Wednesday, December 28, 2011


நோய்தீர்க்கும் ஸ்லோகம்
வைத்யனாதாஷ்டகம்

   சிவன் வைத்யனாதன் ஆவார். ஏனெனில் சகல வியாதிகளுக்கும் அவரே நிவாரணியாவார்.எல்லா வைத்தியர்களுக்கும் அவர் தலைவனாவார் அதனாலாயே அவர் வைத்யனாதன் என்று அழைக்கப்படுகின்றார்.

   வைத்தியர் மருந்து மட்டுமே கொடுக்கின்றார் ஆனால் இறைவனே குணப்படுத்துகின்றார் இதையே
   DOCTOR TREATS AND GOD CURES
  என்று சொல்லுகின்றோம்.
 ஒரு மருத்துவர் ஒரே நோய்க்கு இரு நோயாளிகளுக்கு ஒரே வித வைத்தியம் செய்தாலும் ஒருவர் உடனே குணமடைகின்றார் ஆனால் மற்றொருவர் குணமடைவதில்லை.ஆக மருத்துவத்துக்கும் மேற்பட்ட ஒன்று இருக்கின்றது அதுதான் இறையருள்.அந்த இறையருள் இருந்தால் மருத்துவரின் வைத்தியம் உடனடியாக பலன் அளீக்கின்றது அது இல்லாதவற்கு பலனளிப்பது இல்லை

  அந்த இறையருள் பெற நமக்குள்ள பொக்கிஷம்தான் வைத்ய நாதாஷ்டகம். இதிலே அமைந்துள்ள எட்டு ஸ்லோகங்களும் உன்னதமானவை.அவைகளை தினம் படிப்பதனால் எல்லாவித நோய்களிலிருந்தும் அதிவிறைவில் குணமடைய முடியும் என்பது உறுதி.

  வைத்யநாதாஷ்டாகத்திலே அமைந்துள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு வைரமாகும் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் மஹாதேவ மஹாதேவ என்று பதினாறு முறை சொல்லவேண்டும் இதன்படி இந்த அஷ்டகத்தைச்சொல்லிமுடிக்கும்போது மஹாதேவ என்று 144 முறைகள் சொல்லி இருப்போம்

  நம்முடைய பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ ஏதேனும் நோய் வந்தால் அது உடனடியாக நிவாரணம் ஆக எட்டாவது ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்
   நீல கண்டாய ரிஷபத்வஜாய
   ஸ்ரக்கந்த பத்மோத்ய பிசோபிதாய
   சுபுத்ரதாராதி சுபாக்யதாய
   ஸ்ரீவைத்யனாதாய நமசிவாய
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ

  இதிலே வரும் சுபுத்ரதாராதி என்பது பிள்ளைகளையும் அவர்களைச்சேர்ந்தவர்களையும் குறிக்கின்றது பிள்ளைகளுக்கோ பேரக்குழந்தைகளுக்கோ உடல் நலக்க்றைவு ஏற்படும்போது இந்த
ஸ்லோகம் நல்லதொரு நிவாரணியாகும்

ஓம் நமசிவாய

Tuesday, December 27, 2011


இறைவனை அடையும்வழிகள்

இறைவனை அடையும் வழிகள் ஒன்பதாகும்.அவைகள்

1. ஸ்ரவணம்   கேட்டல்    இறைவன் புகழைக்கேட்பதன் மூலம்
     அவனை அடைதல்   ஹனுமான்
2. கீர்த்தனம்  பாடல் மூலம் அவனை அடைதல்
      தியாகேசர்  வால்மீகி
3. ஸ்மரணம்  மனதால் நினைத்தல்  அவனையே எப்போதும்
      அவனையே நினைத்திருந்து அவனை அடைதல் சீதை
4. பாதசேவனம்  பாதங்களைப் பணிதல் பரதன்
5. அர்ச்சணம்  பூஜித்தல்   சபரி  கண்ணப்பர் மற்றும் பலர்
6. வந்தனம்  வணங்கி பூஜித்தல்  விபீஷணன்
7. தாஸ்யம்  தொண்டு செய்தல்  லக்ஷ்மணன் நாவுக்கரசர்
8. சக்யம்  ஸ்னேகபாவம்   அர்ஜுனன்  சுந்தரர்
9. ஆத்ம நிவேதனம்  தன்னையே அர்ப்பணித்தல்  ஜடாயூ

  இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றைப் பற்றுவதே இறைவனை
  அடைவதற்கான வழியாகும்

Tuesday, December 20, 2011


சனிப்பெயர்ச்சி

   ஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு ராசிகளீல் சஞ்சாரிக்கின்றன.ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சஞ்சாரம் செய்தபின் அடுத்த ராசிக்கு மாறுவதையே கிரகப்பெயர்ச்சி என்று சொல்லுகிறோம் அவ்வாறாக சனிக்கிரகம்
ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தபின் அடுத்த கிரகத்துக்கு பெயர்கிரது. எனவே சனிக்ரகத்தின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளுகு ஒரு முறை நிகழ்கிறது. தற்போது சமீபத்தில் சனிப்பெயற்சி நிகழ இருக்கின்றது

ஈஸ்வரன்

  ஈஸ்வரன் என்றதும் நம் நினைவுக்கு வருபவ்ர் சர்வேஸ்வரனான சிவபெருமான்தான் சிவனைத்தவிர ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் நான்கு பேர்கள் மட்டுமே  அவர்கள்

   1. சிவபெருமான்         சர்வேஸ்வரன்
   2  கணபதி              விக்ணேஸ்வரன்
   3  சனிகிரகம்            சனீஸ்வரன்
   4  ராவனன்             இலங்கேஸ்வரன்
   5  கோடிபெற்றவன்      கோடீஸ்வரன்

  இதிலே சிவனும்  கனபதியும்  கடவுள்கள்
இராவணேஸ்வரன் அபரிமிதமான சிவபக்தி கொண்டவன்
முறையன வழியிலே கோடிகள் சம்பாத்தவர்கள். கோடீஸ்வரர்கள்
ஒன்பது கிரகங்களிலும் சிறப்பு பெற்றவர் என்பதால் சனிகிரகத்துக்கு சனீஸ்வரன் என்ற பட்டம் உண்டு

  பொதுவாகவே சனீஸ்வரன் என்றால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.அதிலும் ஏழரை நாட்டு சனி என்றாலோ அல்லது அஷ்டமத்தில் சனி என்றாலோ பயப்படாதவர்களே இல்லை..சனியின் சுழர்ச்சி முப்பது ஆண்டுகளாகும் ஏழரை நாட்டு சனியின்போது முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச்சனியாகும் அடுத்த இரண்டரையாண்டுகள் ஜன்மச்சனியாகும்  கடைசி இரண்டரையாண்டுகள் பாதச்சனியாகும்

  சனீஸ்வரனால் பாதிப்பும் சங்கடங்களுக்கும் உள்ளாபவர்கள் உள்ளன்போடும் பக்தியோடும் சனீஸ்வரனையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் எல்லாத்துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்.எந்தக்கடவுளும் அல்லது எந்த கிரகமும் பக்தர்களுக்கு துன்பம் உண்டு பண்ணுவதில்லை, அவரவ்ர்களின் கர்மவினைகளே பலன்களாக வருகின்றன அவைகளை ஈசனின் அருள் மூலம் முழுமையாக வெல்லமுடியும்.
    இதைத்தான் கோளறுபதிகம் சொல்லுகின்றது அதிலே ஞானசம்பந்தர் பத்து அழகான பதிகங்களில் ஒன்பது கிரஹங்களும் எவ்வாறு நன்மையை மட்டுமே தருகின்றவையாக அமையமுடியும் என்று விளக்குகின்றார்.ஒவ்வொரு பாட்டின் முடிவிலும்
  நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல அடியார் அவற்கு மிகவே
என்று முடிக்கின்றார்

  பதினோறாவது பாடலிலே
   தானுறு கோளும் நாளும் வந்து அடியாரை நலியாத வண்ணம்
   உரைசெய் ஆனமாலை ஓதும் அடியார்கள் வானில்
   அரசாள்வார் ஆணை நமதே
என்று ஆணையிட்டுச்சொல்லுகின்றார்.

