Thursday, June 30, 2016சுப்ரமண்ய புஜங்கத்தின் பதிமூன்றாவது ஸ்லோகம் 

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது 


 ஸதாசாரதாஷண்ம்ருகாங்காயதிஸ்யு 
 ஸமுத்யந்தஏவஸ்திதாச்சேத்ஸமந்தாத்                    
 ஸதாபூர்ணபிம்பாகலங்கைஸ்சஹீனா   ததாத்வன்முகானாம்ப்ருவேஸ்கந்தஸாம்யம் (13)
( ஸ்ரீ ஆதிசங்கரர் )
  இதற்கு நான் இயற்றிய பாடல்

ஆறுசந்திரர்கள் ஒன்றாய்த் தண்ணொளிவீசி களங்கமின்றிப் 

  பேரெழிலோடு வானில் வலம் வந்து  எல்லாத்திக்கும் விரிந்து   

   பரவிநின்றாலும்என்றும்கருணைஒன்றையேபெருக்கி    

  அருளும் நின் பேரெழில் திருமுகங்களுக்கு அவை ஈடாகுமோ13

( ஜகன்நாதன் )

 இதன் பொருள் 


எப்போதும் குளிர்மிகுந்தவனவாயும் , களங்கம் இல்லாதவனவாயுமான  பரிபூரணமான நிலவொளியை  எல்லாத் திக்கிலும் வீசுகின்ற ஆறுசந்திரர்கள்   என்றைக்கும் உள்ளனவாகி  பேரொளியை வீசினாலும்  அவை என்றும் கருணை ஒன்றையே பெருக்கி அ ருளும் திருச்செந்திலாதிபனின் முகங்களி லிருந்து  வீசும் பேரொளி க்கு  ஒப்பாகுமோ . அவ்வாறு இல்லாமையால் அவை முருகன் திருமுகங்கள் வீசும் திரு ஒளிக்கு ஒப்பற்றவையாகும்.

Wednesday, June 29, 2016

சுப்ரமண்யபுஜங்கத்தின் பன்னிரண்டாவது ஸ்லோகம் 

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது 


விதௌக்லுப்ததண்டான்ஸ்வலீலாத்ருதாண்டான்                     நிரஸ்தே பசுண்டான் த்விஷத்கால தண்டான்                          ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்                 ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)

( ஸ்ரீ ஆதிசங்கரர் )

ப்ரம்மனைப் புடைத்து சிறையிலிட்டு அயனில்லாத அண்டங்களையெல்லாம் காத்தருளி யானையின் துதிக்கையைப் பற்றி அதனையும் வென்று எமனை ஒட்டி சூரபத்மனை வென்றாட்க்கொண்டு இந்திரனின் துயர் களைந்து தன்னை நாடி அடைந்தோர்க்கு என்றும் அபாயமளிக்கும் நின் திருக்கரங்கள் எனக்கு என்றும் துணை செய்து அருளட்டும் கந்தநாதனே 

காலதண்டான் என்பது எமனை ஓட்டி எனப்பொருள் படும்  

அடியேன் இயற்றிய பன்னிரெண்டாவது பாடல் :-


வேதமோதும் அயனைக்குட்டிசிறையிட்டுஇந்திரன்தன்

    வாதனைப்போக்கிவிளையாட்டாய்துதிக்கைப்பற்றிகரியன்

        சாதனைமுறித்துசூரபத்மன்தனைவென்று எச்சமயமுமருள் 

         ஆதரிக்கும்கரங்கள்பன்னிரெண்டுமெனைக்காக்கட்டும்கந்தா 12  

( ஜகன்நாதன் )

Tuesday, June 28, 2016சுப்ரமண்யபுஜங்கத்தின் பதினோராவது ஸ்லோகம்
ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது 


புளிந்தேசகன்யாகநாபோகதுங்க                  ஸ்தனாலிங்கநாஸக்தகாச்மீரராகம்                                        நமஸ்யாம்யஹும்தாரகாரேதவோரஸ்வ                       பக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)  

( ஸ்ரீ ஆதிசங்கரர் )

  குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு புற அழகிய மார்புகளில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதினலோ அல்லது, தன் அன்பர் குழாம் மீது கருணை கொண்டு அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினாலோ தீயவனான சூரபத்மனைத் கடிந்ததனாலோ செந்தில் நாதனின்  மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.

துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்கள். 

