Monday, February 27, 2023

 

வேதத்தில் வெள்ளரிக்காய் !

fruit cucumber


வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே !
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே !!
நெற்றி ஒற்றைக் கண்ணனோடு நிர்த்தனம் செய்தாள்!
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே !!
–மஹா கவி பாரதி.

இந்துக்கள் இயற்கையை நேசிக்கும் அன்பர்கள். இயற்கையில் கடவுளைக் கண்டுபிடித்தவர்கள். இயற்கை மூலம் கடவுளைக் காட்டியவர்கள். இன்று எல்லோரும் புறச் சூழல் பாதுகாப்பு என்று பெரிய கூக்குரல் எழுப்புவதற்கு முன் ‘எறும்பு முதல் யானை வரை’ எல்லாவற்றுக்கும் இறை அந்தஸ்து வழங்கினவர்கள், ஒரு ஊருக்கு ‘திரு ஆனைக் கா’ என்று பெயரிட்டு பக்தி இலக்கியத்தில் யானைக்கு அழியாத இடம் கொடுத்தனர். அதன் பக்கத்திலேயே ‘திரு எறும்பூர்’ என்று மற்றொரு ஊரில் எறும்புக்கு மதிப்பு கொடுத்தனர். வேதத்தில்—உபநிஷதத்தில்– ஆலமரவிதை, பசுமாட்டின் வாலில் உள்ள முடி, உப்பு முதலியவற்றின் மூலம் கடவுள் பற்றி பாடம் நடத்தியதைப் படிக்கிறோம். இதே போல வெள்ளரிப் பழம் மூலம் ஒரு பெரிய உண்மையைக் கற்பிக்கிறது யஜூர்வேதம்.

CUCUMBERFRUIT

வேதங்கள் நான்கு : ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று. இவைகளில் சைவர்களின் தாரக மந்திரமான நமசிவாய என்னும் மந்திரம் யஜூர்வேதத்தில் வருகிறது. யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் ருத்ரத்தின் நடுவில் அமைந்துள்ளது நமசிவாய மந்திரம். அதற்குச் சற்றுப் பின்னால் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது (7-59-12). இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம் (இறப்பு)—.அதை ஜயிக்கக்கூடிய மந்திரம் என்பதால்—-மரணத்தை வெல்லும் இம் மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜய மந்திரம்’’ என்று பெயர். இதில்தான் வெள்ளரிப் பழம் வருகிறது. இதோ அந்த மந்திரம்:–

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

ஸுகந்திம் = இயற்கையான நறுமணம் உடையவரும்
புஷ்டிவர்த்தனம் = கருணையால் அடியார்களை ஊட்டி வளர்ப்பவரும் ஆகிய
த்ரயம்பகம் = முக்கண்ணனை
யஜாமஹே = பூஜித்து வழிபடுகிறோம்.
உர்வாருகம் இவ = வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுபடுவது போல
ம்ருத்யோ: = சாவினுடைய
பந்தனாத் = பிடியிலிருந்து
முக்ஷீய = உமது அருளால் விடு படுவோமாக!
மா அம்ருதாத் = முக்தி வழியில் இருந்து விலகாமல் இருப்போமாக!

golden cucumber

ஸ்ரீ ருத்ரம் (நமகம்-சமகம்) மந்திரத்தை– கவிதாமணி, உபய பாஷா ப்ரவீண, செந்தமிழ் கவிதைச் செம்மல் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த மந்திரப் பகுதியின் தமிழ் வடிவத்தை மட்டும் பார்ப்போம்:-

இயற்கை நறுமணம் உடைய தேவரே
ஈடில்லாக் கருணையால் அடியாரை வாழ்விக்கும்
வியத்தகு முக்கண் உடைய எம்பெரும
வினயமாய்ப் போற்றி அஞ்சலி செய்தோம்
வெள்ளரிப் பழம் காம்பினின்று விடுவதொப்ப
மேவிய உமதருளால் மரணத்திலிருந்து விடுபடவும்
தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்
திசை மாறாதென்றும் வாழ்ந்திடுவோமாக

வேதம் படித்த சைவர்கள், விபூதி பூசும் போது இந்த மந்திரத்தைச் சொல்லிகொண்டே விபூதி இட்டுக் கொள்வார்கள். யாருக்காவது, ஆயுள் அதிகரிக்கவோ, மரண பயம் நீங்கவோ, நோய்கள் நீங்கவோ வேண்டுமானால் மிருத்யுஞ் ஜய ஹோமமும் நடத்துவது வழக்கம். இந்தச் சிறிய மந்திரத்தை அனைவரும் சொல்லலாம். முதலில் வெள்ளரிப் பழத்தை ஏன் இதில் சொன்னார்கள் என்று காண்போம்.