எனவே ஈஸ்வரனின் அருள் பெற்றோர்க்கு எல்லா கிரகங்களும் எல்லாக் காலங்களிலும் நல்லவையாகவே அமையும்.அவை எந்த தீமையும் செய்யா.எனவே தினமும் கோளறுபத்கம் படித்து ஈசனருள் பெற்று எல்லாக்கோள்களின் நல்லருளையும் பெறுங்கள்

வேயுருதோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை
முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

  இந்த முதல் பாடலையும் அதைத்தொடர்ந்து வரும் மற்ற ஒன்பது பாடல்களையும் தினமும் ஈசன் முன் ஓதி அவனருள் பெற்று எல்லா கிரகங்களின் அருளையும் பெற்று உய்வோம்


ஓம் நமசிவாய
திருசிற்றம்பலம்


  

Sunday, December 18, 2011


விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானம் எப்படி உண்மையோ மெய்ஞ்ஞானமும் அப்படியே உண்மையாகும்.
விஞ்ஞானத்தின் முடிவே மெய்ஞ்ஞானத்தின் ஆரம்பமாகும
வெளிப்படையான விஞ்ஞான ஆய்வுக்கு மெய்ஞ்ஞானம் உட்பொருளைத்தருகின்றது.

விஞ்ஞானத்தில் உடலும் செயலும் ஒரு பொருளை ஆராய்கின்றன அதற்கு வடிவம் உண்டு.ஆனால் மெய்ஞ்ஞான
உண்மைகளை உணர்வாலும் ஆத்மாவினாலும் உணர்ந்துதான் அறியமுடியும் ஏனெனில் அவைகளுக்கு உருவம் கிடையாது.
ரோஜா மலரைக்கண்டு அதன் அழகை ரசிக்கின்றோம். அதன் வண்ணத்தை வார்த்தைகளால் விளக்குகின்றோம்.
ரோஜா மலரின் இனிய மனம் மயக்குகின்ற மணத்தை உணர்ந்து
ரசித்து மகிழ்கின்றோம் .ஆனால் அந்த மணம் எப்படி இருக்கின்றது என்று நம்மால் வார்த்தைகளால் விளக்க முடியாது.அதுபோலத்
தான் மெய்ஞ்ஞான உண்மைகளை உணர மட்டுமே முடியும்.

மேலே தூக்கி எரியப்பட்ட பொருள் கீழேவிழும் என்பது விஞ்ஞான உண்மை இதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அது
ஏன் கீழே விழுகிறது என்றால் புவியீர்ப்பு என்று எல்லோரும் சொல்வோம் உண்மையும் அதுதான்.ஆனால் அந்த புவியீர்ப்பு
GRAVITATION எப்படி இருகும் என்று யாராலும் விளக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

ஆனால் மேலே தூக்கி எரிந்த பொருள் கீழே விழுவதும் அதற்கு புவியீர்ப்புதான் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அந்த இரண்டுமே என்றுடன் ஒன்று கலந்து விளங்குபவை.
உலகிலே அனைத்துமே இரண்டிரண்டாகதான் இயங்குகின்றன
ACTION  REACTION
நன்மை  தீமை
இரவு    பகல்
வெப்பம்     குளிர்ச்சி
ஆண்        பெண்
இளமை     முதுமை

என்று சொல்லிக்கொண்டே போகலாம்
எனவே ஒரு வட்டத்திலே 360 ட்கிரியும்  0 டிகிரியும் ஒரே புள்ளியில் அமைந்திருப்பது போல் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே இடத்திலிருந்துதான் இயங்குகின்றன

Thursday, December 15, 2011


BACK PAIN  முதுகு வலி

வாழ்க்கையில் முதுகு வலி வராதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக முதுகுவலிஎன்பது கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து இடுப்புப்பகுதிவரையில் எங்கு வேண்டு
மானாலும் வரலாம். அதன் தன்மையும் பொறுக்கமுடியாத வலி முதல் மிதமான வலியாக அமையலாம்  ஆனால் எப்படியிருந்தாலும் முதுகுவலி என்பது ஒரு பிரச்சினைதான்