அடியேன் இயற்றிய பாடல் 

வேட்டுவர்கோன்தன் திருமகள் வடிவழகி வள்ளி மை                                                                        தீட்டியவிழியாள்தன்மார்பியலங்குகுங்குமத்தாலோ 
                                                                                                    மீட்டுமடியார்உற்றதுயர்துடைத்ததினலோதீயவனைக்                                                                  கடிந்ததனாலோ சிவந்த குமரன் மார்பைப்போற்றுகிறேன் 11


( ஜகன்நாதன் )

                   

Sunday, June 26, 2016சுப்ரமண்ய புஜங்கத்தின் பத்தாவது ஸ்லோகம் 

ஸ்வர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேமபட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10


( ஸ்ரீ ஆதிசங்கரர் )


எல்லையற்ற பிரகாசத்தைக் கொடுக்கின்றன தங்கமயமான உடைகள் உடல்முழுதும் இலங்க இடுப்பில்  கணகணவென இசை ஒலிக்கும் பொற்சலங்கைகள்;திகந்து   அ வை . எல்லையற்றப் பிரகாசத்தை அளிக்கின்றன அத்தகைய அழகுடைய செந்தூரிலம்மானை அகத்தில் இருத்தி தியானிப்போம்.

   முருகன் தன்னுடைய அரையில் (இடுப்பில்) பொன்னுடையும், அதன்மேல் பெண்மணிகள் ஒலிக்கும் கச்சையும் ஒட்டியாணமும் அணிந்துள்ளான்.


அடியேன் இற்றிய பாடல் 

தங்கமயமானஆடைகளஒளிவீசிஉடலெங்குமிலங்க 

   மங்கலலமாககிண்கிணிஎன்றுகனகச்சலங்கைஒலிக்க 

 பொங்கும்பேரொளிஎங்கும்பரவித்திகழஎந்தநாளிலும்

          மங்கலம்மிகுசெநதிலானை நெஞ்சம்வைத்தடி தொழுவோமே10 

  ( ஜெகன்நாதன் )               

Saturday, June 25, 2016                                சுப்ரமண்ய புஜங்கத்தின் ஒன்பதாவது ஸ்லோகம்                                                                                          ஸ்ரீ அதி சங்கரர் அருளியது

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷ பூர்ணே
மனஷ்ஷட்பதோமே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்ததே பாதபத்மே (
9)
( ஸ்ரீ ஆதிசங்கரர் )

சிவந்த வண்ணமுடைய அன்னப்பறவைகள் நிறைந்து விளங்குவதாகவும்  பார்க்கடலிலிருந்து பொங்கிய அமுதம் பொழிவதாகவும் செவ்வொளி மிகுந்ததாகவும் பிறப்பறுக்கும் திறணுடையதுமான செந்தில் கறையிலுறையும் நம் கந்தநாதனின் செங்கமலத் திருவடிகளில் என் மனமான வண்டு விடாது ரீங்காரித்து அவ்விடமே உறைய  வேண்டுவேனே

பொதுவாக அன்னப்பறவைகள் வெண்ணிறமானவையாகவே இருக்கும் ஆனால் திருச்செந்திலில் விளங்கும் செவ்வொளியினால் அவையும் நிறம் மாறி சிவந்த வண்ணமுடையவையாகத்திகழ்கின்றன என்று அழகாக் ஆதிசங்கரர் அருளியுள்ளார்

அடியேன் இயற்றிய பாடல்

செந்நிறஅன்னப்பரவைகளுறைந்திடபார்க்கடலிலிருந்துபெருகி

  வந்தஅமுதம்வழிந்திடசெவ்வொளிமிகப்பொழிந்துபிறப்பறுக்கும்

செந்தில்கரையுறைநம்கந்தநாதன்கமலப்பொற்பாதங்கள்தனில்

   எந்தன்மனவண்டுவிடாது ரீங்கரிக்க வேண்டுவேனே சுந்தரனே      9

( ஜகன்நாதன் )

Thursday, June 23, 2016சுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம்

லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)

( ஸ்ரீ ஆதிசங்கரர்  )


 அழகிய திருக்கோவிலில், பன்மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது, ஒளிமிகக்கொண்டு பிரகாசிக்கின்ற ஒருகோடி சூரியர்களுடைய பிரகாசமும் மங்கிவிடும் அளவிற்கு  எல்லையற்ற ஜோ தியையுடைய தேவதேவனான செந்தில் நாதன் ,வீற்றிருக்கும் மகத்துவத்தை மனதுள் எண்ணி எண்ணி அவனை சிந்தனை செய்து வணங்குவோமே. 

