ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 27
ஓம் நமசிவய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,
செப்டம்பர், 18, 2025
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் இருபத்து ஏழாவது
திவ்ய நாமத்தைப் பார்ப்போம். இந்த நாமம் அம்பிகையின் நல்ல இனிய குரலின் வளத்தையும், அதன் மூலம் அம்பாள் பரமேஸ்வரருடைய இதயத்தையும், இந்த ப்ரபஞ்சத்தையும் எப்படி ஆட்கொண்டருள்கிறாள் என்பதை விவரிக்கின்றது.
இந்த நாமமும் அம்பாளின் பத்தாவது ஸ்லோகத்தில் வருகின்றது
27. நிஜ ஸல்லாப மாதுர்ய விநிர்ப த்ஸித கச்சபி
நிஜ |
எப்பொழுதும்
|
மாதுர்ய |
மதுரமான ,இனிமை யான |
சல்லாப,
|
சம்பாஷனை உரையாடல் |
கச்சபி |
சரஸ்வதியின் வீணை |
வினிர்ப்ப |
பழிக்கும் விதமாக
|
ஸ்தித |
அமைந்திருக்கும் |
அம்பாளின் குரலின் இனிமை வாணியாகிய
சரஸ்வதி தேவியின் கச்சபி என்ற வீணையிலிருந்து வரும் இனிய நாதத்தையும் பழிக்கும் வண்ணம்
அதனினும் மிக இனிமையாக இருக்கும்
சரஸ்வதியின் வீணை (வீணை என்பது நரம்புகளைக்
கொண்ட இசைக்கருவி) கச்சபி என்று அழைக்கப்படுகிறது. இது நுண்கலைகளின் தெய்வமான
சரஸ்வதி தேவியின் கைகளில் ஒரு அற்புதமான மெல்லிசையை உருவாக்குகிறது. லலிதாதேவியின்
குரல் சரஸ்வதியின் வீணையை விட இனிமையானது.
சவுந்தர்ய லஹரி (பாடல் 66) கூறுகிறது: “வாணி (சரஸ்வதி) சிவனின் பல்வேறு மகிமையான செயல்களைப் பற்றி வீணையுடன்
பாடும்போது, நீங்கள் பாராட்டு வார்த்தைகளை வெளிப்படுத்தத்
தொடங்குகிறீர்கள், உங்கள் தலையை ஆட்டுகிறீர்கள்,
உங்கள் பாராட்டும் குரலைக் கேட்டவுடன் சரஸ்வதி விரைவாக தனது வீணையை வாசிப்பதை நிறுத்தி
அதன் பெட்டியில் வைத்து.மூடுகிறாள். வீணையின்னரம்புகளில் இருந்து
வரும் இனிய நாதம் உங்கள் புகழ்ச்சி வார்த்தைகளின் மென்மையான
மெல்லிசையால் கேலி செய்யப்படுகிறது.”
முந்தைய நாமத்திற்கு வழங்கப்பட்ட விளக்கம் இங்கேயும் பொருந்தும். அவள் இந்த இனிய குரலால் அறியாத ஆந்மாக்களை
ஈர்க்கிறாள் என்று இது அர்த்தப்படுத்தலாம். அறிவுள்ள ஆந்மாக்கள் பக்தியால் அவளை
அடைய முடியும், அதே நேரத்தில் அறியாத ஆந்மாக்கள்
அவளுடைய அருளைப் பெற தூண்டுதல் தேவை. இந்த தூண்டுதல் தான் இங்கே
குறிப்பிடப்பட்டுள்ள குரலின் இனிமை.
இத்துடன் இன்றைய பதிவினை நிறைவு
செய்கிறேன் .நாளை
இருபத்து எட்டாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம். சிவதாஸன் ஜகன்நாதன்
ஓம்நமசிவாய: வியாழன், செப்டம்பர், 18, 2025
No comments:
Post a Comment