child cucumber

மற்ற பழங்கள் பழுத்தவுடன் அது கீழே விழும். பழம் விழுந்தால் அது தரும் அதிர்ச்சியை நாம் அறிவோம். கீழே விழுந்தாலும் சரி ஒருவரின் தலையில் விழுந்தாலும் சரி, அதில் பக்க விளைவுகள் உண்டு. ஆனால் வெள்ளரிப்பழம் மட்டும் பழுத்தவுடன் பழம் இருந்த இடத்திலேயே இருக்கும். ஒரு அங்குலம் கூட நகராது, அதன் காம்பு மட்டும் தனது தொடர்பை அழகாகத் துண்டித்துக் கொள்ளும். பழுத்த பழத்துக்கு அவ்வளவு மரியாதை. காம்பே ஒரு ‘கும்பிடு போட்டு விட்டு’ சற்றே விலகிவிடும்.

இன்று டிஸ்கவரி (Discovery Channel) சேன்னலில் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளை பார்க்கையில் பூ மலர்வதையும் ,காய் வெடிப்பதையும் ‘ஸ்லோ மோஷனில்’ (Slow Motion) பார்த்து வியக்கிறோம். அந்தக் காலத்தில் பெரிய சக்திவாய்ந்த கேமராக்களும் இல்லை. அதை ‘’ஸ்லோ மோஷ’’னில் போட்டுப்பார்க்கும் வசதிகளும் இல்லை. ஆனால் நமது ரிஷிகள் தன் ஞானக் கண்களால் அதை கண்டார்களா அல்லது ஊனக் கண்களை வைத்து உன்னிப்பாகப் பார்த்தார்களா என்று சொல்லமுடியாது. நல்ல ஒரு கவிதை உவமையை நமக்குத் தந்துவிட்டார்கள்.

வெள்ளரிப் பழ உவமையின் பொருத்தத்தையும் காண்போம். வீட்டில் 80, 90 வயதுப் பாட்டி, பாட்டனார் இறந்தால் அதைக் ‘கல்யாணச் சாவு’ என்று சொல்லுவர். பெரிய வருத்தம் இருக்காது. ஏனெனில் பிறந்தவர் எல்லாம் இறப்பதை எல்லோரும் அறிவர். அது இயற்கை நியதி. ஏன் நமக்கு வருத்தம் வரவில்லை? அவர்கள் நிறைந்த வாழ்வு வாழ்ந்து பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன்களைப் பார்த்தாகிவிட்டது. அதாவது முழு வெள்ளரிப்பழம் போல ஆகிவிட்டனர். இனியும் அது இருந்தால் பழமே தன்னால் பிளவுபட்டு வெடித்துவிடும். காம்பே விலகியது போல அதிர்ச்சி இல்லாத, மிருதுவான, அழகான முறையில் மரணம் சம்பவித்தால் இறந்தவருக்கும் கஷ்டம் இல்லை, அவர்களுடைய உறவினர்களுக்கும் வருத்தம் இல்லை. அதாவது பந்தங்களை அதிரடிப் போகில் தூக்கி எறியாமல், நம்மைப் பிடித்த பந்தங்கள்—கட்டுகள்—தளைகள் — விலங்குகள் – தானாக, ‘ஸ்மூத்’தாக, விலகுவதையே வெள்ளைப்பழ உவமை காட்டுகிறது.

blonde_cucumber

ஆகையாலதான் இந்த உவமை; வெள்ளரிப் பழம் காம்பில் இருந்து விடுபடுவதுபோல சாவில் இருந்து விடுபடுவோமாக. ஞானம், பழுத்த நிலையில் மரணம் சம்பவித்தால் நேரடி மோட்சம் தானே. மற்ற மரணங்களைப் போல பல ‘’மண்டகப் படிகள்’’(Stop overs) கிடையாது. இது நேரடி விமான சர்வீஸ். நடுவில் ஸ்டாப் ஓவர் (stop over) கிடையாது.– டைரக்ட் Fலைட் Direct Flight— ஆகையால் வெள்ளரி போல பழுத்த நிலையில் இறப்போம்—அது போல பந்தங்கள் கஷ்டமின்றி பிரியட்டும்—பிரிந்த பின்பு மீண்டும் பிறப்பின்றி மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வோம்– என்பதே இந்த மந்திரத்தின் பொருள் என்று ஆன்றோர் விளக்குவர்.