 CAUSES

The causes for back pain are so many
1.    some times it may be due to a life time bad habit
2.    Accidents
3.    Muscle strain and Sports injuries
4.    At times the cause is not known
5.    Diseases of the joints muscles and nerves
6.    Aging
7.    Calcium deficiency
8.    We can go on enumerating the causes

 SYMPTOMS

  Whatever be the cause the symptoms of Back pain are the same
1.      Persistent ache or stiffness along your spine
2.      Sharp and localized pain in the neck upper middle or lower back especially after some straining like bending and lifting
3.      Chronic back pain in the middle and lower back especially after sitting or standing for a long time
4.      Pain that radiates (moves) from the back to the buttocks thighs calf and toes
5.      Inability to stand without severe muscle spasm and support

WARNING SIGNS

1.       With back pain if you have NUMBNESS  TINGLING and LOSS OF CONTROL of movements it may be due to spinal cord disease
2.       When the back pain extends below the thighs it may be due to sciatica
3.       If the pain increases when you cough or laugh or bent forward it may be due to a prolapsed spinal disc
4.       If the pain is accompanied with fever painful urination and lower abdominal pain it may be due to urinary infection
5.       If you have a dull pain while lying or while getting down from the bed it may be due to osteoarthritis a degenerative bone disorder
 THESE ARE SITUATIONS WHEN YOU HAVE TO SEEK IMMEDIATE MEDICAL AID

DIAGNOSIS

Prior to performing complicated and expensive tests the doctor will do certain simple clinical tests like
   Locating the site of pain
   Assessing the range of mobility of the limb
   Functioning of the nerves concerned
1.      Blood and urine tests
2.      X Ray of the back and limbs
3.      C-T Scam
4.      MRI Scan
5.      Electromyogram EMG

TREATMENT

   For milder pain without any serious underlying problem or complication simple measures are sufficient they are

1.      Application of warmth or ice packs
2.      Milder pain relievers like Paracetemol Brufen etc
3.      Long term bed rest is mostly not advised
4.      Controlled and mild exercise is recommended
5.      Physical therapy like message ultrasound and heat
6.      Individualized and tailored exercise programs
7.      Exercises to strengthen the back and abd muscles
8.      Medications are useful to relieve pan but they are also harmful on prolonged usage
9.      Surgery may be needed in needed situations.

REMEMBER EARLY INTERVENTION WILL SAVE YOUR LIFE AND MONEY AND PREVENT SUFFERING AND INCONVENIENCE AND MAKE LIFE HAPPY


 1.

Saturday, December 3, 2011


ஒம் நமசிவாய


சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் அல்லது ஸ்வஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும் ஈசனின் திருவிளையாடல்களும் அறுபத்து நான்காகும் ஈசனின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் தனி வரலாறும் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்துக்கும் தொடர்புடைய ஒரு ஸ்தலம் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்தைப்பற்றி அறியும்போது அதன் தொடர்புடைய வரலாறையும் அந்த ஸ்தலத்தின் பெருமையும் நாம் அறிய முடிகின்றது முதல் வடிவமாக ஈஸ்வரன் இருந்து அருள்வது
லிங்கவடிவமாகும்

1.லிங்கவடிவம்

பரமேஸ்வரன் சகலமுமானவர் மற்றும் சகலத்துக்கும் அப்பார்ப்
பட்டவர்..இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் ஆக்கியவரும் அதைக்
காப்பவரும் அவரே பஞ்ச பூதங்களாக அருள்பவர் அவரே மேலும் ஐம்புலங்களையும் கடந்தவர் மனம் வாக்கு காயம் என்ற மூன்றிற்கும் மேலானவர்
 இவைகளை எல்லாம்விட உருவமாகவும் உருவமற்ற அருவமாகவும் விளங்குபவர் ஈஸ்வரன் எல்லாம் அவரே. ருத்ரம் இதைத்தான் ப்ரபஞ்சத்தில் சகலமும் சிவனே என்று சொல்லுகின்றது இந்த உருவமும் உருவமற்றதுமான நிலையையே நாம் லிங்கம் என்று சொல்லுகின்றோம்

