Monday, March 25, 2024


மீண்டுமிப்பிறவிவேண்டுமே

இப்ரபஞ்சம்படைத்துக்காத்தருளும்ஈஸனாய்                                               இப்ரபஞ்சமாளும்முத்தேவரில்முன்னவனாய்                                                      எப்பொழுதும்தேவர்க்கும்மாந்தர்க்குமானானை                                    முப்போதும்தொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே        1

ஐந்தழகுமுகங்கள்கொண்டபரமனானாய்                                                 ஐந்தெழுத்துநமஸிவாயபஞ்சாக்ஷரமானாய்                                                     ஐந்தும்தானேயாகிபஞ்சபூதங்களானாய்                                                ஐந்துமடக்கிமீண்டுமிப்பிறவிவேண்டுமே      2     

கொன்றையும்எருக்கும்நதியொடுமுடிகொண்டாய்                                  நன்றானநூலும்கபாலமும்நடுமார்பில்அணிந்தாய்          வென்றபுலித்தோல்இடையில்நன்றாகஅணிந்தாய்           என்றென்றுமுனைக் காணமீண்டு மிப்பிறவிவேண்டுமே  3

 

முப்புறமெரித்துமூவுலகோரும்மகிழக்காத்தாய்                                   எப்பொழுதும்தொழுவோர்வம்சம்காக்கநின்றாய்                                               தப்பாமல்ஆணவத்தக்கன்யாகமழித்தருளினாய்                                          எப்பொழுதும்தொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே     4

கற்றகல்வியும்பெற்றவித்தையும்கடலாகுமே                                                            நற்றமிழால்இசைத்தவைநல்லருளேயருளுமே                                                         பெற்றமக்களும்சுற்றமும்நலமோடுவாழ்வாரே                                                      உற்றநினதடிதொழமீண்டுமிப்பிறவிவேண்டுமே     5

       நித்தமும்குறையாநலங்களருளும்நடேசனே                                                                             மத்தமும்மதிநதியும்முடிகொண்டமஹேசனே                                          பித்தனாய்பேயனாய்சுந்தரனுக்கருளியபரமனே                                           எத்தனைப்பிறவியினும்மீண்டுமிப்பிறவிவேண்டுமே     6

தண்டையணிந்து தூக்கியாடியதிருவடிகளும்                                                          கொண்டதிரிசூலமோடிலங்கும்திருக்கரங்களும்                                                     நன்றானமுப்புரிநூலும்கபாலமுமிலங்குமார்பும்                                           கண்டுகண்டுமகிழமீண்டுமிப்பிறவிவேண்டுமே     7

வேலவனைத்தரத்திறந்தமூன்றாம்நுதற்கண்ணும்                                                             காலனைஉதைத்ததண்டையணிதிருவடிகளும்                                         மாலவனுக்குசக்கரமருளியவழகுக் கரங்களும்                                   காலமெல்லாம்காணமீண்டுமிப்பிறவிவேண்டுமே     8

பேரழகுத் திருமேனி பரவிடும்பரமனைக்காண                             பேரருட்கருணைபொழி கருணாகரனைக்காண                                          பேராயிரமுடைபோராளன்பெம்மானைக்காண                               பேரருளானைவேண்டமீண்டுமிப்பிறவிவேண்டுமே     9

திரிபுரமெரிக்கப்பினாகம் கொண்டகருணாளனை                               கரமெட்டில்படைக்கலங்கள்பலகொண்டபரமனை                                     வரங்கள்வற்றாதருளும்வள்ளல்விஸ்வேசனை                                      கரம்தூக்கித்தொழுதிடமீண்டுமிப்பிறவிவேண்டுமே     10 

அத்வைதமாய்யாவும்தானேயானஅரனை                                                                     மத்தமும்மதியும்முடிகொண்டமஹேசனை                                                          எத்தனையும்தருவனைஜகன்நாதன்பாடியவை                                                 அத்தனையும்தவறாதுதருவதுதிண்ணமே