Saturday, February 25, 2023

Today I am posting an important topic on ANTI OXIDENTS

Read fnjoy and get benfittrd Your queries are welcome.

Dr.Jagannathan

ANTIOXIDANTS

Yesterday I wrote about Free Radicals which can damage our cells

In continuation with that I am presenting this topic on Antioxidants which can eliminate the Free Radicals

Jagannathan

All living organisms utilize oxygen to metabolize and use the dietary nutrients in order to produce energy for survival. Oxygen thus is a vital component for living. Oxygen meditates chemical reactions that metabolize fats, proteins, and carbohydrates to produce energy.

While oxygen is one of the most essential components for living, it is also a double edged sword. Oxygen is a highly reactive atom that is capable of becoming part of potentially damaging molecules commonly called “free radicals.”

Free radicals

These free radicals are capable of attacking the healthy cells of the body. This may lead to damage, disease and severe disorders. Cell damage caused by free radicals appears to be a major contributor to aging and diseases like:

· cancer

· heart disease

· decline in brain function

· decline in immune system etc.

Overall, free radicals have been implicated in the pathogenesis of at least 50 diseases.

Since free radicals contain an unpaired electron they are unstable [charged ]  and reach out and capture electrons from other substances in order to neutralize the charge in them. This initially stabilizes the free radical but generates another in the process. Soon a chain reaction begins and thousands of free radical reactions can occur within a few seconds on the primary reaction.

Reactive oxygen species (ROS)

ROS is a term which encompasses all highly reactive, oxygen-containing molecules, including free radicals. Types of ROS include the hydroxyl radical, hydrogen peroxide, the superoxide anion radical, nitric oxide radical, singlet oxygen, hypochlorite radical, and various lipid peroxides. These can react with membrane lipids, nucleic acids, proteins and enzymes, and other small molecules.

Oxidative stress

Oxidative stress means an unbalance between pro-oxidants and antioxidant mechanisms. This results in excessive oxidative metabolism. This stress can be due to several environmental factors such as exposure to pollutants, alcohol, medications, infections, poor diet, toxins, radiation etc. Oxidative damage to DNA, proteins, and other macromolecules may lead to a wide range of human diseases most notably heart disease and cancer.

Control of free radicals

 

Normally free radical formation is controlled naturally by various beneficial compounds known as antioxidants. When there is deficiency of these antioxidants damage due to free radicals can become cumulative and debilitating.

Antioxidants are capable of stabilizing, or deactivating, free radicals before they attack cells.

Antioxidants from food

There are several nutrients in food that contain antioxidants. Vitamin C, vitamin E, and beta carotene are among the most commonly studied dietary antioxidants.

Vitamin C is the most important water-soluble antioxidant in extracellular fluids. Vitamin C helps to neutralize ROS in the water or aqueous phase before it can attack the lipids.

Vitamin E is the most important lipid soluble antioxidant. It is important as the chain-breaking antioxidant within the cell membrane. It can protect the membrane fatty acids from lipid peroxidation. Vitamin C in addition is capable of regenerating vitamin E.

Beta carotene and other carotenoids also have antioxidant properties. Carotenoids work in synergy with vitamin E.

Antioxidant deficiencies

A diet low in fats may impair absorption of beta carotene and vitamin E and other fat-soluble nutrients. Fruits and vegetables are important sources of vitamin C and carotenoids. Whole grains and high quality vegetable oils are major sources of vitamin E.

Many plant-derived substances are known as “phytonutrients,” or “phytochemicals”. These also possess antioxidant properties. Phenolic compounds such as flavonoids are such chemicals. These are found in several fruits, vegetables, green tea extracts etc.

Antioxidants within the human body

Apart from diet, the body also has several antioxidant mechanisms that can protect itself from ROS mediated damage. The antioxidant enzymes – glutathione peroxidase, catalase, and superoxide dismutase (SOD) are such enzymes. They require micronutrient cofactors such as selenium, iron, copper, zinc, and manganese for their activity. It has been suggested that an inadequate dietary intake of these trace minerals may also lead to low antioxidant activity.

