ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமாவளி 15 மற்றும் 16
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,9, செப்டம்பர்,2025
அனைவருக்கும்
வணக்கம்.
இன்று நாம்
அம்பாளின் ஐந்தாவது
ஸ்லோகத்தையும் அதில் உள்ள இரண்டு நாமாவளிகளையும் பார்க்கப்போகின்றோம்.பதினைந்து மற்றும் பதினாறாவதான இரண்டு
திவ்ய நாமங்களைப் பார்ப்போம். இந்த நாமங்கள் அம்பிகையின் நெற்றியையும் அதில் அவள் அணிந்துள்ள குங்குமத் திலகத்தையும்
விவரிக்கின்றன.
5) அஷ்டமீ சந்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஸோபிதா |
முகசந்த்ர களங்காப ம்றுகனாபி விஸேஷகா || 5 ||
அஷ்டமீ |
வளர்பிறை அஷ்டமியில் |
சந்த்ர |
சந்திரனின் வடிவம் |
விப்ரஜா |
ப்ரஹாஸித்து ஒளிருதல் |
அலிக |
நெற்றியின் மேட்டுப்
பகுதி |
ஸோபிதா |
சோபித்து அழகுடன்
மிளிர்பவள் |
முக |
முகம் |
சந்த்ர |
சந்திரனைப் போன்ற |
களங்காப |
கறை, களங்கம் |
ம்ருகாநாபி |
கஸ்தூரியை திலகமாக |
விஸேஷகா |
சிறப்புடன்
த்ரித்திருப்பவள் |
வளர்பிறை
அஷ்டமி என்ற எட்டாம் நாள் சந்திரனைப் போன்ற ப்ரகாசிக்கும் நெற்றியை உடையவள்.முழு
நிலவில் காணப்படும் களங்கம் போல் தன் முகமாகிய சந்திரனில் கஸ்தூரித் திலகமுடையவள்
15. அஷ்டமீசந்த்ர விப்ராஜதலிகஸ்தல
ஶோபிதா
அஷ்டமி
சந்த்ர === அஷ்டமியில் வரும் பிறைச் சந்திரன் விப்ரஜாத ===உள்ளொளிரும்
அலிக === நெற்றி ஸ்தல === மேட்டுப் பகுதி
ஸோபிதா === அழகுடன் அமையப்பெற்றவள்
15. அஷ்டமி எனப்படும் வளர்பிறை எட்டாம் நாள் சந்திரனைப்போல் அம்பாளின் நெற்றி தோன்றும். எட்டாம் சந்திர நாளில் சந்திரன் இருபுறமும்
சீரான வளைவுகளுடன் அழகாகத் தோன்றும்.
சுக்ல பக்ஷ
அஷ்டமியில் சந்திரன் சரியான பாதியாக சீராகவும் அழகாகவும் விளங்கும்.
பெண்களின்
நெற்றியை சந்த்ர வதனா என்றும் பிறை நுதல் என்றும் விவரிப்போம்.பிறை என்பது நிறைவான முழுமையடையாத நிலாவாகும்.வளர்பிறை பதினாலு நாட்களிலும் பிறை நிலா ஒவ்வொரு மாறு பட்ட
நிலைகளில் கானப்படும். அவைகளைல் எட்டாம் நாளான அஷ்டமி அன்று காணப்படும் அர்த்த சந்திரன் சமமான
பாகங்களைக் கொண்டு அழகுடன் மிளிரும்.அதன் காரணமாகவே அம்பாளின் நெற்றி அஷ்டமி சந்திரனுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது
16. முகசந்த்ர கலங்காப ம்ருகநாபி விஶேஷகா
முக சந்த்ர === சந்திர வதனம்
கலங்காபி === சந்திரனில் தெறியும் கறை ம்ருகநாபி === கஸ்தூரித்திலகம்
விசேஷகா === தனிச்சிறப்புடன் கொண்டிருப்பவள்
16.அவள் கஸ்தூரி (நறுமணப் பசை கொண்ட கஸ்தூரிகா) திலகத்தை
(நெற்றியில் கும்குமத்திலகம், சந்தனம் அல்லது மென்மயிர்களால் செய்யப்பட்ட( Brush) ஒரு குறி, ஆபரணமாகவோ அல்லது ஒரு பிரிவினை வேறுபாடாகவோ)
அணிந்திருக்கிறாள், இது சந்திரனில் நாம் காணும் களங்கத்துடன் ஒப்பிடப்படுகிறது
அம்பாள் தனது அழகான பிறை நுதலில் கஸ்தூரித்திலம் அணிந்திருக்கின்றாள்.முஅத்தின் அழகு திலகம் அணிவதால் மேலும் அழகுறுகிறது. முழு நிலா நாளான பௌர்ண்மியில் சந்திரன் அழகுடனும் ஒளிமிகுந்தும் காணப்படும். அந்த சந்திரனின் முகத்தில் களங்கம் போன்று ஒரு கறை தெரியும்.இந்த களங்கம் சந்திரணை மறைக்கமல் அதன் அழகுக்கு அழகு கூட்டும்.
அவ்வாறே அம்பாளின் நெற்றியில் உள்ள கஸ்தூரித்திலகம் அம்பாளின் எழில் முக அழகை மேலும் கூட்டுகின்றது
ஸ்ரீ
சக்தி மஹிம்னாவில் (வசனம் 39), அவளுடைய முகம் தியானிக்கப்படுகிறது.
இத்துடன் இன்றைய பதிவில் இர்ண்டு நாமாவளிகளின் வர்ணனையை நிறைவு செய்கிறேன் .நாளை பதினேழாவது
நாமாவளியின் விளக்கமோடு சந்திப்போம்
இந்த பதிவுகள் அனைத்தையும் இதனுடனே ஒலி வடிவமாவும் தினம் மேலும் விளக்கமாகத் தந்து வருகிறேன். அவசியம் அதையும் கேட்டு அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகுங்கள்.
நன்றி. வணக்கம்.
ஓம் நமசிவாய:
ஸிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்,9, செப்டம்பர்,2025
No comments:
Post a Comment