 



இப்ரபஞ்சம் படைத்துக் காத்தருளும் ஈஸனாய்                                               இப்ரபஞ்ச மாளும் முத்தேவரில் முன்னவனாய்                                                      எப்பொழுதும் தேவர்க்கும் மாந்தர்க்கு மானானை                                    முப்போதும் தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே        1

ஐந்தழகு முகங்கள் கொண்டு பரமனானாய்                                                 ஐந்தெழுத்து நமஸிவாய பஞ்சாக்ஷர மானாய்                                                     ஐந்தும் தானேயாகி பஞ்சபூதங் களானாய்                                                ஐந்துமடக்கிமீண்டு மிப்பிறவி வேண்டுமே      2     

கொன்றையும்  எருக்கும் நதியொடு முடிகொண்டாய்                                  நன்றானநூலும் கபாலமும் நடுமார்பில் அணிந்தாய்      வென்றபுலித்தோல் இடையில்  நன்றாக அணிந்தாய்                என்றென்றுமுனைக் காணமீண்டு மிப்பிறவி வேண்டுமே  3

 

முப்புறமெரித்து மூவுலகோரும் மகிழக் காத்தாய்                                   எப்பொழுதும் தொழுவோர் வம்சம் காக்கநின்றாய்                                               தப்பாமல் ஆணவத்தக்கன் யாகமழித் தருளினாய்                                          எப்பொழுதும் தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     4

கற்றகல்வியும் பெற்ற வித்தையும் கடலாகுமே                                                                        நற்றமிழால் இசைத்தவை நல்லருளே யருளுமே                                                                      பெற்றமக்களும் சுற்றமும் நலமோடு வாழ்வாரே                                                                உற்றநினதடி தொழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     5

நித்தமும் குறையா நலங்களருளும் நடேசனே                                                  மத்தமும்மதிநதியும் முடிகொண்ட மஹேசனே                                          பித்தனாய் பேயனாய் சுந்தரனுக்கருளிய பரமனே                                                               எத்தனைப் பிறவியினும்மீண்டு மிப்பிறவி வேண்டுமே     6

தண்டையணிந்து தூக்கியாடிய திருவடிகளும்                                                          கொண்ட திரிசூலமோ டிலங்கும் திருக்கரங்களும்                                              நன்றான முப்புரிநூலும் கபாலமு மிலங்குமார்பும்                                           கண்டுகண்டு மகிழமீண்டு மிப்பிறவி வேண்டுமே     7

வேலவனைத் தரத்திறந்த மூன்றாம் நுதற்கண்ணும்                                                                      காலனை உதைத்த தண்டையணி திருவடிகளும்                                               மாலவனுக்கு சக்கரமருளிய வழகுக் கரங்களும்                                   காலமெல்லாம் காணமீண்டு மிப்பிறவி வேண்டுமே     8

பேரழகுத் திருமேனி  பரவிடும் பரமனைக்காண                             பேரருட்கருணை பொழி கருணா கரனைக்காண                                          பேராயிரமுடை போராளன் பெம்மானைக் காண                               பேரருளானை வேண்ட மீண்டு மிப்பிறவி வேண்டுமே     9

திரிபுரமெரிக்கப் பினாகம் கொண்ட கருணாளனை                               கரமெட்டில்   படைக்கலங்கள் பலகொண்ட பரமனை                                     வரங்கள் வற்றாதருளும் வள்ளல் விஸ்வேசனை                                      கரம்தூக்கித் தொழுதிடமீண்டு மிப்பிறவி வேண்டுமே     10


 

அத்வைதமாய் யாவும் தானேயான அரனை                                                                                   மத்தமும் மதியும் முடிகொண்ட மஹேசனை                                                                      எத்தனையும் தருவனை ஜகன்நாதன் பாடியவை                                                             அத்தனையும் தவறாது தருவது திண்ணமே