DR.V.JAGANNATHAN                                                                                                      

Friday, February 17, 2023


 

இப்பொழுது சில கோவில்களுக்குள் சென்று இறைதரிசனம் செய்து வழிபடுவது என்பது குதிரைக்கொம்பாக இருக்கிறதுகாசு கொடுத்தால்முன்னால் சென்று தரிசனம்செய்யலாம்.  இல்லாவிடில்வரிசையில் மணிக்கணக்காக நின்றுகடைசியில் தரிசனம் கிடைத்தால், ‘போபோ!’ என்று விரட்டப்படுவதே நிதர்சனம்.  சில விநாடிகள்கூட தமது உள்ளக்கிடக்கையைக் கொட்டிதெய்வத்தின் திவ்ய தரிசனத்தைக் கண்குளிரக் காணமுடிவதில்லை.  மின்னல் மின்னி மறைவதுபோல தெய்வத்தின் காட்சி நமது கண்ணைவிட்டு நீங்கிவிடுகிறது.  ஏக்கத்துடன்தான் வெளிவருகிறோம்.

அர்ச்சனை செய்யக்கூட முடியாதுஅர்ச்சகர் நம் கண்ணில் தெய்வத்தைப்போல ஓரிரு விநாடிகள்தான் தென்படுவார்

இருந்தாலும்அக்கோவில்களில் கூட்டத்திற்கு என்றுமே குறைவில்லை.  நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே போகிறது.

இன்னும் சில கோவில்களுக்குச் சென்றால் – செல்ல மனமிருந்து – அங்கும் இறைவன்/இறைவி குடிகொண்டுள்ளனர் என்ற நினைப்பு வந்து அங்கு சென்றால்வியப்புகலந்த பய உணர்வு மேலிடுகிறது.  கோவில் வெறிச்சோடிக் கிடக்கிறது.  நாம் முன்பு விவரித்த கோவில்களில் இருக்கும் ஜே ஜே என்ற கூட்டத்தில் நூற்றிலென்னஆயிரத்தில் ஒரு பங்கு கூட்டம்கூட அங்கு இல்லை.

கண்ணைப் பறிக்கும் ஒளிவிளக்குகளும் அங்கில்லை.  எங்கோ மூலையில் ஒரு மங்கலான விளக்கு மினுக்மினுக்கென்று எரிந்துகொண்டிருக்கிறது.  நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் மக்களும் இல்லை, ‘போபோ’ என்று விரட்டும் கோவில் காவலரும் இல்லை.

இறைவன்/இறைவி – நாம் மட்டுமே அக்கோவிலில்.  வேண்டும் அளவுக்கு நமது உள்ளக் கிடக்கையை மனம்விட்டு உரக்கச் சொன்னாலும் அது அத்தெய்வங்களின் காதில் மட்டுமே விழும்.  மற்றவர் யாராவது கேட்டுவிடுவார்களோ என்ற ஐயப்பாடும் தேவையில்லை.  யாராவது அங்கிருந்தால்தானேநாம் சொல்வது அவர்கள் காதில் விழுவதற்கு?

அர்ச்சகர்கூட சில கோவில்களில் காணப்படுவதில்லை.  நாம் தேடிக்கொண்டு சென்றால்அகப்படுவார்.  அருச்சனை செய்யவேண்டுமென்றால் நம்மை வியப்பு-கலந்த மகிழ்வுடன் பார்ப்பார்.  பக்தி சிரத்தையுடன் அருச்சனை செய்வார்.  நாம் கொடுக்கும் காணிக்கையை மிகவும் நன்றியுடன் பெற்றுக்கொள்வார்.

மேலே விவரித்த இருவிதக் கோவில்களைத்தான் நம்மால் காணமுடியும்

பழங்காலத்தில் கோவில்கள் இப்படித்தான் இருந்தனவா?  வழிபாடுகள் கோவில்களில் இப்படித்தான் நடந்தனவா?

எப்படி நடந்தன என்பதை நமக்குத் தமது தோத்திரங்கள்பாசுரங்கள் வாயிலாக சைவவைணவக் குருமார்களும்ஆள்வார்களும் நமக்கு எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.  கோவில்கள் இப்படித்தான் அன்று இயங்கின என்று நாம் அறிந்துகொள்ள அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

தமது சொல்வன்மையால் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்ட திருவாதவூரார் நம்மை அவர் காலத்துக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கிறார்.  முதலில் அவருடன் செல்வோமா?  தமக்கே உரிய மாணிக்கச் சொற்களாகஇறைவழிபாட்டை மாலையாகத் தொகுத்து நமக்கு விளக்குகிறார்.

