Thursday, June 23, 2016



சுப்ரமண்ய புஜங்கத்தின் எட்டாவது ஸ்லோகம்

லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)

( ஸ்ரீ ஆதிசங்கரர்  )


 அழகிய திருக்கோவிலில், பன்மணிகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மீது, ஒளிமிகக்கொண்டு பிரகாசிக்கின்ற ஒருகோடி சூரியர்களுடைய பிரகாசமும் மங்கிவிடும் அளவிற்கு  எல்லையற்ற ஜோ தியையுடைய தேவதேவனான செந்தில் நாதன் ,வீற்றிருக்கும் மகத்துவத்தை மனதுள் எண்ணி எண்ணி அவனை சிந்தனை செய்து வணங்குவோமே. 

மாணிக்க மஞ்சே என்பது மாணிக்கம் போன்ற நவரத்தினங்களால்  என்று பொருள் படும் 

அடியேன் இயற்றிய பாடல் 

எழிலுறு திருச்செந்தில்ஸன்னிதியில்பன்மணிகள்இலங்கு              அழகுத்திருக்கட்டிலில்கோடிசூர்யப்ப்ரகாசத்துடனிலங்கும்            குழந்தைகார்த்திகேயன்வீற்றிருக்கும்மஹோன்னதத்திரு      வழகுகோலம் எண்ணி எண்ணி மகிந்து வணங்குவோம் 8

( ஜகன்நாதன் )

No comments:

Post a Comment