மாணிக்க மஞ்சே என்பது மாணிக்கம் போன்ற நவரத்தினங்களால்  என்று பொருள் படும் 

அடியேன் இயற்றிய பாடல் 

எழிலுறு திருச்செந்தில்ஸன்னிதியில்பன்மணிகள்இலங்கு              அழகுத்திருக்கட்டிலில்கோடிசூர்யப்ப்ரகாசத்துடனிலங்கும்            குழந்தைகார்த்திகேயன்வீற்றிருக்கும்மஹோன்னதத்திரு      வழகுகோலம் எண்ணி எண்ணி மகிந்து வணங்குவோம் 8

( ஜகன்நாதன் )

Wednesday, June 22, 2016
                        ஸ்ரீ ஸுப்ரமண்ய புஜங்கத்தின்   ஏழாவது ஸ்லோகம்


மஹாம்போதிதீரேமஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே
குஹாயாம்வஸந்தம் ஸ்வபாஸாலஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)
.
( ஸ்ரீ ஆதிஸங்கரர் )
கரையாத பாவம் கரையும்
பெரிதான நீலக்கடலோரம் கொடுமையான பாவங்களையும் குறைகளையும் போக்கிட புகழ் மலிந்தசித்தர்கள் உறைகின்ற செந்திலோனின் திருத்தலமதில் ஒளிமிகு வடிவுடைய வேலவன் உயிருள் உயிரான பாலகன் தன் பொன்னிற ஒளிமிகு பாதங்கள் பற்றி உய்வோமே
நீலக்கடலோரம் நலிந்தோர் பாவம் போக்கும் புகழ்மலிந்த                                                                                சீலமிகுத்திருசித்தர்களுறைகந்தகிரிதனில்எல்லையிலா                                                    வேலவன்ஒளிமிகுவடிவுறுஎழிற்கோலன்உயிருள்உயிரான 
\                                                                     பாலகன்தன் கனகஒளித் திருத்தாள் பற்றியுய்வோமே 7

( ஜகன்நாதன் )

Friday, June 10, 2016

சிவா குடும்ப அந்தாதி
ஸ்ரீ சிவகுடும்பம்
திருவிளையாடல்கள் பலகாட்டி திருவருளும் தில்லைநடராஜன்
பெருவழகுடன் பவம்காக்கபரமனுடன்பரிவோடாடும்பரமேஸ்வரி                                      மருவிலா மனதோடு எண்ணுவோர் செயல்காக்கும் மஹாகணபதி  உருவடிவழகுடைபாலன்உருகுவோர்வினைதீர்க்கும்வடிவேலன்                                                    கருத்தினில் கருணைமிகு சிவகுடும்பத்தினை உருவேற்றுவோமே

சிவ குடும்ப அந்தாதி

எண்ணத்தில்  உன்னை முன்வைத்தே நல்வேழமுகப்                       பண்ணமுதனே செய்யும் செயல் யாவும்துவக்குவேன்                        கண்மூன்றுடை கருணாகரன் பெற்ற செல்வனே என்றும்                 மண்ணுலகில் மலமற்று வாழ்ந்திட நின் திருவடியருளுமே

அருளுமே அனைத்து இகபர சுகமும் அளவிலாஉன் கருணை             திரளுமே தூய பக்தர்கூட்டம் தினம் தினம் உன் திருவடிகாண               அரளுமே தீதுற்றோர் தீயக்கூட்டம் உன் திருநாமப்புகழ் கேட்டு                  வரளுமே வற்றாத வறுமையும் தீமையும் செந்திலானைக்கண்டு

கண்டேன் தாயே நின் சலங்கைதிகழ் கமலப்பொற்பாதம்                     கொண்டேன் அளவிலாப் பெருமகிழ்வு என்அம்மா உந்தன்                     கெண்டையம் தடங்கண் மலர் பேரெழில் கண்டு வியந்து             வண்டார் குழலியே ஈசன் என்றும் மகிழ் உமையம்மையே

அம்மை இடப்புறம் எழிலுறக்கொண்ட ஆலவாயா அன்புடன்                எம்மை எந்நாளும் ஏற்றமுறச் செய்யும் எங்கள் ஏகம்பனே            தம்மையே தந்தார்க்கு தாயுமானவனே சிறிதும் தவறாது              இம்மையும் எம்மையும் நிறைவோனே ஜெகன்நாதன் எண்ணம்

எண்ணத்தில் என்றும் ஏகமாய் நிறைந்திட்ட ஏகநாதனே   ண்ணமுதப்பேரெழிலாள் பரமேஸ்வரியுடனும் பார்புகழ்     முன்னவன்முதல்வன்விநாயகனுடன்மறவாதருளும்நம்             சின்னப்பிள்ளை செவ்வேளோடும் நிறைவாயே என் எண்ணம்

ஜகன்நாதன்