கோவிலை நெருங்கும்போதுயாழ்வீணை போன்ற இசைக் கருவிகளிலிருந்து எழும் இன்னிசை நம்மைப் பரவசப்படுத்தி அழைக்கிறது.  இந்த இசையின்ப வெள்ளத்தில் நீந்தி நாம் உள்ளே செல்கிறோம்அங்கு பாணர்கள் இசைக்கருவிகளை மீட்டிஇறைவன்மீது தமக்குள்ள பக்தியை வெளிப்படுத்தி ஆனந்தவெள்ளத்தில் ஆழ்வதையும்நம்மை ஆழ்த்துவதையும் காணலாம்.

.  ரிக்யஜுர்சாமஅதர்வ வேதங்களுடன்பலவிதமான தோத்திரங்களுடன் இறைவன்முன் ஓதிக்கொண்டிருக்கிறார்கள்அதாவதுஒரு வேதம் மட்டுமல்லநான்கு வேதங்களையும் முறையாகக் கற்றவர்கள் பிழையின்றி அதை ஓதுகின்றனர்.  அவர்கள் இப்படி ஓதிக்கொண்டிருக்கையில்இன்னும் சிலர் இறைவன்மீது துதிப்பாடல்களைப் பாடுகின்றனர்.  இந்த வேதகோஷத்திலும்தோத்திரப்பாடல் ஒலிகளுடனும்வீணையாழ் இவற்றின் நாத வெள்ளமும் நம்மை இறைவனைத் தரிசித்து இறையருள்பெற அழைக்கிறது

இன்னொரு பக்கத்தில்இறைவன் திருமேனியை அலங்கரிக்க நெருக்கமாக மலர்களைத் தொடுத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்.  தமது கைகளையே மலர்மாலையாக எண்ணிஅதைப் பின்னலாகப் பின்னி இறைவனை அந்த மாலைக்குள் அடக்க முயல்கின்றனர்வேறுசிலர்.

சிலர் இறைவனைத் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர்.  இன்னும் சிலர் தமது குறைகளைச் சொல்லி அழுதுஅதைப் போக்கி அருளுமாறு புலம்புகின்றனர்வேறுசிலர் தம்மை வருத்திக்கொண்டுகோவில் தரையில் புரண்டுஅவனது கோவில் பிரகாரத்தைச் சுற்றிவந்துதம் மனவிருப்பத்தை நிறைவேற்றுமாறு வேண்டுகின்றனர்.

மற்றும் சிலர்தலைக்குமேல் கைகளை உயர்த்திக்கூப்பிஇறைவனுக்கு அஞ்சலி செலுத்தி அமைதியாக நிற்கின்றனர்.  

திருப்பெருந்துறை என்னும் புண்ணியத் தலத்தில் குடிகொண்டுள்ள சிவபெருமானே!  நீ எனக்கு இறைவனாகத் தலைவனாகத் தந்தையாகத் தாயாகத் தடுத்தாட்கொண்டு உனது இனிய அருளை வாரிவழங்குகிறாய்!  இல்லையென்று சொல்லவில்லை.  ஆனால்உன் அருளைவேண்டி இத்தனை பேர் பலவிதமாக உன்னைத் துதித்து நிற்கிறார்களேஇவர்களுடைய குறையை நீக்க மாட்டாயா?  ஏன் கண்ணை மூடிக்கொண்டு உறங்குவது போல நடிக்கிறாய்?  நீ தூங்கியது போதும்.  என் பெருமானே!  உனது போலி உறக்கம் போதும்!  எழுந்திருந்து உன் அடியவர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கு!”

இதுதான் அன்றையக் கோவில்களில் நிகழ்ந்த வழிபாடு.  திருவாசகத்திற்கு உருகாதார் எவருமேயில்லைஅப்படி உருகாதவர் எப்படிச் எடுத்துரைத்தாலும் உருகமாட்டார் என்று தன் சொல்வன்மையால்பக்திப்பெருக்கால் மாணிக்கவாசகர் இயம்பிய திருப்பள்ளியெழுச்சிப் பதிகத்தில் ஒரு செய்யுள்தான் பழங்கால் வழிபாட்டை விவரித்து இன்றும் மார்கழி மாதந்தோறும் பாடப்படுகிறது.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு( ரிக் ) தோத்திர மியம்பினற் ஒருபால்

துண்ணிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகைய ரழுகையர் துவள்கயர் ஒருபால்

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி யெழுந் தருளாயே!

ஆனால்மாணிக்கவாசகர் விவரித்த கோவில் வழிபாட்டை நாம் என்று காண்போமோஅது அந்த உமையொருபங்கன்சிவபெருமானுக்குத்தான் தெரியும்போலிருக்கிறது.

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்