  லிங்கத்தின் மேல் பகுதி சிவரூபமாகும் .அதன் பீடம் சக்தி வடிவமாகும் முழு லிங்கம் சிவசக்த்திஸ்வரூபமாகும் லிங்க வடிவிலேயே ப்ரம்மனும் விஷ்னுவும்கூட அமைந்துள்ளார்கள்
லிங்கத்தின் நடுவே சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே ப்ரம்மனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அமைந்துள்ளார்கள்

    இத்தகைய சிறப்புடைய லிங்கம் எல்லா சிவாலயகளில் இருந்தாலும் மகாலிங்கம் என்ற சிறப்புடன் விளங்குவது
திருவிடைமருதூரில்தான் இங்கு சிவபெருமான் தானே பூஜைக்கு
லிங்கம் அமைத்து பூஜை செய்து பூஜா விதிகளை வகுத்துத்தந்துள்ளார் காவிரி அன்னை இத்தலத்தில் சிவனை
வில்வத்தல் பூஜித்துள்ளாள். இத்தலம் ப்ரம்மஹத்தி தோஷ பரிகார ஸ்தலமாகும் இங்கு ஈஸ்வரனை வில்வம் கொண்டு
அர்ச்சனை செய்து வழிபட்டால் உடலும் மனமும் தூய்மை அடைவதுடன் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடையும்

லிங்கஸ்வரூபமாய் விளங்கும் மகாலிங்க மூர்த்தியை வணங்கி அருள் பெற்றுய்வோம்

Friday, December 2, 2011


சிவ வடிவங்கள் (தொடற்சி)

   சிவ வடிவங்கள் அறுபத்து நான்கில் முதல் 32 வடிவகளை முன்பு குறிப்பிட்டு இருந்தேன் இன்று மீதமுள்ள 32 வடிவங்கள் என்னென்ன என்று பார்ப்போம்


33 யோக தக்ஷினாமூர்த்தி வடிவம்
34 வீணா தக்ஷிணாமூர்த்தி வடிவம்
35 காலந்தக மூர்த்தி வடிவம்
35 காமதகன மூர்த்தி வடிவம
37 இலகுளேஸ்வர மூர்த்தி வடிவம்
38 பைரவ மூர்த்தி வடிவம்
39 ஆபத்தோத்தரண மூர்த்தி வடிவம்
40 வடுக மூர்த்தி வடிவம்
41 க்ஷேத்திரபால மூர்த்தி வடிவம்
42 வீரபத்ர மூர்த்தி வடிவம்
43 அகோரமூர்த்தி வடிவம்
44 தட்சயஞ்யஷதமூர்த்தி வடிவம்
45 கிராதமூர்த்தி வடிவம்
46 குருமூர்த்தி வடிவம்
47 அசுவாருட மூர்த்தி வடிவம்
48 கஜாந்திக மூர்த்தி வடிவம்
49 சலந்தரவத மூர்த்தி வடிவம்
50 ஏகபாதத்ரி மூர்த்தி வடிவம்
51 திரிபாதத்ரிமூர்த்தி வடிவம்
52 ஏகபாதமூர்த்தி வடிவம்
53 கௌரிவரப்ரதமூர்த்தி வடிவம்
54 சக்கரதானமூர்த்தி வடிவம்
55 கௌரிலீலாசமன்விதமூர்த்தி வடிவம்
56 விசாபகரணமூர்த்தி வடிவம்
57 கருடன் அருகிருந்தமூர்த்தி வடிவம்
58 ப்ரம்ம சிரச்சேதமூர்த்தி வடிவம்
59 கூர்மசம்ஹாரமூர்த்தி வடிவம்
60 மச்சசம்ஹாரமூர்த்தி வடிவம்
61 வராகசம்ஹாரமூர்த்தி வடிவம்
62 ப்ரார்த்தனாமூர்த்தி வடிவம்
63 ரத்தபிக்ஷாப்ரதானமூர்த்தி வடிவம்
64 சிஷ்யபாவமூர்த்தி வடிவம்

   இப்போது சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள் எனென்ன என்று பார்த்தோம் இனி  ஒவ்வொரு ஸ்வரூபத்தின் காரணம் முக்கிய ஸ்தலம் வழிபாட்டுப்பலன்கள் பற்றி விரிவாக வரும்  நாட்களில் பார்ப்போம்