ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 19 மற்றும் 20
ஓம்நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,11, செப்டம்பர்,2025
அனைவருக்கும்
வணக்கம். இன்று நாம் அம்பாளின் பத்தொன்பது மற்றும்
இருபதான இரண்டு திவ்ய நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் நாசி அழகையும், அம்பாள் அணிந்திருக்கும் மூக்குத்தியின் லாவண்யத்தையும் விவரிக்கின்றன்.
இந்த இரனடு
நாமாவளிகளுமே அம்பாளின் ஏழாவது ஸ்லோகத்தில் வருகின்றன.
19. நவ சம்பக புஷ்பாப நாஸா தண்ட விராஜிதா
நவ |
புதிதாக
|
ஷம்பக புஷ்ப |
ஷண்பக மலர்
|
ஆப |
ஒளிருதல்
|
நஸா |
மூக்கின்
|
தண்ட |
தடம்
|
விராஜிதா |
அமையப் பெற்றவள் |
அவளுடைய மூக்கு புதிதாக மலர்ந்த சம்பகா பூவைப் போல
இருக்கிறது.தமிழில் அழகான நாசியை எள்ளுப்பூவிற்கு ஒப்புமை சொல்லுவார்கள்.இங்கே அம்பாளின் நாசி
மலர்ந்தும் மலராத பாதி மலரான ஷண்பக மலருக்கு ஒப்பிடப் படுகிறது.ஷண்பக மலர் தெய்வீகமானது எனவேதான் அம்பாளின் நாசி அம்மலருக்கு உவமைப் படுத்தப்
பட்டுள்ளது.அந்த புதிய ஷண்பக மலர் பேரொளியுடன் மிளிர்ந்து அழகுக்கு
அழகூட்டுகிறது
20. தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா
தாரா |
தரகை, நக்ஷத்திரம்
|
காந்தி |
ஒளிர்ந்து
மின்னும் |
திரஸ்காரி |
மிஞ்சிய, அதிகமான
|
நாஸா |
மூக்கு, நாஸி
|
ஆபரண |
ஆபரணம், மூக்குத்தி
|
பாஸு |
மினுமினுப்புடன்
ஜ்வலித்தல் |
நட்சத்திரங்களின் அழகையும் ஜ்வாலையையும் மிஞ்சும் மூக்குத்தியை அவள் அணிந்திருக்கிறாள். அவளுடைய மூக்குத்தி மாணிக்கங்கள் மற்றும் முத்துக்களால் ஆனது. தாரா என்றால் நட்சத்திரங்கள்.
தாரா என்றால் மங்கள மற்றும் சுக்லா என்ற இரண்டு தெய்வங்களையும் குறிக்கிறது. சுக்லா பின்னர் சுக்ரா என்று அறியப்பட்டது.
ஒருவேளை இந்த மங்கள மற்றும் சுக்ரா இரண்டு செவ்வாய் மற்றும் வெள்ளி கிரகங்களைக் குறிக்கலாம்.
ஒவ்வொரு கிரகமும் சில விலைமதிப்பற்ற கற்களை ஆளுகிறது. செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் உள்ள மாணிக்கத்தையும், வெள்ளி வெள்ளை நிறமான வைரத்தையும்ஆளுகிறது (மணி மாலா II.79).
இந்த இரண்டு கிரகங்களும் அவளுடைய
மூக்கை
அலங்கரிக்கின்றன என்றும் கூறலாம். அவளை வணங்குவது கிரகங்களின் தீய விளைவுகளிலிருந்து
பாதுகாக்கிறது என்பதையும் இது குறிக்கிறது.செவ்வை மற்றும் ,சுக்கிர க்ரஹங்களின் தோஷ
பாதிப்புகளிலிருந்து ஜீவராசிகளை இந்த ஆபரணங்கள் காக்கின்றன என்றும் கொள்ளலாம்
இத்துடன் இன்றைய பதிவில் இரண்டு
நாமாவளிகளின் வர்ணனையை நிறைவு செய்கிறேன் .நாளை இருபத்தொன்றாவது நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம்நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
வியாழன்,11, செப்டம்பர்,2025
No comments:
Post a Comment