமான்

மடவாள் தனோடும் உடனாய் - அன்பு மனையாளோடு சேர்ந்து

நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து - தாமரையும் வன்னிமலரும் கொன்றைமலரும் கங்கை நதியும் தன் திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - தானாக என் உள்ளம் புகுந்து அங்கே நிலைநின்றதால்

கோளரி உழுவையோடு - கொடுமையே வடிவான புலியும்

கொலையானை - பயங்கரமான யானையும்

கேழல் - காட்டுப் பன்றியும்

கொடுநாகமோடு - கொடிய நாகமும்

கரடி - கரடியும்

ஆளரி - ஆளைக் கொல்லும் சிங்கமும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அவை அடியார்களுக்கு மிக நல்லவைகளாக இருக்கும்

இன்று இந்தப் பாடலை பொருளோடு படித்துணர்ந்து                                             சர்வேஸ்வரின் பேரருள் பெற்றுய்யுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்