Saturday, December 3, 2011


ஒம் நமசிவாய


சிவ வடிவங்கள்

சிவ வடிவங்கள் அல்லது ஸ்வஸ்வரூபங்கள் அறுபத்து நான்காகும் ஈசனின் திருவிளையாடல்களும் அறுபத்து நான்காகும் ஈசனின் ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு சிறப்பும் தனி வரலாறும் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்துக்கும் தொடர்புடைய ஒரு ஸ்தலம் உண்டு ஒவ்வொரு ஸ்வரூபத்தைப்பற்றி அறியும்போது அதன் தொடர்புடைய வரலாறையும் அந்த ஸ்தலத்தின் பெருமையும் நாம் அறிய முடிகின்றது முதல் வடிவமாக ஈஸ்வரன் இருந்து அருள்வது
லிங்கவடிவமாகும்

1.லிங்கவடிவம்

பரமேஸ்வரன் சகலமுமானவர் மற்றும் சகலத்துக்கும் அப்பார்ப்
பட்டவர்..இந்த ப்ரபஞ்சம் முழுவதையும் ஆக்கியவரும் அதைக்
காப்பவரும் அவரே பஞ்ச பூதங்களாக அருள்பவர் அவரே மேலும் ஐம்புலங்களையும் கடந்தவர் மனம் வாக்கு காயம் என்ற மூன்றிற்கும் மேலானவர்
 இவைகளை எல்லாம்விட உருவமாகவும் உருவமற்ற அருவமாகவும் விளங்குபவர் ஈஸ்வரன் எல்லாம் அவரே. ருத்ரம் இதைத்தான் ப்ரபஞ்சத்தில் சகலமும் சிவனே என்று சொல்லுகின்றது இந்த உருவமும் உருவமற்றதுமான நிலையையே நாம் லிங்கம் என்று சொல்லுகின்றோம்

  லிங்கத்தின் மேல் பகுதி சிவரூபமாகும் .அதன் பீடம் சக்தி வடிவமாகும் முழு லிங்கம் சிவசக்த்திஸ்வரூபமாகும் லிங்க வடிவிலேயே ப்ரம்மனும் விஷ்னுவும்கூட அமைந்துள்ளார்கள்
லிங்கத்தின் நடுவே சதாசிவனும் மேற்கே ஈசனும் வடக்கே ப்ரம்மனும் தெற்கே திருமாலும் கிழக்கே ஈசனும் அமைந்துள்ளார்கள்

    இத்தகைய சிறப்புடைய லிங்கம் எல்லா சிவாலயகளில் இருந்தாலும் மகாலிங்கம் என்ற சிறப்புடன் விளங்குவது
திருவிடைமருதூரில்தான் இங்கு சிவபெருமான் தானே பூஜைக்கு
லிங்கம் அமைத்து பூஜை செய்து பூஜா விதிகளை வகுத்துத்தந்துள்ளார் காவிரி அன்னை இத்தலத்தில் சிவனை
வில்வத்தல் பூஜித்துள்ளாள். இத்தலம் ப்ரம்மஹத்தி தோஷ பரிகார ஸ்தலமாகும் இங்கு ஈஸ்வரனை வில்வம் கொண்டு
அர்ச்சனை செய்து வழிபட்டால் உடலும் மனமும் தூய்மை அடைவதுடன் மூளை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமடையும்

லிங்கஸ்வரூபமாய் விளங்கும் மகாலிங்க மூர்த்தியை வணங்கி அருள் பெற்றுய்வோம்

No comments:

Post a Comment